text stringlengths 11 513 |
|---|
தெய்வமுண்டு என்று தான்றிதழ் வேண்டும் ” என்பதற்கேற்ப வாழ்ந்தவர் காந்தியடிகள். எல்லா உயிர்களிடத்தும் இறைவன் நீக்கமற நிறைந்திருப்பதால் உலகிலுள்ள எல்லோரும் உடன் பிறந்தாரோ என்ற கருத்தை பலமாக ஆமோதித்தார். இதை அடிப்படையாகக் கொண்டே அகிம்சை கோட்பாட்டை வலியுறுத்தினார். 10.6.2.1. சுதேசி இயக்கம் நாட்டுக்குரிய இயற்கை வாழ்வே சுதேசிய... |
விடுதலை பெறுவதாகும். இதன் மூலம் ஆன்மீகத் துறையில் இறையன்பை பெற முடியும் என்பது அவரது கருத்து. இந்து - முஸ்லீம் ஒற்றுமை , தீண்டாமை முதலியனவும் சுதேசியமேயாகும். ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் ஒரு மனிதன் போல் வாழ்தல் வேண்டும். பிறப்பாலோ வேறு எதனாலோ வேற்றுமை நிகழின் , அது நாட்டைத் துண்டாடிவிடும். ஆதலால் மக்கள் மன ஒற்ற... |
உழைப்புக்கு மதிப்பளித்து , அவன் உற்பத்தி செய்யும் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவது. இது இயற்கை நியதியோடு இணைந்த தர்மமாகும் ” என்பது காந்தியடிகள் கருத்தாகும். “ இந்தியாவின் முதுகெலும்பு கிராமம் ”. இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்பது காந்தியடிகளின் கருத்தாகும். வேளாண்மையை முதன்மைத் தொழிலாய் கொண்ட கிராமங்களை முன்ன... |
மனமாற்றத்தை உண்டாக்கி , அமைதிப் புரட்சியை நாம் கொண்டு வர முடிந்தது. “ உன்னைப் போல் உன் அயலாளையும் நேசி " என்ற இயேசு பெருமானின் கூற்றுக்கு மனித நேயச் செயல் திட்ட விளக்கமாகச் சுதேசி அமைந்தது. நூற்பும் நெசவும் புத்துயிர் பெற்று வேளாண்மைக்கு இணைதொழிலாய் மாறின. மனித உழைப்புக்கு மதிப்புக் கூடியது. வாணிகத்தில் நேர்மை திரும்பி... |
உரிமை பெறுவது. “ நாமார்க்குங் குடியல்லோம் ” என்றார். திருநாவுக்கரசர். சுய ஆட்சி எனது பிறப்புரிமை என்றார் பாலகங்காதர திலகர். “ நம் நாட்டில் தீண்டப்படாதோரும் உரிமை பெறவே , நான் சுயராஜ்ஜியம் என்பதற்கு கொண்ட பொருள் ” என்கிறார் காந்தியடிகள். சுயராஜ்ஜியம் கடவுளாலும் கொடுக்கப்படுவதன்று அதை நமக்கு நாமே முயன்று பெறுதல் வேண்டும்... |
, சீற்றம் , காமம் முதலியவற்றிற்கு 310 அடிமைகளாக நிற்கின்றனர். இதனின்றும் விடுதலை அடைவது ஆத்ம சுயராஜ்ஜியமென்பதாகும். இச்சுயராஜ்ஜியம் பெறவே மக்கள் படைக்கப்படுகிறார்கள். புறச் சுயராஜ்ஜியம் நமக்கு இன்றியமை யாததாகும். நம் உடலுக்குத் தீங்கு வராது காப்பது போல நம் நாட்டுக்கும் அயல் நாட்டவரால் தீங்கு வராமல் காத்தல் அவசியமாகும்.... |
கடையனுக்கும் கடைத் தேற்றம் ’ என்ற ஜான் ரஸ்கின் கருத்தின் அடிப்படையில் சமூகத்தில் உள்ள அனைவரும் நலம் பெறுவதே சர்வோதயம் என்பது காந்தியடிகளின் கருத்து. சமுதாயத்தின் கடைநிலையில் இருப்பவர்கள் அரசியல் , பொருளாதார , சமூக சமயத் துறைகளில் ஏற்றம் பெறுவதே இதன் நோக்கமாகும். “ எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாதார் இல்ல... |
இழைக்காமையும் , பிறர் நமக்கு துன்பம் இழைக்கும்பொழுது அதனை அன்பால் பொறுத்துக் கொள்வதேயாகும். சிந்தனை , சொல் , செயல் இம்மூன்றாலும் உலகில் வாழும் எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாததும் அகிம்சையே. அகிம்சையானது தன்னுள் அன்பு , இரக்கம் , அனுதாபம் , பரிவு , அச்சமின்மை போன்ற நற்பண்புகளை உள்ளடக்கியது. அது மேலும் உண்மையை உள்ளீடாகக் ... |
அஞ்சாமையின் உச்சியில் நிலவுவதேயாகும். அகிம்சை உயிர் ஆற்றல் வாய்ந்தது. உயிராற்றல் உள்ள ஒருவனுக்கு கையில் ஆயுதம் தேவையில்லை. அது மரணத்துக்கு அஞ்சாதவன் பற்றி நடக்கும் தகுதியுடையது. ஹிம்சை தாழ்மையில் கொண்டு போய் விடும். அகிம்சை என்பது கடவுள் சார்புடையது. அவருடைய உதவி பெற வேண்டுமானால் தாழ்மையோடும் , கனிவோடும் அவரிடம் அணுக வ... |
இழைக்க எந்த மனிதனும் உடன்பட மாட்டான். இது மனித இயல்பு. இவ்வியல்புடையோன் பிறர்க்கும் தீங்கிழைக்க மாட்டான். நினைப்பானேல் அந்நினைப்பு இயற்கைக்கு மாறுபட்டதாகும். தன்னைப் போல பிறரையும் கருதுதல் மனிதனது இயல்பு. “ தன்னுயிர் வைகலும் பரிந்தோம்பு மாறுபோல , மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமின் ” என்றார் திருத்தக்க தேவர். இந்நிலை எய்த... |
நடம்புரியும் இடமென நான் தெரிந்தேன் அந்த வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தைமிக விழைந்த தாலோ " என்ற அருள் மொழியையும் நாம் உற்று நோக்கல் வேண்டும். 312 அகிம்சை உயர்ந்த தத்துவமாகும். அதாவது மனிதன் , விலங்கு மற்றும் தாவரங்கள் ஆகிய எல்லா உயிரினங்களுக்கும் ஆன்மா உண்டு என்பதேயாகும். அகிம்சை என்னும் ஞாயிறு எழும்போது , ... |
தியாக உணர்வை வளர்ப்பது என்பதாகும். “ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற இராமலிங்க சுவாமிகள் கருத்தும் இத்தகையதே. 10. 6.2.5. சத்தியாகிரஹம் ‘ சத்யாகிரஹம் ’ என்ற சொல்லை சத்ய + ஆக்ரஹ எனப் பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும். கடவுளை உண்மை ( