text
stringlengths 11
513
|
|---|
நெருக்கடிநிலை ( Resilience and Emergency ) இதைப்போலவே மற்றொரு வார்த்தை உண்டு. அதுவே மீட்சித்திறன் எனப்படுவது , ஒரு புதிய சூழ்நிலைக்கு ஒத்துப்போகக் கூடிய ஆற்றல் மற்றும் இது இயல்பு நிலைக்கு திரும்புவதற்குரிய மிகப்பெரிய ஆற்றல் ஆகும். எடுத்துக்காட்டாக , நிலச்சரிவினால் பயமுறுத்தப்பட்ட வீட்டு உரிமையாளர் , பட்டணத்தில் இன்னுமொரு வீடு வைத்துள்ளார். அவரின் மீட்சித்திறன் மிக அதிகமாக இருந்தால் , அவர் எளிதில் வயப்படக்கூடியவராக இருந்தும் , நொந்து போக வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் , மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டு
|
வருவதால் , அதிகமான மக்கள் சீரழிவுகளினால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். மிக அதிகமான மக்கள் மிகுந்த நெரிசலுள்ள நகர்புறங்களிலும் , மிக ஏழ்மையான வாழ்க்கை முறையை மேற்கொண்டு வாழ்கின்றனர். சீரழிவு ஏற்படுவதற்காக மூன்று நிபந்தனைகள் உள்ளன. 1. இயல்பு நிலை தகர்க்கபடல் 2. தல ஆற்றலை மிஞ்சுதல் 3. மக்களை பாதித்தல் மக்கள் இன்றி , சீரழிவு ஏற்பட முடியாது. இது ஒரு இயல்பு நியதியாகவே இருக்கும். மனித சஞ்சாரமற்ற , பாலைவன மையப்பகுதியில் , புவியதிர்ச்சி ஏற்படின் அது ஒரு சீரழிவல்ல. ஒரு புவியியல் நிகழ்வு மட்டுமே. நெருக்கடி நிலை
|
சீரழிவுகள் நெருக்கடி நிலைக்கு வழிவகுக்கின்றது. “ மறைமுக ஆட்சிமுறையே ” நெருக்கடி நிலைக்கு வரையறையாகும். ஒரு சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர , சீரழிவைத் தடுக்க சிக்கல்களுக்கு தீர்வுகாண பொதுவானச் செயல்முறைகள் நிறுத்தப்பட்டு , மற்ற நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகின்றன. நெருக்கடி நிலை எச்சரிக்கையாக அறிவிக்கப்படுகின்றது. நெருக்கடி நிலையின் மற்றொரு வரையறை என்னவெனில் , “ விளைவுகளை உடனடியாகக் ” குறைத்து , சரி செய்யக் கூடிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டிய திடீர் மற்றும் பொதுவான எதிர்பாராத நிகழ்ச்சி , ஆனால் ( அ )
|
எல்லா நெருக்கடி மற்றும் ( ஆ ) அவை எதிர்பாரதவை அல்ல என்பதை உறுதிபடுத்த வழிகள் உள்ளன. சீரழிவு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் ( ( The Disaster - Development Continuum - DDC ) ‘ சீரழிவு மேம்பாட்டு நிகழ்ச்சி ’ நிகழ்ந்து வருகின்றது. சீரழிவுகள் , முன்னேற்றத்தைத் தகர்த்து வரும்பொழுது கேடு விளைவிக்கும் வளையத்தை விட்டு வெளிவர உதவுவது முன்னேற்றமே. ஆகையால் இது சீரழிவு மேம்பாட்டு நிகழ்ச்சி என அழைக்கப்படும். எந்தவொரு ஆராய்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது , சீரழிவு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் DDC ஆகும். மற்றும் எந்த வகையான சீரழிவையும்
|
சரிசெய்ய சீரழிவு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் ஒரு பகுதியை முன்னேற்றத்திற்கு கொண்டு வரலாம். சீரழிவு மேலாண்மை ( Disaster Management ) சீரழிவு மேலாண்மையை இருவகையாக பிரிப்பது நல்லது. ‘ சீரழிவு தடுப்பு ’ மற்றும் ‘ நெருக்கடி நிலை மேலாண்மை ’ வரையரைப்படி சீரழிவுகளை மேலாண்மை செய்வது முடியாத ஒன்று. சீரழிவை தடுத்து , நெருக்கடியை மேலாண்மை செய்யலாம். ஆயத்தப் பணிகளிலிருந்து மறு சீரமைப்பு வரை எல்லா செயல்பாடுகளிலும் நெருக்கடி நிலை மேலாண்மை பெரும்பங்கு வகிக்கின்றது. இயல்பு நிலை திரும்புதல் என்பது , ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து
|
நிர்மாணிக்கப்படல் வரையிலாகும். அபாயக் குறைப்பு என்பது , நிர்மாணித்தல் முதல் ஆயத்தம் வரையாகும். சுழற்சியின் வலது புறத்தில் எல்லா உதவி நிவாரண பணிகளும் , சுழற்சியின் இடதுபுறத்தில் எல்லா முன்னேற்ற பணிகளும் நடைபெறுகின்றன. தணித்தல் மற்றும் தவிர்த்தல் ( Mitigation and Prevention ) தணித்தலும் , தவிர்த்தலும் ஒரேபொருள் குறிக்கும் வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில தனிச் சிறப்புப் பெற்ற நிபுணர்கள் தணித்தல் என்ற சொல்லை விடுத்து தவிர்த்தல் என்ற சொல்லை பயன்படுத்துவதுவதையே விரும்புகின்றனர். தணித்தல் என்பது சீரழிவினால்
|
விளையும் மனித இழப்புகள் , பொருட் சேதங்கள் போன்ற விபரீதங்கள் குறைப்பது எனப்பொருள்படும். தவிர்த்தல் என்பது , மனித செயல்கள் அல்லது இயற்கை நடப்புகள் யாவும் சீரழிவில் அல்லது நெருக்கடியில் முடிவடைவதில்லை என உறுதிப்படுத்துவது எனப் பொருள்படும். எடுத்துக்காட்டாக , சீர்குலைவுகள் , நொந்து போதல் போன்ற விபரீதமானத் தீங்குகள் நடைபெறாவண்ணம் தடுக்க - விலக்க - குறைக்க பிரதானமான தவிர்த்தல் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக , தவிர்த்தலில் முதலாவதாக செய்யப்படவேண்டியது , மக்கள் நெருக்கத்தை தவிர்ப்பது , மரம் வெட்டுவதை தடுப்பது ,
|
மற்றும் சேவைகள் செய்வது : ஆரோக்கியமான மக்கள் ஆரோக்கியமான சூழ்நிலையில் அதிகமான சீர்குலைவுகளுக்கு மிக மிகக் குறைவான அளவிலேயே வயப்படுத்தப்படுகின்றனர். சின்னம்மைக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி கொடுப்பது , மக்களை நோய்க் கிருமிகள் எளிதில் வயப்படுத்தாமல் தடுத்து , அந்தநோயை சிறிது சிறிதாக முற்றிலுமாக அழித்துவிடுதல் ஆகும். இரண்டாவதாக , தவிர்த்தல் என்பது , சரியான விதத்தில் விபத்தினை கண்டுபிடித்து , அதன் வீரியத்தைக் குறைத்தல் , அதாவது , மக்களுக்கு தகுந்த இடமாற்றம் செய்து கொடுப்பதில் மிகக் கவனம் செலுத்துதல் , நோய்கள்
|
வராமல் தடுக்கும் நடவடிக்கைகளைச் செய்தல் , உணவு , சுத்தமான நீர் , சுகாதாரம் , அகதிகளுக்கு நலச்சேவை ஆகியவைகளை அளிப்பதற்கு எப்போதும் ஆயத்தமாயிருத்தல் , நெருக்கடி நிலையைச் சமாளிக்க ஆரோக்கியமான சூழ்நிலையிலுள்ள ஆரோக்கியமான மக்கள் மிக அதிக தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். முன்னேற்பாடும் , பிரதிச் செயலும் ( Preparedness and Response ) முன்னேற்பாடு என்பது நற்பயனளிக்கும் உதவிகளைச் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. இது பாதுகாப்பான சுற்றுச் சூழலை வலியுறுத்துகிறது. ஒருவருக்கோ அல்லது பலருக்கோ செய்யக்கூடிய
|
உதவிகள் அபாயகரமாக அமைதல் கூடாது. “ நிலைமையை மோசமாக்காதே ” என்பதே சீரழிவுகளுக்கான முன்னேற்பாட்டின் வழி காட்டும் கொள்கையாக அமைதல் வேண்டும். மறுபுறத்தில் நெருக்கடி நிலையை சமாளிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது பிரதி செயலாகும். “ மனிதாபிமான உதவிகள் ” மற்றும் ‘ உதவி ’ பரவலாகி பயன்படுத்தப்படும் மற்ற பதங்கள் ஆகும். ஆனால் அவைகளில் மிகச் சிறிய அளவே கருத்து வேறுபாடு கொண்டவை , பிரதிச் செயல் என்பது , வழக்கமாக உடனடி மற்றும் குறுகிய காலத் தேவைகளை கொண்ட உதவி எனப்படும். சில குறிப்பிட்ட வகை பாதுகாப்பு மற்றும்
|
முன்னேற்றம் , மனித நேய விதிகள் மற்றும் நோக்கங்களைக் கையாளல் ஆகும். மறுசீரமைப்பு மற்றும் நிர்மாணித்தல் ( Rehabilitation and Reconstruction ) அடிப்படைப் பணிகளை தக்கவைத்தலே மறுச்சீரமைப்பு எனப்படும் , நிர்மாணித்தல் என்பது முழுமையான சீர்திருத்தம் ( Resumption ) செய்யப்படுவதாகும் , சீரழிவு மேலாண்மையில் குறிப்பாக , எதுவுமே செய்ய இயலாத மக்களுக்கு இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தாகும். சீரழிவு முன்னறிவித்தல் மற்றும் எச்சரிக்கை ( Disaster Prediction and Warning ) வானிலை மற்றும் காலநிலை போன்ற இயற்கை மாற்றங்களை
|
முன்னறிவித்தலும் மற்றும் குறிப்பிட்ட அளவிற்கு சீர்குலைவுகள் மற்றும் சீரழிவுகளை முன்னறிவித்தல் ஓரளவிற்கு சாத்தியமாக இருந்தாலும் , புவியின் மேற்பரப்பில் விட்டு விட்டு தொடர்ச்சியாக முன்னறிவிப்பது சிறிது கடினமானச் செயலாகும். ஆகையால் சீரழிவுகளால் நொந்து போன மக்கள் மற்றும் சமுதாயங்கள் உதவப்படல் வேண்டும். இதற்காக , நாம் செய்ய வேண்டிய முதலாவது உதவியாவது எச்சரிக்கை ஆகும். எச்சரிக்கை முற்றிலுமாக பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கியிருத்தல் அவசியம் சீர் குலைவுகள் நிகழக்கூடிய இடங்களை அடையாளம் காண். தோராயமாக ,
|
கொடுக்கப்பட்டுள்ள அளவின்படி அந்நிகழ்ச்சி நடைபெறும் என உறுதிபடுத்தல். தணி , எதிர்பார் , ஆயத்தமாக்கு. ஏற்கனவே நடைபெற்றுள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனி. நிகழ்ச்சியை முன்னறிவி. பொதுமக்களை எச்சரி. சீர்குலைவு ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சியினால் பெற்றுக்கொண்ட அறிவிற்கும் , நெருக்கடி நிலை திட்டமிடுவோர் அறிவிற்கும் , மற்றும் பொதுமக்கள் பெற்றுக் கொண்ட அறிவிற்கும் இடைவெளி காணப்படுகிறது. ஏன் ? ஏனெனில் பொது மக்கள் அறிவியல் ரீதியாக மிகப் பெரிய அளவில் கல்வியறிவில்லாதவர்களாக இருக்கின்றனர். பொது மக்கள் புரிந்து கொள்ளும்
|
வகையில் ஒரு மொழியில் தெரிவிப்பது கடினம். பொருளாதார வெளியீடுகள் ( எரிமலை வெடிக்கும் என எதிர்பாக்கும் நேரத்தில் பயண வசதி இல்லாமை ) மற்றும் பொறுப்புடமை. விளைவுகளின் ( இழப்புகளின் ) மதிப்பீடு ( Risk Assesement ) சீரழிவுகளில் மனிதர்களின் பொறுப்புகளைத் தீர்மானிக்கும் போது , நடந்த அழிவுகளை மதிப்பீடு செய்தல் அவசியம். மற்றும் மதிப்பிட்ட பின் , அதிலிருந்து அறிந்து கொண்டவைகளைக் கொண்டு சீரழிவுகளை தடுப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிதல் வேண்டும். ஏற்கெனவே நாம் பார்த்திருப்பது போல் , மக்கள் அபாயத்தை எப்படி எதிர்கொள்ள
|
வேண்டுமென்ற திட்டத்தோடிருந்தால் பாதி அபாயத்தை தவிர்க்கலாம் ஆபத்து ஏற்பட்ட பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் முன் எச்சரிக்கையோடிருந்தால் மற்ற பாதி இழப்புகளையும் தவிர்த்துவிட முடியும். மறு சீரமைப்பு மற்றும் நிர்மாணித்தல் பணிகள் , இழப்பு மதிப்பிடல் சரி செய்ய பெரிதும் உதவிடும். பின்வரும் ஒரு சில தத்துவங்களைக் கருத்தில் கொண்டு இழப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆபத்தை நிர்மானித்தல் = முன் நடந்த நிகழ்ச்சி ஏற்படக் கூடிய விளைவுகள் ஆபத்து = சீர்குலைவு + வெளி விளைவுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆபத்து மதிப்பீடு சமுதாயக்
|
கண்ணோட்டத்தில் இழப்பு மதிப்பீட்டிற்கான பிரச்சனை மற்றும் வாய்ப்புகள் சீர்குலைவில் மனிதரின் பங்கு ( Human Response to Hazards ) நெருக்கடி நிலை மேலாண்மை ( Emergency Management ) நெருக்கடி நிலை மேலாண்மை , சீர்குலைவுடன் நான்கு நிலைகளில் செயல்படுகிறது. தணித்தல் சீர்குலைவின் இழப்பீடுகளை குறைக்க நேர்தல் ஆயத்தப்படல் சீரழிவுக்கு முன் எச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் பிரதி விளைவு பழைய நிலை எய்துதல் சீரழிவுக்கு பின் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் இழப்பீடுகளை சரி செய்ய முற்படும் போது , தணித்தலுக்கு நேராய்
|
நடத்தும் , எனவே இந்நிகழ்ச்சி ஒரு சுழற்சியை உருவாக்குகின்றது. ஒரு சீரழிவு ஏற்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் , ஜோஸ் ரெஸ்டிபோ என்னும் ஒரு புவி அமைப்பியல் மாணவர் ஆர்மிரோ என்ற இடத்திற்கு ஒரு களப்பணிக்காக வந்திருந்தார். அவர் குழிப்பந்தாட்டம் விளையாடி விட்டு இரவு சுமார் 10.50 மணியளவில் உணவு விடுதிக்கு செல்லும் பொழுது லாகார் வந்தது. டாக்டர் வாய்ட் , நடந்த நிகழ்ச்சிகளை மீண்டும் நினைவு படுத்தி பதிவு செய்தவை பின்வருமாறு : ( படம் 9.1 அ ) எரிமலை வெடிப்பின் ஒரு சுருக்கம் நாங்கள் உணவு விடுதியில் இருந்தபோது சாம்பல்
|
கொட்டிக் கொண்டிருந்தது. எவ்வித மணி ஒலியும் கேட்கவில்லை. வானொலியைத் திருப்பினோம். நகரத்தந்தை ( மேயர் ) உரையாற்றிக் கொண்டிருந்தார். சாம்பல் மழையே கொட்டுகிறது. எனவே வீடுகளில் கவலைப்படாமல் அமைதியாயிருக்கவும் என்றும் நிவேடாவிலிருந்து எந்த ஒரு செய்தியும் பெறவில்லை என்றும் கூறினார். பக்கத்தில் ஒரு சிலதல வானொலி நிலையம் இருந்தது. நாங்கள் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தோம். திடீரென அதுவும் நின்று விட்டது. பதினைந்து நொடிகளுக்குப் பின்னர் மின்சக்தி துண்டிக்கப்பட்டு விட்டது. நாங்கள் கீழே , ஆகாயத்தில் தடுமாறி விழுவது போன்ற
|
சத்தங்களைக் கேட்க ஆரம்பித்தோம். இதைத் தவிர மணி ஒலியையோ , வேறு சத்தத்தையோ கேட்கவில்லை. சுமார் 6 மணியளவில் ஆர்மிரோவின் பாதிரியார் ஒலிப்பெருக்கியில் அதே செய்தியை மீண்டும் கூறினார். அதாவது ஆர்மிரோவை விட்டு வெளியேற அவசியமில்லை என்பதே... நாங்கள் வெளியே வந்த போது மக்கள் கீழே ஒடிக்கொண்டும் , கார்கள் தள்ளாடிக் கொண்டுமிருந்தன. மேலும் அங்கு இருள் கவ்விக் கொண்டிருந்தது. கார்களிலிருந்து வந்த ஒளியிலே வந்த வெளிச்சம் மாத்திரமே கிடைத்தது. நாங்கள் இங்குமங்கும் ஒடிக் கொண்டிருந்தோம். ஆற்று வெள்ளம் தெருக்களில் புரண்டோடியது.
|
அப்போது நாங்கள் ஒரு மூலைக்கு ஓட நேர்ந்தது. பின்னர் நாங்கள் உணவு விடுதியை நோக்கித் திரும்பி சுற்றி , சுற்றி ஓடி வந்து கத்தினோம். ஏனெனில் , வெள்ளம் ஏற்கெனவே படுக்கைகளையெல்லாம் இழுத்துச் சென்றும் , கார்களை தலைகீழாய் கவிழ்த்தும் , மக்களை வெகு தொலைவிற்கு அடித்துச் சென்றும் கொண்டிருந்தது. நாங்கள் திரும்ப உணவு விடுதிக்குச் சென்றோம். அது ஒரு மூன்று அடுக்குமாடி கட்டிடமாக சிமென்டினால் கட்டப்பட்டு மிகவும் உறுதியாக நின்றது. திடீரென்று , அபாயகரமான பேரொலியைக் கேட்டேன். சத்தம் வந்த திசையில் பார்த்தபோது , பாறையைப் போன்று
|
வந்த பாறைக்குழம்பைப் பார்த்தேன். கவ்வின இருளிலிருந்து உணவு விடுதியை நோக்கி வந்தது மண் , பாறைகளில் இவைகள் மோதின. அது விடுதியின் பின்புறத்தை இடித்து சுவர்களை நொறுக்கியது. பின்னர் மேற்கூரை உடைந்து முழு கட்டிடமும் துண்டு துண்டாக உடைந்து நொறுங்கியது. கட்டிடம் சிமென்டினால் கட்டப்பட்டிருந்த படியால் அது நிலைத்து நிற்குமென எண்ணினேன். ஆனால் பெரிய பாறையோடு கூடிய மண்ணும் வெகு வீரியத்துடன் எழுந்து கொண்டிருந்தது. நகரங்களையும் , மற்றெல்லாவற்றையும் தகர்த்துக் கொண்டே வந்தது. பின்னர் விடுதிக்கு அருகில் இருந்த பல்கலை கழக
|
பேருந்து சேற்றலைகளால் உயர தூக்கி எரியப்பட்டு , பற்றி எரிந்து வெடித்தது. ஆகையால் நான் முகத்தை மூடிக்கொண்டு , இங்கு தான் நான் கொடூரமாகி மரிக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு சிறு பெண்ணின் தலை மண்ணுக்குள் புதைந்திருந்தது. அருகில் இருந்த ஒரு வயதான பெண். சிறு பெண் காலை அசைப்பதை பார்த்து , என்னிடம் அது பற்றி கூறினார்கள். நான் சிறுமியை நோக்கி சென்றேன். என் கால் சேற்றினில் மூழ்கியது. சேறு மிகச் சூடாக இருந்தது. ஆனால் நெருப்பு இல்லை. நான் அச்சிறுமியை வெளியே எடுக்க முயச்சித்தேன். ஆனால் அவள் முடி
|
மாட்டிக் கொண்டிருப்பதை பார்த்தபோது , உலகிலேயே இதுதான் மிகக் கொடூரமான செயலாக எனக்குத் தென்பட்டது. பிரீட்டாவின் புவியதிர்ச்சியினால் சுமார் 1500 தாக்கப்பட்ட நிலச்சரிவுகள் குறிக்கப்பட்டு வரையப்பட்டுள்ளன. மற்றும் 4000 சரிவுகள் வரை லோமா பிரீட்டா நில அதிர்ச்சியினால் நகர்ந்திருக்கக்கூடும். நார்த் பிரிட்ஜ் புவியதிர்ச்சிகளில் 11,000 க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக , இரண்டு நில அதிர்வுகளுமே , இயற்கை நிலைக்கு மாறாக தரைப்பகுதி வறண்டிருந்த நேரத்தில் நடந்தன. இந்நிலச்சரிவுகளுக்கான பரவல்கள்
|
மற்றும்காரணிகளைக் குறித்த விரிவான ஆராய்ச்சிகள் கீழ்க்கண்டவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். 1. நடுக்கத்தின் வீரியம் 2. சரிவின் சாய்வு 3. புவி அமைப்பியலில் காணப்படும் வலிமை மற்றும் தன்மை 4. நீர் அளவு ( மழை மற்றும் பருவத்திற்கேற்ப மாறுபடும் ) 5. தற்போதுள்ள நிலச்சரிவு பரப்புகள் மற்றும் 6. தாவர அடர்வு நடுக்க வீரியம் மற்றும் கட்டிட சேதங்கள். எவ்வாறு நிலநடுக்க வீரியம் , பல்வேறு தொடர்புடையதாக உள்ளது ? வகையான கட்டிட அமைப்புகளுடன் இக்கட்டிடச் சேதங்கள் வெவ்வேறு வகையான கட்டிடங்களுக்கு வெவ்வேறு வகையாக இருக்கின்றன. நார்த்
|
பிரிட்ஜ் புவியதிர்ச்சிக்குப் பின்னர் சுப்பீரியர் அடுக்குமாடிகள் மிகுந்த சேதமடைந்தன. எப்படியிருப்பினும் , அடுக்குமாடிக்கு பின்புறம் தனித்தனியாக உள்ள தனிக்குடும்ப வீடுகள் சிறிதளவு சேதமே அடைந்தது. இந்த மாடி வீடுகள் , தற்போதைய கட்டிட விதிமுறைகளுக்குட்பட்டு கட்டப்பட்டவை. கட்டிடங்களுக்கு ஏற்படும் சேதங்களை இரண்டு வெவ்வேறான அளவுடைய சேதங்களாக பிரித்துக் காட்டலாம். 1. ஒரு குறிப்பிட்ட வகையான கட்டிடங்களின் விகித அளவு , அவற்றின் உபயோகத்தின்படி வரையறுக்கப்படுகின்றன. கட்டுமானப்பொருட்கள் உயரம் , காலம் , தல அரசாங்க கட்டிட
|
ஆய்வாளரின் “ சிவப்பு லேபல் ” அதாவது “ மனித குடியிருப்புக்கு உகந்ததல்ல ” அதாவது “ குடியிருக்க இயலாது ” 2. ஒவ்வொரு கட்டிட வகைக்கும் , சராசரி பண இழப்பு , திருப்பி செலுத்தும் மதிப்பின் சதவீதத்தில் வெளியிடப்படுகிறது. பல்வேறு வகையான கட்டிடங்களுக்காக , குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் குறிப்பிட்ட சிவப்பு லேபலுடன் உள்ளவைகளுக்கு , புள்ளி விவரங்களைத் தொகுப்பது மிக எளிதாக இருக்கிறது. துருக்கி புவியதிர்ச்சி 1999 1989 -இல் கலிபோர்னியாவின் லோமா பிரீட்டாவிலும் ( Loma Prieta ) அல்லது 1994 ல் நார்த்த பிரிட்ஜ்லிலும்
|
நடந்த புவி அதிச்சிகளை விட. 1999 இல் துருக்கியில் நடந்த புவி அதிர்ச்சியின் விளைவுகள் மிக , மிக மோசமான சேதங்கள் கொண்டதாயிருந்தது. இப்புவி அதிர்ச்சிகள் கவனிக்கப்படாமல் இருக்ககூடாது என்பதற்காக , உள்ளூர் அரசாங்கத்திற்கு பல படிப்பினைகளை உணர்த்துகிறது. பாடம் 2 துருக்கி புவியதிர்ச்சியின் முக்கிய பாடங்கள் பாடம் 1 பாடம் 3 பாடம் 4 மத்திய அரசு வழிகாட்டும் தணித்தல் முறைகளை வகுக்கலாம். ஆனால் கட்டிட வரையரைகள் , புதிய கட்டிடங்களின் நிலப்பயன்பாட்டு திட்டம் முதலியன உள்ளூர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். மற்ற சேதங்களைப் பொறுத்து
|
மனித தேவைக்குத் தகுந்த சேவைகள் அளிக்கப்படுகின்றன. சீரழிவுக்களுக்கு உடனடியாக , உள்ளூர் அரசாங்க அலுவலர்களே செயல்பட வேண்டும். சமூக நல நிறுவனங்களோ அல்லது மத்திய அரசாங்கமோ அல்ல. உள்ளூர் அரசாங்கம் சீரழிவைக் குறித்து , உடனுக்குடன் , வாரங்கள் , மாதங்களுக்கான புள்ளி விவரங்கள் தொகுத்து விநியோகிப்பதற்கு திட்டமிடல் அவசியம். 1999 ஆம் ஆண்டு துருக்கி புவியதிர்ச்சி பாடங்களிலிருந்து பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளன. அவையாவன தல உள்ளூர் அரசாங்க தொழிலாளர்களுக்கு பயிற்சி மிக அவசியமானது. உடனே உதவி செய்ய வேண்டியது மற்றும் இயல்பு
|
நிலைக்கு கொண்டு வர தலைமைத்துவம் ஏற்று வழிநடத்த வேண்டியது தல அரசாங்கமே. தல ( உள்ளூர் ) அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பும் , மற்றும் வட்டார தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்குத் தேவையான தலைமைத்துவ தகுதியும் சமீபத்தில் அதாவது , செப்டம்பர் 11. 2001 இல் நடைபெற்ற சோககரமான நிகழ்ச்சி தெளிவுறுத்துவது போல் , புவி அதிச்சியைப் பொறுத்தமட்டில் சிறப்புள்ளதாக இல்லை. சீரழிவு மற்றும் தொற்றுநோய் ( Disaster and Health Epidemic ) பெரிய இயற்கை சீரழிவுகளுக்குப் பின் விளைவாக உடல் நல சம்பந்த கொள்ளை நோய்கள் அரிதானவைகளாகும். ஆனால் சில
|
சீரழிவுகள் மிகப்பெரிய அளவில் நடைபெறும் போது மிக மிக அதிக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கை இடபெயர்வுகள் ஏற்பட்டு , வியாதிகள் பரவுவதற்கு ஏதுவான சூழ்நிலைகள் உருவாகும். சுத்தமான நன்னீர் இல்லாமை மற்றும் பொது நலச் சுகாதாரத் திட்டங்கள் ஸ்தம்பிப்பு போன்றவை உடல்நலக் கோளாறுகளுக்கான காலரா போன்றவைகளை அதிகப்படுத்தபவையாக ( ஊக்குவிப்பவையாக ) கூடியவனவாக உள்ளன. உண்மையான சீரழிவுகளை விட , இவ்வகையான தொற்று நோய்களே பல நேரங்களில் மிகக் கொடூரமானவையாக இருக்கக் கூடும். இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் சீரழிவுகளினால் பரவும்
|
வியாதிகளுக்கான முக்கிய காரணங்கள். மக்கள்தொகை பற்றி இயக்கங்கள் , மோசமான சுகாதாரம் , தூய்மையற்ற நீர் மற்றும் பொது சுகாதாரத் திட்டங்கள் தடைபடுதல் முதலியவனவாகும். இடம் பெயர்ந்த மக்கள் குறுகிய இடங்களில் தங்குவதால் காலரா , மலேரியா மற்றும் டிங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் இன்னும் அதிகமாக பரவ காரணமாய் அமைகின்றன. ஏற்கெனவே காலரா தொற்று நோய் தாக்கியிருந்த மத்திய அமெரிக்காவில் 1998 இல் சூறாவளி தாக்கியது. மருத்துவ கவனிப்பு தேவைப்பட்ட விபத்துக்குள்ளான மக்களின் எண்ணிக்கை மற்றொரு பிரச்சரனையாக இருந்தது. அகில உலக சுகாதார
|
நிறுவனத்தின் கருத்துப்படி இறந்தவர்களின் சடலம். தொற்று நோய்கள் பரவுவதில் ஒரு முக்கியக் காரணியாக இல்லை. காலரா ஒரு இயற்கை சீரழிவைத் தொடர்ந்து காலரா பரவுவது ஒரு அபாயகரமான செயல் நீடித்த வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் காலரா , கழிவு நீரால் உண்டாகும் மிக மோசமான தொற்று நோய். இது உடலில் உள்ள நீரைக் குறைத்து சில சமயங்களில் இறப்பை கூட உண்டாக்கும். எப்படியிருப்பினும் , இந்த நோய்கிருமிகளால் பாதிக்கபட்டவர்கள் சுகவீனப்படுவது இல்லை. 90 சதவீதத்தினர் சிறிது அல்லது சற்று அதிகமாக சுகவீனமாகின்றனர் அழுகின உணவுப்
|
பண்டங்கள் மற்றும் நீர் இவற்றால் காலரா பரவுகின்றது. சீரழிவுக்குப்பின் வரும் இதுபோன்ற பிரச்சனைகள் தூய்மையற்ற நீரினால் உண்டவதாகும். சீரழிவு ஏற்படும் நேரங்களில் திடீரெனத் தோன்றும் பூச்சிகள் இறந்த நிலையில் இருக்கின்றன.ஏனெனில் மருத்துவ கவனிப்புக்கு ஏற்ற வசதிகள் இல்லாமை அல்லது சரியான நேரத்தில் மருத்துவ வசதி பெறாமை , காலரா நோய் தாக்கும் நேரங்களில் சமுதாயம் ஆயத்தமாய் இல்லாத நிலை போன்றவைகளால் கடுமையாக நோய்வாய்ப்பட்ட 50 சதவீத மக்கள் இறக்க நேரிடுகின்றது. அதிக தாது உப்புக் கரைசல் , வாய் வழியாக கொடுப்பதன் மூலமும் காலரா
|
நோய்க்கு தீவிர சிகிச்சை அளிக்க முடியும் கழிவு நீரை ஒழுங்கான சுகாதார முறைகளில் அகற்றவும் , நல்ல ஆரோக்யமான உணவு மற்றும் போதுமான குடிநீர் அளிப்பு போன்றவையும் காலரா வியாதி பரவும் பொழுது கண்டிப்பாக கடைபிடிக்கக் வேண்டியவைகளாகும். உணவை நன்றாக வேகவைத்து சமைப்பது அவசியம் மற்றும் சமைக்கப்படாத உணவுப் பண்டங்களை ஈக்கள் மொய்க்கவோ அல்லது அழுக்கான இடங்களில் வைத்து தூய்மைக் கேடு அடையவோ விடக்கூடாது. சீரழிவுக்கான அவசரத்தீர்வு ( Emergency Response to Disasters ) இயற்கைச் சீரழிவுகள் ஏற்படும் பொழுதும் , நெருக்கடி நேரங்களில்
|
பன்னாட்டு உதவிகள் பெற்று ஒன்றிணைந்து செயல்படவும் , அகில உலக சுகாதார இயக்கம் ஒரு அவசரக்கால மற்றும் மனித நேய செயல் திட்டத்தைக் கொண்டுள்ளது. 1993 இல் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் , மற்ற அகில உலக நிறுவனங்களுடனும் தேசிய சுகாதார சேவை நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுகிறது. சீரழிவு ஏற்பட்டு 48 மணி நேரங்களுக்குள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு துரிதமான மதிப்பீடு செய்வதே இதன் முதல் வேலையாகும். அதன்பிறகு , தொற்று நோய் பரவாமல் தடுக்க ஒரு எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் , பரவக்கூடிய வியாதிகள் , பரவாமல் தடுக்க வேண்டிய
|
நடவடிக்கைகள் சீரழிவினால் தாக்கப்பட்ட முக்கிய மருத்துவமனைகளையும் , ஆரம்ப நல மருத்துவமனைகளையும் சரி செய்யவேண்டும். நீர் , சுகாதாரம் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து சர்வேதச அளவில் உதவிச் செய்து வரும் நிறுவனங்களையும் மற்றும் அமைப்புகளையும் நாடலாம். ஆனால் சுகாதார அமைப்பு , மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்வதைத் தவிர்க்க முயற்சி செய்கின்றது. காரணம் உலக அரசு சாரா அமைப்புகள் பாதிக்கப்பட்டோரின் தேவைகளை ஏற்கனவே பூர்த்தி செய்திருப்பர். அல்லது வெளிநாட்டு உதவியை நம்பி
|
இருப்பதை இது விரும்பவில்லை. மேலும் நெருக்கடி நிலைமையை சமாளிக்க போதுமான வசதிகளை உலக சுகாதார அமைப்பே கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட நாட்டில் , அவசரக் கால நடவடிக்கைகளை மேற்கொண்டு போதுமான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களை திறந்து வைப்பது ஒரு முக்கியமான பணியாக உலக சுகாதார அமைப்புக்கு இருக்கின்றது. வெப்பமயதால் ( Global Warming ) அறிவியல் செயல்பாடுகளால் நாளுக்கு நாள் உலகம் வெப்பமாகிக் கொண்டு வருகின்றது. இதனால் காலநிலை மாற்றமடைகிறது. ஏன் புவி வேகமாக வெப்பமடைகிறது ? நாம் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளோம் ?
|
எரிபொருளை வெகுவாக எரிப்பதனால் புவி சிறிதுசிறிதாக பாதிப்படைகிறது. மனிதச் செயல்பாடுகள் காரணமாக நகர வளர்ச்சி நிலப்பயன்பாடு மற்றும் கழிவுகள் வெளியேற்றம் இதனால் இயற்கை பல மாறுதலுக்கு உட்படுகிறது. புவியின் சூழ் தொகுதியில்தான் மனிதன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். சூழ்த் தொகுதியை தன் தேவைக்காக மாற்றியமைக்கின்றான். இதன் விளைவு அதிக மக்கள் வளர்ச்சி , தொழில் நுட்பம் மற்றும் பயன்பாடு மனிதன் நேரிடையாக பாதிப்புகளை ஏற்படுத்துவதால் புவி மாசடைதல் , வளிமண்டல மாற்றங்களினால் பயமுறுத்தும் கடல்மட்ட உயர்வு ஏற்படுகின்றது. இதனால்
|
சூழ்த்தொகுதி பெரிதும் பாதிக்கப்படுகின்றது. புவியின் சராசரி வெப்பத்தைவிட 20 ஆம் நூற்றாண்டில் 0.6 ° C உயர்ந்துள்ளது. புவியின் சராசரி வெப்பம் ( காற்றின் வெப்பம் , நிலம் மற்றும் கடலின் வெப்பம் ) 1861 முதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இது 0.6 + 0.2 ° C ஆக இருந்தது. இது 0.15 ° C யை விட அதிகம் என 1994 வரை மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுக்காண்டு வெப்பம் உயர்ந்துக் கொண்டே வந்துள்ளது. இதனால் நகர வெப்பம் , வெப்பத்தீவுகள் என்பவை உருவாகின்றன , எடுத்துக்காட்டாக , இருபதாம்
|
நூற்றாண்டில் இரண்டு காலங்களில் ஏற்பட்ட வெப்ப உயர்வினை , 1910 முதல் 1945 வரை , மற்றும் 1976 முதல் 2000 ஆண்டு வரை எவ்வாறிருந்தன எனக் கூறலாம். புவியில் 1861 -க்கு பிறகு , கடந்த பத்தாண்டுகளில் ( 1990 -ல் ) தான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதுடன் 1998 இல் தான்அதிக வெப்பம் கொண்ட ஆண்டாகத் தெரிய வந்துள்ளது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு , இருபதாம் நூற்றாண்டில் தான் வட அயன மண்டலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல் வடஅயன மண்டலத்தின் 1990 மற்றும் 1998 என்பவை அதிக வெப்பமான ஆண்டுகளாக
|
அறிவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் , நமக்கு கிடைத்த புள்ளிவிவரங்களைக் கொண்டு 1000 ஆண்டுகளில் 1861 -ம் ஆண்டு மட்டும் தென் அயன மண்டலத்தில் ஏற்பட்டுள்ளது. 1950 முதல் 1993 வரையில் சராசரியாக இரவு நேர காற்றின் வெப்பம் 0.2 ° C ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் இரண்டு மடங்காகி பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 0.1 ° C ( கடந்த பத்தாண்டுகளில் ) என்பதாகும். பனி காலங்களில் மத்திய மற்றும் உயர் அட்ச ரேகை பகுதி வரை நீடிக்கிறது. கடல்பரப்பு வெப்பமடைவதால் அந்த கால அளவு முழுவதும் நிலத்தின் வெப்பமும் காற்றின் வெப்பமும் சராசரி அளவாக உள்ளது.
|
வெப்பநிலை கடந்த நான்கு பத்தாண்டுகளில் வளி மண்டலத்தின் 8 கி.மீ. வரை உயருகின்றது. பிந்திய 1950 ஆம் வருடங்களிலிருந்து ( வானிலை பலூன் மூலம் உற்றுநோக்கும் போது ) உலக வெப்பநிலை குறைந்த பட்ச அளவான 8 கி.மீ. உயரம் வரையான வளிமண்டலத்தில் உயருகின்றது மற்றும் நிலத்தின் வெப்பநிலை கடந்த பத்தாண்டில் 0.1 ° C ஆக உள்ளது. 1979 -இன் செயற்கைகோள் புள்ளிவிவர அளவீடுகள் மூலம் புவியின் சராசரி வெப்பம் ஏறக்குறைய வளிமண்டலத்தில் 8 கி.மீ உயரம் வரை மாற்றமடைந்து + 0.05 ° + 0.10 ° C கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ளது. ஆனால் புவியின் சராசரி
|
வெப்பம் உயர்ந்து + 0.15 ° + 0.05 ° C ஆக உள்ளது. இந்த வேறுபாடுகள் புள்ளிவிவரப்படி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வேறுபாடு , வெப்பமண்டலம் மற்றும் மித வெப்பமண்டல பகுதியில் மட்டும் காணப்படுகிறது. வளிமண்டலத்தில் குறைந்தபட்ச அளவாக 8 கி.மீ வரை புவியின் தாக்கத்தால் இடையடுக்கில் உயர்வு ஓசோன் படலம் மற்றும் எலிநீன்யோ செயல்பாடுகள் ஏற்படுகின்றன. ( 20 ஆண்டுகளில் ) வெப்பத்தின் போக்கு மாறுபடுகின்றது. மேலும் பரப்பு சார்ந்த அளவுகள் மூலம் இந்த வேறுபாடுகளை விவரிக்கலாம். ஆனால் இந்த வேறுபாடுகள் நிவர்த்தி செய்ய இயலாது. பனித்திறள்
|
மற்றும் பனிக்கட்டியின் பரப்பு குறைதல் இருபதாம் நூற்றாண்டின் வட அயன மண்டலத்தில் மத்திய , உயர் அட்சரேகை பகுதியில் நிலப்பகுதியில் உள்ள ஆறு , ஏரிகளை உற்றுநோக்கும்போது ஓர் ஆண்டில் இரண்டு வாரத்தில் 1960 ஆம் ஆண்டு முதற்கொண்டு பனித்திறள் பரப்பு 10 சதவீதம் குறைந்து காணப்படுகிறது என செயற்கைக்கோள் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் துருவமற்ற மலைப்பகுதியில் மிகப்பரந்த அளவில் பனிப்பாறைகள் காணப்படுகிறது. 1950 ஆம் ஆண்டில் வட அயன மண்டலத்தில் , வசந்த மற்றும் கோடை காலங்களில் 10 முதல் 15 சதவீதம் கடல் பனிப்பாறை
|
உருகியுள்ளது. மேலும் ஆர்டிக்கடலில் 40 சதவீதம் கோடைக்காலத்திலும் அதற்கு பிறகும் வசந்த காலத்திலும் பனிக்கட்டியின் அடர்த்தி குளிர்காலத்தில் பனிப்பாறைகள் அடர்த்தியை விட குறைந்து காணப்படுகிறது. புவியின் சராசரி கடல்மட்ட உயர்வும் மற்றும் பேராழியல் வெப்பம் அதிகரித்துள்ளன. . இருபதாம் நூற்றாண்டிலிருந்து ஒதங்கள் அளவுப்படி சராசரி கடல்மட்ட உயர்வு 0.1 மற்றும் 0.2 மீட்டர் உயர்ந்து காணப்படுகிறது. 1950 - ம் ஆண்டு முதல் புவியின் பேராழியின் வெப்பமும் மற்ற கடல்களின் வெப்பமும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் , நிலப்பரப்பை விட
|
கடல்மட்டம் உயர்வு அதிகரிக்கிறது. இந்தியாவின் வெள்ளப்பெருக்கம் ( Floods in India ) உலகில் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. ஒரு பக்கம் வெள்ளமும் மறுபக்கம் வறட்சியும் காணப்படுகின்றன. சில நேரங்களில் ஏற்படுகின்ற வெள்ளமும் வறட்சியும் மக்களை அவதிக்குள்ளாக்குகின்றது. வெள்ளப்பெருக்கு என்பது பொதுவானது. இதனால் தினந்தோறும் வெள்ளச் சமவெளியை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் உள்ள வானிலை ஆராய்ச்சியாளர்கள் வெள்ளப்பெருக்கை வகைப்படுத்தி உள்ளனர். மழைஅளவு 75 விழுக்காட்டிற்கு மேல் காணப்பட்டால் மிக
|
அபாயகரமான வெள்ளப்பெருக்கும் மழையளவு 25 விழுக்காடு குறைவாக காணப்பட்டால் அது மிதமான வெள்ளப்பெருக்கு எனலாம். இந்தியாவில் எடுத்துக்காட்டாக அஸ்ஸாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதியாகும். காடுகள் அழிக்கப்பட்ட நீர் பிடிப்பு பகுதியில் முறையான பராமரிப்பு இல்லா பாலங்கள். இடிந்து அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பருவமழையினால் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளபெருக்கு ஆற்றின் ஓரங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர். இங்கு
|
ஆண்டுதோறும் ஆற்றின் கரை அளவு அகலம் அதிகரித்து வளமான வண்டல் மண்ணை இருபுறமும் படிவிக்கிறது. வகைப்படுத்தலாம் : எடுத்துக்காட்டாக 2004 இல் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட பயங்கர பருவக்காற்றினால் பூடான் உட்பட அப்பகுதி முழுவதும் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் பிரம்மபுத்திரா ஆற்றின் அளவு உயர்ந்து திடிரென பூடானில் உள்ள சூரிகோ அணை அபாயகரமான கட்டத்தில் இருந்தால் ஜுலை மாதத்திற்கு முன்னரே நீரை வெளியேற்ற வேண்டியதாயிற்று. மீண்டும் ஜூலை மாத தொடக்கத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு ஆற்றின் அளவு உயர்ந்தது இதனைத் தொடர்ந்து ஜூலை 10 ,
|
2004 முதல் ஆற்றின் நீர் வெளியேறி மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது. இதனால் பல பகுதிகள் வளர்ச்சி நிலை தடைப்பட்டு , நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள பல வீடுகள் , கிராமங்கள் நீரில் முழ்கி போயின , குறைந்தது 23 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக கோல்பரா மற்றும் துப்ரி மாவட்டம் பெருத்த சேதம் அடைந்து இதில் பொங்கைகோன் பெருத்த சேதம் அடைந்து மோசமாக பாதிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கத்தின் இடர்பாடுகளை கண்டறிதல் ( Choosing Flood Hazard Categories ) வெள்ளச்சமவெளி செயல்பாடுகளை
|
கொண்டு வெள்ளப்பெருக்கின் இடர்பாடுகளை வெள்ளத்தின் அளவு நீரின் வேகம் மற்றும் ஆழம் வெள்ளநீரின் உயர்வு வெள்ளப்பெருக்கின் கால அளவு நீரை வெளியேற்ற பிரச்சனைகள் முக்கிய வெள்ளப்பெருக்கு செயல்பாடு மக்கள் பாதிப்படைதல் நிலப்பயன்பாடு வெள்ளப்பெருக்கின் விழிப்புணர்வு வெள்ளப் பெருக்கத்தின் எச்சரிக்கை நேரம் Page 138 of 204 வெள்ளப்பெருக்கு நான்கு கோணங்களில் ஏற்படுகிறது. அவை குறைந்த அளவு , மிதமானவை அதிகப்படியானவை மற்றும் மிக அதிகமான வெள்ளப்பெருக்கு ஆகும். மேற்கண்ட காரணிகளால் மிகப் பெரிய அளவில் வெள்ளச் சமவெளியை ஏற்படுத்துகிறது.
|
உதாரணமாக மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பெரியவர்கள் பத்திரமாகத் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் குழந்தைகள் , மற்றும் வயதானவர்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுவது கடினமாகும். இதனால் முன்னறிவிப்பு செய்வது அதிலும் குறைந்த பட்சம் இரண்டு முறை முன்னறிவிப்பு செய்ய வேண்டும். அவ்வாறு முன்னறிவிப்பு செய்யும்போது , அந்தபகுதி வெள்ளத்தின் ஆழத்தன்மை , ஆற்றின்வேகம் , வெளியேறும் வழிப்பாதை ஆகியவை மேலும் வெள்ளஞ் சூழ்ந்த பகுதிக்கு நடைபாதையர்கள் , வாகன ஓட்டிகள் செல்லாவண்ணம் முன்னறிவிப்பு செய்ய வேண்டும். இதற்காக சில
|
வழிமுறைகள் , பின்பற்றி உறுதிபாட்டுடன் மிகப்பரந்த அளவு ஆய்வுகள் தேவைப்படுகிறது. செயல்படுத்த வேண்டியவை வெள்ளப்பெருக்கு சம்மந்தமான , சில தன்மைகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக , ஜான்ஸ்டோன் வெள்ளச்சமவெளியைப் பொருத்தவரை : வெள்ளச்சமவெளி குறுக்கே படிப்படியாக வெள்ளப் பெருக்கத்தை குறைத்தல். எச்சரிக்கை நேரத்தை குறைக்க முனைதல் ( 26 மணி ). முறையான வெள்ளநீர் அளவு மற்றும் அதன் வேகம். வெள்ளப்பெருக்கத்தின் விழிப்புணர்வை அதிகளவில் ஏற்படுத்தி வெள்ளச்சமவெளியின் குறுக்கே செல்லாமல் தடுத்தல். இந்த நான்கு அளவு
|
முறைகளை கொண்டு , வெள்ளச் சமவெளி தன்மையை முறைப்படுத்தலாம். ஆனால் , வெள்ளச்சீர்குலைவை வரையறை செய்யமுடியாது. ஆனால் அதிகரிக்காமல் , கட்டுப்படுத்தலாம். வெள்ளச்சீர்குலைவை முறைப்படுத்த சில தன்மைகள் உண்டு : வெள்ளத்தின் அளவு ; வெள்ளத்தின் வேகம் மற்றும் ஆழம் ; மற்றும் வெள்ள நீரை வெளியேற்றுதல். வெள்ள எச்சரிக்கை மற்றும் அவசரகால திட்டம் ஜான்ஸ்டோன் பகுதியில் எடுத்துக்காட்டாக , பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பெரும்பாலான மக்கள் நேரடி வெள்ள அனுபவத்தையும் மற்றும் நண்பர்கள் அல்லது குடும்ப நபர்களின் அனுபவத்தை பகிர்ந்தும்
|
உள்ளனர். எனவே அவர்கள் அதிகமான அளவில் வெள்ள விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர். இருந்தபோதிலும் இந்த மக்கள் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் என்பதை கேள்விப்பட்டதில்லை. மேலும் குறிப்பாக. புதிதாக. கிராம மற்றும் நகர்புறத்திற்கு குடிபெயர்ந்துள்ள மக்களுக்கு மற்றவர்களைப்போல போதுமான விழிப்புணர்வு கிடையாது. காரணம் : அவர்கள் வாழ்ந்த பகுதியில் வெள்ள அனுபவத்தை பெறவில்லை. வெள்ளப்பெருக்கைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. அவர்களின் வீடுகள் ஆற்றிற்கு அருகில் அமைந்திருக்காது. ஆனால் வெள்ளச்சமவெளிப் பகுதியில் காணப்படும். இது வெள்ளத்தால்
|
பாதிக்க அதிக வாய்ப்பு உண்டு ; அல்லது வெள்ள எச்சரிக்கையை பற்றி கவலைப்படுவதில்லை. குறைவான வெள்ள விழிப்புணர்வு கொண்ட மக்களுக்கு வெள்ள வரலாற்றிலேயே கேள்விப்படாத மற்றும் அனுபவிக்காத அளவை விட பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதை நம்பாதவர்களுக்கும் போதுமான விழிப்புணர்வை அளிப்பதே வெள்ள தகவல் முகாமின் முக்கிய நோக்கமாகும். 2004 இல் கென்யா நாட்டில் வெள்ளப்பெருக்கு வடகிழக்கு கென்யாவில் உள்ள டாடாப் பகுதியில் பல நாட்கள் தொடர்ந்து பெய்த கனத்த மழையினால் 650 அகதிகளின் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் 3000
|
பேர்களுக்கு மேல் வீடுகளை இழந்தனர் ; கொடூரமான மழையினால் குறிப்பிடத்தக்க அளவில் கால்நடைகள் கொல்லப்பட்டன. ஐஃபோ மற்றும் டாஹாலே ஆகிய இவ்விரண்டு அகதி முகாம்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இன்றும் அவைகள் நீர்பிடிப்பு பகுதிகளிலேயே இருக்கின்றன. அங்கு 80000 அகதிகள் அதிகமாக விருந்தினர்களாக வாழ்ந்து வருகின்றனர் ; இவர்களில் குறிப்பாக சோமாலிய நாட்டைச் சார்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். டாஹாலே முகாமில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மற்றவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
|
வீட்டிற்குச் சென்று விட்டனர். ஒரு ஞாயிற்றுக்கிழமை , முகாம் அலுவலர்கள் டாஹாலே முகாமை ஆய்வு செய்யும் பொழுது 550 அகதிகளின் குடியிருப்புகள் உருகுலைந்தும் , வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர். 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஐஃபோ முகாமில் ஏறத்தாழ 80 அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. 11 பள்ளிகள் , 5 பள்ளிகள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் விடுமுறைக்குப்பிறகு ஏப்ரல் மாதம் பள்ளி திறப்பது பாதித்து விட்டது மேலும் , 3 பள்ளிகளில் இருந்த கழிவறைகள் உருகுலைந்து போய்விட்டன. 2004 இல் ஹெயிட்டி வெள்ளப்பெருக்கு (
|
Haiti Flood 2004 Takes Huge Toll ) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கூற்றுப்படி. 2004 இல் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஹெயிட்டி மற்றும் ஐக்கிய குடியரசு நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும் , உடமைகளையும் இழந்தனர். விலங்குகள் எல்லாம் மடிந்தன என ஹெயிட்டின் செய்தி என்ற நிறுவனம் ஒன்று வெளியிடுகிறது. ஆதாரப்பூர்வ அறிவிப்புப்படி தென்கிழக்கு பகுதியில் உள்ள 1500 மக்கள் உட்பட 2000 த்திற்கு மேற்பட்டோர் இறந்தனர். செஞ்சுலுவை சங்கம் , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
|
பகுதிக்கு சென்று உதவிகள் செய்தது அவர்களுக்கு குடிநீர் , வினியோகம் செய்தல் நோய் பரவாமல் தடுத்தல் , அழிவிலிருந்து காப்பாற்றுதல் ஆகிய பல்வேறு கடினப் பணிகளை மேற்கொண்டது. ஐக்கிய நாட்டு , உலக உணவு திட்டத்தின் படி ( World Food program ) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு கடந்த இரண்டு முதல் மூன்று மாதம் வரை மனிதாபிமான உதவிகளை செய்தது. அமெரிக்க ஐக்கிய நாடு என்ற அமைப்பு இராணுவத்தைக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் பல உதவிகளை செய்தது. பாலைவனமாதல் பாலைவனமாதல் என்பது மனிதன் செயல்பாடு காரணமாக வறண்ட , அரை வறட்சிப் பகுதிகளிலும்
|
நடைபெறுகிறது. இன்று உலகில் ஒரு முக்கிய பிரச்சினையாக வளர்ந்துள்ளது. குறிப்பாக , ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனம் , மத்திய கிழக்கு , மேற்கு ஆசியா , மெக்சிகோவின் வடக்குப் பகுதி மற்றும் தென் அமெரிக்காவின் தெற்கு கிழக்குப்பகுதி அமெரிக்கா ஐக்கிய நாட்டின் மேற்குப்பகுதி மற்றும் ஆஸ்திரேலியாவின் கிழக்குப்பகுதி ஆகியவை வறண்ட பகுதிகளாக இருகின்றன. ஆராய்ச்சியாளர் அனுமானத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 60,000 ச.கி. மீட்டர் பரப்பு புதிதாக உருவாகின்றது என்கின்றனர். பாலைவனமாதல் உருவாக இயற்கைத் தாவரங்களை அழிப்பதனால்
|
மண்ணரிப்பு ஏற்பட்டு. வறண்ட பகுதியாக மாறுகிறது. இயற்கை காடுகளை அழிப்பதனால் மேலும் பல பிரச்சனைகளுக்கு உட்படுகிறது. வறண்ட நிலமாக மாறிவிடுவதால் ஆறுகள் வறண்டு போகின்றன. நிலத்தடி நீர் மட்டம் வெகு ஆழத்தில் சென்று விடுகிறது. அரிப்புக் காரணிகளால். மணல் மேடுகள் உருவாகின்றன. காலநிலை மாற்றமடைந்து வறண்ட நிலமாக மாறுகிறது. கிணறுகள் வறண்டு போகின்றன. இயற்கைத் தாவர விதைகள் முளைக்காமல் காடுகளின் பரப்பு குறைகிறது. பாலைவனமாதலால் நாம் கட்டுப்படுத்தி பலவழிகளில் தடுக்கலாம். இயற்கை தாவரங்களை அழிக்காமல் பாலைவன உருவாகாமல் தடுக்கலாம்.
|
இன்று உலகின் பல பகுதிகளில் இதை அடிப்படைக் காரணியாகக் கொண்டு மண்ணரிப்பை கட்டுப்படுத்தி காடுகளின் பரப்பு விரிவாக்கம் செய்யப்படுகின்றன. பாலைவனமாதலை தடுக்க இரண்டு வழிமுறைகளை மேற்கொள்ளலாம். மண்ணரிப்பைத் தடுக்க. தாவரங்களை வளர்த்தல் மற்றும் மரங்களை காற்று வீசும் திசைக்கு எதிராக நடுதல் போன்றவையாகும். உங்களுக்குத் தெரியுமா ? இமயமலைப்பகுதியில் பாலைவனமாதல் : இயற்கைக் காடுகளை அழிப்பதால் இமயப்பகுதியில் இயற்தொகுதிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் மண்ணின் தன்மை மாறுபடுகிறது. இதில் உள்ள தாது வளங்கள் குறைகிறது. அதனால்
|
தேவையில்லாத களைகள் அங்கு ஆக்கிரமித்துக் கொள்கின்றன. மேகாலயா மற்றும் லடாக் பகுதியில் உள்ள மேற்கு காசி மலை மாவட்டம் முழுவதும் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாலைவனங்களின் விரிவாக்கம் உலகில் பாலைவனங்கள் விரிவாக்கப்படுகின்றன. ஆப்பிரிக்காவின் சகார பாலைவனத்தின் தென் விளிம்பில் உள்ள சாஹேல் பாலைவனப்பகுதி காணப்படுகிறது. இது மேற்கு ஆப்பிரிக்காவின் விசாலமாக 15 ° C வடக்கு முதல் 18 ° C வடக்கு வரையும் சகாராவின் வடக்கு மற்றும் சவான்னா மற்றும் பூமத்திய ரேகைக் காடுகளின் தெற்கு வரை காணப்படுகின்றது. மேலும் இது செனகல்
|
கடற்கரை பகுதியிலிருந்து 15 ° மேற்கு பகுதியின் குறுக்கே உள்ள மாலி மற்றும் நைஜர் முதல் 15 ° கிழக்கு வரையும் காணப்படுகிறது. இங்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை குறைந்த காலமே மழை பெறுகிறது. புல்வெளி சூழ்ந்த பகுதியிலிருந்து பழங்குடி மக்கள் மழைபெய்யும் பகுதிக்கு இடம் பெயருகின்றனர். இங்கு 200 மி.மீ மழை பெய்கிறது. உங்களுக்குத் தெரியுமா ? நீர்வளம் அதிகம் உள்ள நாடுகள் Vs நீர்வளம் குறைவாக உள்ள நாடுகள் முதல் 10 நீர்வளம் அதிகம் உள்ள நாடுகள் : ஐஸ்லாந்து சூரினாம். கயானா. பாப்யா நியூகினியா , கோபோன் , சாலோமன் தீவுகள் , கனடா ,
|
நார்வே , பனாமா மற்றும் பிரேசில் ஆகும். இவைகள் வடக்குப் பகுதியில் தூரமாக அமைந்து குறைந்த நீராவி இழப்பைக் கொண்டுள்ளன. குறைந்த நீர் வளம் உள்ள நாடுகள் : குவைத் , எகிப்து , UAE , மால்டா , ஜோர்டன் , சவூதி அரபியா , சிங்கப்பூர் , மால்டோஷயா , இஸ்ரேல் மற்றும் ஓமன் , இவைகள் 15 ° முதல் 25 ° அட்சங்களில் உள்ள பாலைவனப்பகுதகளில் அமைந்துள்ளன. மால்டா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் அதிகமான மக்கள் தொகை அடர்த்தி காணப்படுவதால் குறைந்த அளவு நீரே ஒவ்வொரு நபருக்கும் கிடைக்கின்றது. சகாரா , சாஹேலில் விரிவடைந்துள்ளதா ? அவ்வாறானால். இது
|
மழைப்பொழிவின் ஏற்ற இறக்கத்தினாலா ? ( மொத்த அளவு , மழைவேகம் , மழைப் பருவகாலம் ) அல்லது பெரும்பாலும் மனிதர்களின் செயல்பாடுகளான கால்நடைகளின் அதிக புல் மேய்தலினாலா ? எரிசக்திக்காக மரங்கள் வெட்டப்படுதலினாலா ? மேலும் பல வினாக்கள் எழுகின்றன. பாலைவனங்கள் உருவாக்கின்றனவா ? வறட்சி , பாலைவனங்களை உருவாக்கின்றனவா ? வேறு விதத்தில் கூறுவதென்றால் நில தேய்வு வேகமாக நடைபெறுவதை அறிய துல்லிய தட்பவெப்ப தகவல் அளிப்பு இருக்கின்றதா ? 1975 -இல் ஒர் ஆராய்ச்சியாளர் , சாஹேலைப் பற்றி கூறும்பொழுது கால்நடைகள் புற்களை அதிகமாக மேய்ந்து
|
விடுவதால் ( Overgrazing ) தாவரங்களின் எண்ணிக்கை குறைந்து புவி வெப்பமடைந்து கதிர்வீசல் அதிகரிக்கின்றது. அதாவது புவியின் மேற்பரப்பானது குறைவான சூரிய வெப்பத்தை உட்கொண்டு விரைவில் குளிர்ச்சி அடைந்து விடுகின்றது. சஹாரா பாலைவனமானது தொடர்ச்சியான கதிர்வீசல் குளிர்ச்சியை அனுபவித்து வருகின்றது. காரணம் அங்குள்ள வறண்ட காற்று. தெளிவான வானம் மற்றும் புவியிலிருந்து வளிமண்டலத்தை நோக்கிச் செல்லும் குறைவான நீண்ட அலை கதிர்வீசலே என்பது குறிப்பிடத்தக்கதாகும். சாஹேலில் வெப்பக் கதிர் வீசல் அதிகமாக காணப்படுவதாலும் வறட்சியான காலநிலை
|
நிலவுவதாலும் தாவரங்களின் வளர்ச்சி குறைந்தே உள்ளன. பாலைவனமாதல் என்ற நிலையை அடைய குறைவான தாவரங்கள் மற்றும் அதிகமான புவி கதிர் வீசல் சாதகமாக உள்ளன. மேலும் நிலத் தேய்மானமானது அதன் உற்பத்தி திறனை பாதிக்கின்றது. 1960 -ஆம் ஆண்டுகளில் சாஹேலில் கால்நடைகள் புற்களை அதிகமாக மேய்ந்த பிரச்சனை தற்போதும் நிலவி வருகின்றது. இன்னும் சரியான அளவு மழைப்பொழிவு அங்கு காணப்படவில்லை. 1960 - 90 -க்கும் இடைப்பட்ட காலத்தில் பெய்த மழையின் அளவைவிட 1930 – 60 க்கும் இடைப்பட்ட காலத்தில் சற்று அதிகமாக இருந்தது. சாஹேல் பகுதியானது 1950 -ஆம்
|
ஆண்டுகளில் தான் குறிப்பிடத்தக்க அளவில் மழையைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து 1970 - 80 ஆம் ஆண்டுகளில் வறட்சி நிலவியது. இருப்பினும் முழுமையான நில உற்பத்தி திறன் ஏறத்தாழ 1970 -இல் தான் திரும்பப் பெற்றது. Page 142 of 204 1983 88 –க்கும் இடைப்பட்ட காலத்தில் சாஹேலின் கதிர்வீசல் செயற்கைக்கோள் மூலம் மதிப்பிடப்பட்டது. அதாவது மழைக்காலங்களில் ( ஜூலை ) 31 விழுக்காடும். வறட்சியான காலங்களில் ( ஜனவரி ) 35 விழுக்காடும் இவைகளின் வேறுபாடு 4 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளன. இந்த பருவ வேறுபாடானது அதிகமான மாற்றத்தை காலநிலையிலும்
|
மற்றும் மனித செய்பாடுகளிலும் ஏற்படுத்துகின்றது. இயல்பான தாவர வேறுபாட்டுக் குறியீடு ( Normalised Difference Vegetation Index- NDVI ) பாலைவனமாதலின் போக்கை இயல்பான தாவர வேறுபாட்டுக் குறியீட்டைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகின்றது. இந்தக் குறியீடானது செயற்கைக் கோள் புள்ளிவிவரத்தையும் தாவரங்களின் அளவினையும் அடிப்படையாக கொண்டுள்ளது. இது நிலப்பரப்பின் “ பசுமை ” யை ( Green - ness ) குறிக்கும் ஒரு எண்ணாகும். மேலும் சூரிய கதிர் வீசலிலுள்ள சிவப்பு ஒளி ( Red light ) பிரதிபலிப்புக்கும் ( அதாவது 0.55 – 0.68 மைக்ரான்
|
அலைநீளம் ) மற்றும் அகசிவப்பு ( Infra Red ) கதிர்களின் பிரதிபலிப்புக்கும் ( 0.73 - 1.1 ) உள்ள விகிதமே இயல்பான தாவர வேறுபாட்டுக் குறியீடாகும். இக்குறியீடானது ஒரு பகுதியில் உள்ள உயிரின உற்பத்தித் திறனுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. 1980 முதல் 1995 வரை சாஹேலில் NDVI -க்கும் மழைப்பொழிவுக்கும் அதிக தொடர்பு இருந்திருக்கின்றது. அதாவது இவைகளின் உறவு நிலையாக இருந்ததால் செழிப்பான பாலைப்பகுதிகள் அதிகமாகப் பாதிக்கப்படாமல் உள்ளன. இந்தியாவில் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ( Desertification and Drought in India ) தேசிய
|
பாதுகாப்பு முறையில் குறிப்பாக வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. வகைப்படுத்துதல் , மண்டலமாக்குதல் , சரியான முறையில் நிலைத்தைப் பயன்படுத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல். மண் அரிப்பு , மாசடைதல் , நிலங்கள் தேய்தல் போன்றவைகளை கட்டுப்படுத்துதல். வேளாண் காடுகளை வளர்க்க சில நுட்பங்களை கையாளுதல் , நீர் பாதுகாப்பு , திரும்பபயன்படுத்துதல் , போதுமான அளவு மட்டும் நீரைப் பயன்படுத்துதல் , மேலும் வழக்கில் உள்ள மழைநீர் அறுவடை செய்யும் முறைகளை மேம்படுத்தி அதனை பின்பற்ற தூண்டுதல் போன்றவை
|
தேசிய பாதுகாப்பு முறையில் அடங்கும். திட்டங்களும் ஆய்வுத் திட்டங்களும் ( Programmes and Projects ) 1977-78 -ல் பாலைவன மேம்பாட்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது இது குஜராத் , இராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள வெப்பப் பாலைவன பகுதிகளையும் , ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாசலப்பிரதேசத்தில் உள்ள குளிர்பாலைவனப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்தத்திட்டம் 5 மாநிலங்களில் , 21 மாவட்டங்களில் , 131 வட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இது 0.362 மில்லியன் கி.மீ 2 பகுதியையும் 15 மில்லியன் மக்கள் தொகையையும் உள்ளடக்கியது.
|
பலைவனமாதலை கட்டுப்படுத்துதல். வறட்சியை தணித்தல் , சூழியியல் சமன்பாட்டைப் ( Ecological balance ) பாதுகாத்தல் , நிலங்களில் உற்பத்தியை அதிகப்படுத்துதல் , நீர் , கால்நடை மற்றும் மனித வளங்களை அதிகப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். இதில் ஒதுக்கப்படும் நிதியில் குறைந்தபட்சம் 75 விழுக்காடு பாலைவனமாதலைக் கட்டுப்படுத்துதல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்தத் திட்டம் 100 விழுக்காடு மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. திட்டக்குழுவில் திட்டங்களை மதிப்பீடு செய்யும்
|
அமைப்பானது , பாலைவனமாதலை கட்டுப்படுத்த ஆய்வு மேற்கொண்டு , உற்பத்தியை அதிகமாக்கவும் மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை அதிகரிக்கவும் பணி மேற்கொண்டுள்ளது. 1990 லிருந்து 1993 வரை ரூ 1,485 மில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது. 90,412 ஹெக்டேர் நிலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 1973 -ல் வறட்சி பாதிப்புப் பகுதி திட்டம் ( DPAP ) மோசமான இயற்கை வளங்களைக் கொண்ட வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளில் தொடங்கப்பட்டது. வறண்ட நிலத்தில் நல்ல மண்ணையும் , ஈரப்பதத்தைப் பாதுகாத்தலினாலும் அதிக விவசாய உற்பத்தியை பெருக்குவது. நீர்
|
ஆதாரங்களை அறிவியல் முறைப்படி பயன்படுத்துதல் , காடுகள் வளர்த்தல் , நல்ல தீவனங்களின் மூலம் கால்நடைகளை மேம்படச் செய்தல் மற்றும் சூழியல் சமன்பாட்டை பாதுகாத்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 13 மாநிலங்களில் 91 மாவட்டங்களில் 615 வட்டங்களில் அமுலாக்கப்பட்டுள்ளது. இது மத்திய உதவி பெறும் திட்டம் ஆகும். மத்திய , மாநில அரசுகள் 50:50 என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்கின்றன. நீர் அளிப்புப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு முன்னேற்றத் திட்டங்களை வகுத்தல். திட்டங்களை வகுப்பதிலும் , நடைமுறைப்படுத்துவதிலும் ,
|
மக்களைப் பங்கேற்கச் செய்தல் மற்றும் ஆய்வு செய்பவர்களுக்கும் நடைமுறைப்படுத்துபவர்களுக்கும் இணக்கமான முன்னேற்றத் திட்டங்களை வகுத்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளில் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டத்திலிருந்து நடைமுறைப்பட்டு வருகின்றது. பாலைவனமாதலைத் தவிர்க்க ஒரு சில செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதும் மற்றும் நடவடிக்கைகள் எடுப்பதும் நோக்கமாகும். பாலைவனமாதலைத் தவிர்க்க தேசியக் காடுகள் வளர்க்கும் திட்டம் ( National Forestry ) தெரிவு செய்யப்பட்டுள்ளது. நம்நாட்டில் இப்பொழுது இருக்கக்கூடிய நிலையில் பாலைவனப்பகுதி
|
முன்னேற்றததிற்காக சில திட்டங்கள் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கொள்கை அளவிளான ஆலோசனையுடன் கூடிய செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால் பாலைவமாதலை வெகுவாகக் குறைக்கலாம். மக்களை ஈடுபடுத்தி பல உத்திகளை உருவாக்கி , பாலைவனத்தை பல வழிகளிலும் ( ஆய்வுமுடிவுகளை வைத்து சரியான தீர்வு மற்றும்பாலைவன கட்டுப்பாடு பற்றிய பயிற்சி ) கட்டுப்படுத்தலாம். ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படை குறிக்கோள் ஒருங்கிணைந்த அணுகு முறையைப் பயன்படுத்தி தரிசு நில மேம்பாட்டிற்கு மாநிலத் திட்டங்கள் செய்ய
|
வழிவகுத்தல் ஆகும். சூழியியல் மற்றும் சமூகப் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப நிலத்தின் திறன் அதன் அமைவிடத் தன்மை , உள்ளூர் தேவை ஆகியவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பல்வேறுபட்ட நிலப்பிரச்சனைகளுக்கு ஏற்றாற்போலும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ( உப்புநிலம் , வறண்ட நிலம் , மணல் பகுதிகள் மற்றும் ஆரவல்லி பகுதி ) சில செயல்பாடுகளினால் மண் மற்றும் நீர் பாதுகாத்தல் , காடுகள் வளர்த்தல் ( மேய்ச்சல் நிலம் மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆரவல்லி (
|
இராஜஸ்தான் ) பகுதியில் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் பாலைவனமாதலைத் தடுத்தல். சூழியியல் நிலையைத் தக்க வைத்தல் ( மீண்டும் காடுகள் வளர்ப்பதால் ) விறகுக்குப் பயன்படும் மரங்களின் உற்பத்தியை அதிகரித்தல் , தீவனங்கள் , மரம் , உள்ளூர் தேவைக்கு ஏற்ப மரம் சாரா காட்டுப் பொருள்களை உற்பத்தி செய்தல். இத்திட்டம் 1992 ல் ஏற்படுத்தப்பட்டது ; மேலும் திட்டகாலம் 5 ஆண்டுகளாக இருந்தது. ஆரவல்லி ( ஹரியானா ) பகுதியில் பொது நிலத்தை மறுசீரமைப்பு ( Rehabilitation ) செய்வது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஹரியானாவின்
|
தென்மாவட்டங்களான பிவானி ( Bhiwani ) மகேந்திரகர் ( Mahendragarh ) கர்காண் ஃபரிதாபாத் ( Faridabad ) ஆகிய இடங்களில் 1990 லிருந்து இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வெளியீட்டுத் தொகை ரூ.480 மில்லியன் ஆகும். இது சுற்றுச்சூழல் பாதுகாத்தல் , ஆரவல்லி மலையின் அரை வறண்ட பகுதியில் பசுமையை உண்டாக்குதல் மற்றும் அந்தப் பகுதியில் வாழும் மக்களின் சமூக 25. உலக வெப்பம். 26. கடல் மட்ட உயர்வு. 27. பாலைவனமாதல். 28. மீளும் தன்மை. 29. சேதமடைதல் மனித உணர்வு. ஒரு பத்தியில் விடை தருக 30. சீர்குலைவு என்றால் என்ன ?
|
31. சீர்குலைவு வளர்ச்சி என்பது யாது ? 32. கட்டிடம் இடித்தல் நிலச்சரிவு பற்றி விளைவுகளை எழுதுக. 33. இயற்கை சீர்குலைவின் போது முக்கிய எச்சரிக்கை யாது ? 34. சீர்குலைவை நாம் எவ்வாறு பதிவு செய்யலாம் ? 35. சீர்குலைவின் அவசர மேலாண்மை முறைப்பற்றி விவரிக்க. 36. தனித்தல் மற்றும் தவிர்த்தல் என்பதன் முக்கியத்துவம் யாது ? 37. பாலைவனமாதல் எவ்வாறு ஏற்படுகிறது ? 38. வெப்பநிலை மாற்றம் பற்றி ஒரு பத்தி வரைக ? 39. வெள்ளப்பெருக்கு ( அ ) பாலைவனமாதல் விளைவுகளை ஆராய்க. VI. விரிவான விடையளி 40. இயற்கை சீரழிவுகள் பற்றி குறிப்பு தருக.
|
41. சாஹேல் பாலைவனமாதல் காரணங்களை கூறுக. 42.1999 இல் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பற்றி எழுதுக. 43. இயற்கை சீர் குலைவிற்கும் கொள்ளை நோயிற்கும் உள்ள தொடர்பை எழுதுக. 44. இந்தியாவின் வறட்சி மற்றும் பாலைவனமாதல் பற்றி எழுதுக. 45. இயற்கை சீர்குலைவு , வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது நாம் எவ்வாறு எதிர்நோக்க வேண்டும் ? 46. நிலநடுக்கம் ( அல்லது ) வெள்ளப்பெருக்கு விளைவுகளை பற்றி வரைக. 47. மாணவர்கள் ஆசிரியருடன் இயற்கை சீரழிவுகள் பற்றி ஆராயும் நிறுவனத்திற்கு சென்று வருக ? 48. ஆசிரியர் மாணவர்களுக்கு சமுதாய சீர்குலைவு
|
பற்றி கலந்துரையாடுல் மற்றும் இந்தியாவின் ஏற்படும் சீர்குலைவுகள் பற்றி பட்டியல் தயார் செய்க. அலகு 4 சுற்றுச் சூழல் மேலாண்மை பாடம் 10 பாதுகாப்பும் வள மேலாண்மையும் கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியத் தேவையைப் பற்றி கற்று , தெளிந்து , பாராட்டுகின்றனர் ; அத்துடன் , வளங்கள் வெகுவாக வெளியெடுக்கப்பெற்று பயன்படுத்தப்பட்டு , தவறாகவும் விரையமாகவும் இன்றைய சூழலில் அவற்றை எவ்வாறு நல்வழியில் நாம் பயன்படுத்தக் கூடும் என்பதையும் உணருகின்றனர். கட்டுப்பாட்டில் இல்லா இயற்கை இன்று ஆழ்துயரத்தில்
|
இருக்கின்றது. பல பன்னாட்டு நிறுவனங்கள் , இதனை எதிர்த்துப் போராடிய போதும் கூட , புவியின் பாதுகாப்பினை பேண வேண்டிய அவை வளத்தின் நிலைத் தன்மையில் அக்கறையற்றவையாகத் தெரிகின்றன. இதனால் எழுகின்ற சவாலை எதிர்கொள்ள அந்நிறுவனங்கள் அரசியல் விவேகம் ( diplomacy ) மற்றும் மேம்பாடு என்பவற்றின் எல்லைகளையே சோதித்துப் பார்க்க வேண்டியிருக்கும் , என்று காட்டுவாழினப் பாதுகாப்புக் கழகத்தின் ( Wild life conservation society ) தலைவரும் , தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டீபன்சாண்டர்சன் எழுதினார். இவ்வார்த்தைகள் காட்டுவாழினங்களுக்கு
|
மட்டும் பொருத்தமானவை அல்ல , உண்மையில் இயற்கை வளங்களுக்கும் அவற்றின் மேலாண்மைக்கும் கூட பொருத்தமானவையே. உயிரினப்பன்மை மற்றும் காட்டுத்தலங்களின் இழப்புகள் சூழல் பயத்தினைச் ( environmental alarmism ) சார்ந்தவையல்ல ; மாறாக அவை நமது இன்றைய உலகினை விவரிக்கின்றவையாகின்றன. இவை அறிவியல் சான்றின் பல புத்தகங்களிலே தெளிவாக்கப்பெற்றுள்ளன. நீண்டகால தாக்கத்தினைப் பொருளாதார ரீதியில் நம்மால் கணக்கிட முடியும் என்றாலும் , அக்கணக்கீட்டின் முடிவுகள் உண்மையாக இராது. அதிக மானதாகவே அமையும். காட்டு வாழினங்களைப் பொருத்தமட்டில் ,
|
பாதுகாப்பு அறிவியல் ( conservation science ) இரண்டு வகைகளுக்குள் அடங்கும். அ ) பயமுறுத்தலின் மதிப்பீடு ( threat assesment ) மற்றும் ஆ ) குறைவெண்ணிக்கை உடைய விலங்குகள் பற்றிய ஆய்வு. இவ்விரு வகைகளும் கூட இயற்கை வளங்களும் ஏற்புடையதாகும். ஏனெனில் இவ்வளங்களிலும் பயமுறுத்தலும் , குறைவான அளவுகளும் நம்மை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும். பாதுகாப்புச் சமுதாயத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வந்திருப்பது இயற்கையில் சிறப்பான கடல் மற்றும் நிலப் பகுதிகளைப் பராமரிப்பதும் , அதே நேரத்தில் காட்டு வாழினங்களை
|
அளவுக்கதிமாக அழிக்கப்படாமல் , பலவீனமான நில மற்றும் நீர்ப் பகுதிகள் மாசடைவதைக் குறைத்து , இயற்கைச் செய்முறைகள் நீண்ட காலம் பாதுகாக்கப்பட வழி வகுப்பதும் ஆகும். மேலும் விஞ்ஞானிகள் மற்றும் இடை - அரசு நிறுவனங்களுக்கு இடையிலான நல்ல கூட்டுறவு கடந்த காலத்தில் பல பாதுகாப்புச் சாதனைகளைப் படைத்துள்ளது. முக்கியமான , சதுப்பு நிலங்களைப் பற்றி ராம்சர் வழக்கு ( Ramsarconvention on wetlands ) வளிமண்டல அனு சோதனைத்தடை ( the Atmospheric Nuclear Test Ban ) உயிரினப் பாதுகாப்புச் சார்ந்த அழிந்து வரும் வனவிலங்குகள் மற்றும்
|
தாவரங்கள் சார்ந்த பன்னாட்டு வணிக வழக்கு ( the convention on International Trade and Flora ) மற்றும் உலகப் பாரம்பரியத் தலங்கள் உருவாக்கம் ( the creation of world heritage ) என்பவைகளே அச்சாதனைகள் என்றாலும் இவைகள் யாவும் பெரும் வெற்றிகளே அல்ல , ஆனால் உலகளாவிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பலவீனப் பிடிப்பு என்று மட்டும் கூறலாம். இக்குறைவான வெற்றியின் குற்றம் வளர்ந்து வருகின்ற வளர்ந்துவிட்ட நாடுகளையே சாரும். ரியோ - டி - ஜெனைரோ ( பிரேசில் ) வுக்கு பின் வந்த பொறுப்பிலிருந்து கழட்டிக் கொண்டுவிட்ட வளர்ந்து வரும்
|
நாடுகளின் நடத்தையினால் தான் இந்நிலை. எனினும் கூட எரிபொருள் நுகர்தல் மற்றும் இயற்கைப் பயன்பாடு என்பவற்றின் வருங்கால வளர்ச்சி இந்நாடுகளிடமே உள்ளது. வளர்ந்துவிட்ட நாடுகளே அவைகளின் பொருளாதார வளர்ச்சிகளுக்காக உலகின் இயற்கை வளங்களைத் தேடிக் கண்டு பயன்படுத்தின. குறைந்து வரும் உற்பத்தி ( Diminishing Returns ) நீண்ட நாட்களாகவே இயக்கத்தில் இருக்கின்றது என்பது அவைகளுக்கு தெளிவாகவே தெரிந்திருந்தது. மேலும் அவைகள் இயற்கை வளங்களை தேவைக்கும் மிக அதிகமாகவே பயன்படுத்தி வளர்ந்து வரும் நாடுகளின் உரிமைகளையும் பறிப்பவைகளாக
|
இருந்து வருகின்றன. இவ்வார்த்தைகளின் முடிவாக , பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு என்பவை எவ்வாறு வரலாற்றை சார்ந்தமைந்தன என்பதை இப்போது பார்ப்போம். பாதுகாப்பும் பராமரிப்பும் பாதுகாப்பின் வரலாறும் வளமேலாண்மையும் : மனிதர்கள் நம் புவியின் இயற்கை வளங்களையும் சூழலையும் சூறையாடினர் என்பது தற்போதைய கருத்தல்ல. பழமைக் கிரேக்கர்களின் காலத்திலேயே சூழலைப்பற்றிய அனுதாபம் பல புத்தகங்களில் தெளிவாய் எழுதப்பெற்றன. அட்டிகா தீபகற்பத்தின் மண் தேய்விலும் காடுகள் அழிவிலும் நிகழ்கின்ற விளைவுகளை பிளேட்டோ விவரிக்கின்ற வகையில் இந்த அனுதாபம்
|
/ அக்கரை தெளிவாகின்றது. அவ்வாறே அவருக்குப் பின்வந்த பலரும் கூட ( வேளாண் தொழில் , நிலப்பயன்பாட்டு மாற்றம் நகரமயமாதல் , தொழில் மயமாதல் என்பவற்றில் எழுகின்ற எதிர்மறை விளைவுகளைப் பற்றி எடுத்துச்சொல்லுகின்றனர். முதலாம் நூற்றாண்டில் கோலுமெல்லா மற்றும் பெரியர் பிளைனி என்பவர் ரோமைச்சுற்றி நிகழ்கின்ற பயிர் நிலங்களின் ஏழ்மை நில மேலாண்மை , பயிற் உற்பத்தியின் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி மண்அரிப்புக்கும் காரணமாய் அமைவது திண்ணம் என எச்சரிக்கை விடுக்கின்றனர். எ மத்திய காலத்தில் , எண்ணற்ற விளக்கங்கள்
|
மாசடைவதின் விளைவுகளையும் சூழலின் தேய்வினையும் எடுத்துச் சொல்லுகின்றன. பத்தாம் நூற்றாண்டில் மாயன் நாகரிகத்தின் வீழ்ச்சி மக்கத்தொகை மிகுதியாலும் வளக்குறைவாலும் என்ற நம்பிக்கையும் நிலகின்றது. மத்திய காலத்தின் ஊடே , காடுகளின் பெரும் பகுதிகள் மரத்திற்காக வெட்டப்பட்டன அல்லது ஐரோப்பியாவிலும் ஆசியாவிலும் மேய்ச்சல் நிலங்களாக மாற்றப்பட்டன. ஒரு முன் உதாரண வனவிலங்கு / வாழ்க்கைப் பராமரிப்பு இந்தக் காலத்தில் தான் பிரிட்டனிலும் ஐரோப்பியாவிலும் பிரபுக்களால் நடைமுறைக்கு வந்து வேட்டையாடுவதற்கென்று நிலப்பகுதிகள் தனியே
|
ஒதுக்கப்பெற்றன. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவே , தொழிற்புரட்சி இங்கிலாந்தில் தொடங்கிற்று. இந்தச் சமயத்தில் காடுகளின் பெரும்பகுதிகள் வெட்டப்பட்டு , நிலக்கரி மரத்திற்கு பதிலாக எரிபொருளாக கொண்டு வரப்பட்டது. நிலக்கரியின் எரிதலால் தல மற்றும் வட்டாரப் அளவில் காற்றின் மாசடைதலை உண்டாக்கிற்று , ஜான் எவ்லின் என்ற இயற்கை விரும்பி வளிமண்டல மாசடைவினால் இலண்டனின் காற்றுத் தரம் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் 1661 – இல் புகார் செய்துள்ளார். பிரிட்டனின் சுற்றுச்சூழல் அமைப்பு பதினாறு , பதினேழு மற்றும் பதினெட்டாம்
|
நூற்றாண்டுகளில் மூன்று முக்கிய விசைகளால் உந்தப்பெற்றது. இயற்கை விரும்பிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகள் இயற்கை எவ்வாறு இயங்குகின்றது என்பதைப் பற்றிய ஒரு தெளிவினைத் தந்தது. மனிதனின் சூழல் தேய்வே உயிரினங்களின் உயிர்ப்பாதுகாப்பினைப் பாதிக்கும் ஒன்றாய் இருக்கின்றது என்ற தெளிவினை தந்தது. சுமார் 1880 இல் களம் மற்றும் இயற்கை விரும்பிகளின் குழுக்கள் 100,000 -த்திற்கும் மேலான உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாகக் கொண்டிருந்தன. இந்த சமயத்தில் இக்குழுக்களின் உறுப்பினர்கள் பலர் உள்நாட்டு பறவைகள் , முட்டைகள் , தாவரங்கள் என பல
|
சேகரிப்புகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இவர்களின் ஒட்டு மொத்த சேகரிப்பும் உயிரினங்களின் எண்ணிக்கையில் அசாத்திய வீழ்ச்சியை ஏற்படுத்தின. சேகரிக்கப்பெற்ற இனங்களின் எண்கள் வீழ்ச்சியால் , வனவாழ்வின் பாதுகாப்பு அமைப்பு உருவாயிற்று. இவ்வாறான முயற்சிகளின் கடைசி முத்தாய்ப்பே நகரமயமாதலால் ஏற்பட்ட அதிகமான சூழல் வீழ்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் நகரமயமாதல் காற்று மாசடைதல் , நீர்மாசடைதல் என்பற்றிற்கும் இயற்கைப் பரப்புகள் கட்டுமானச் சூழல்களாக மாறுவதற்கும் ஏதுவாயிற்று. சூழல் தத்துவம் ( environmentation ) மற்றும் பாதுகாப்பு (
|
conservation ) என்பவைகளுள் ஏற்பட்ட முதல் முக்கிய மேம்பாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்தன. 1847 -இல் ஜார்ஜ் பெர்கின்ஸ் மார்ஷ் வெர்மாண்ட் மாநிலத்தின் ரட்லண்ட் வட்டத்தின் வேளாண் கழகத்தில் ஒரு உரையாற்றினார். இவ்வுரையின் சாராம்சம் காடுகள் அழித்தல் மற்றும் நிலமாற்றம் என்பவற்றின் வழியாக மனித நடவடிக்கைகள் ஓர் அழிவுத்தாக்கத்தினை நிலத்தின் மீது நிகழ்த்துகின்றன. இவ்வுவரையே பின்னர் அவரது 1864 -ல் வெளியிடப்பட்ட மனிதனும் இயற்கையும் அல்லது மனித நடவடிக்கையால் மாற்றப்பட்ட உலகம் என்ற புத்தகத்தின் அடித்தளமாகியது.
|
இப்புத்தகத்தில் தான் எல்லையோரங்களில் தொடர்ந்து நிகழும் இயற்தொகுதிகளிலான மாற்றங்களின் விளைவுகள் பற்றி எச்சரிக்கை செய்தார். ( காங்கிரஸ் எழுச்சியின் தோற்றம்1850-1920 ) என்பது பற்றிய இணையத்தளத்தின் பக்கத்தினைப் பார்க்கவும். ஹென்றி டேவிட் தொரூ 1854 இல் ' வால்டன் ' என்கின்ற பாதுகாப்பு மற்றும் சூழல் என்பதைச் சார்ந்த நூலினை எழுதினார். வால்டனில் மனித நாகரீகம் மிகவும் கடினப்படுவதையும் இயற்கையுலகத்தின் அடித்தளங்களிலிருந்து மிகவும் விலகிச் செல்வதையும் எடுத்துக்கூறினார். மனிதச் சமுதாயம் தனது பொருளாதார , சமுதாயத்
|
தொகுதிகளை எளிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும் அவ்வாறே இயற்கையுடன் நல்லிணக்கம் கொண்டிருக்கவேண்டும் என்பதையும் தொரூ எடுத்தியம்பினார். சூழல் அறிவு முதிர்ச்சியையும் மனிதர்கள் பெருமுயற்சியால் பெறவேண்டும் ஏனெனில் சரியானத் தீர்வுகளையும் நீண்டகால திட்டமிடலையும் இயற்கையும் மனிதமும் உருவாக்கிய உண்மைகளிலிருந்தும் தகவல்களிலிருந்துமே பெறமுடியும் என எடுத்துள்ளார். 1892 இல் ஜான் மியூர் என்பவரைத் தலைவராகக் கொண்டு சியராகிளப் என்ற குழுவானது ஐக்கிய அமெரிக்காவில் துவங்கப்பட்டது. வளங்கள் பயன்பாட்டு மேலாண்மை என்பது
|
இயற்கையைப் பாதுகாப்பதில் வெகு தூரம் செல்லவில்லை என்பதை ஜான்மியூர் தெளிவாக விளக்கினார். இவரது கூற்றுகளின் காரணமாகவே அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசீயப் பூங்காக்கள் பலவடிவெடுத்தன. மார்ஷின் புத்தகத்தினால் உந்தப்பெற்று அதிபர் தியோடர் ருஸ் வெல்ட் இயற்கை வளங்களை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசு மேலாண்மை செய்யும் வழிகளில் மாற்றத்தினைக் கொண்டுவரத் தீர்மானித்தார். அவர்களது முக்கியப் பாதுகாப்பு அறிவுரையாளரான கிஃப்பர்ட் பிஞ்சோட் Page 15t of 204 என்பவரின் உதவியுடன் நல்ல பயன்பாட்டு விதிகளைப் பின்பற்றி வளங்களின் மேலாண்மையை
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.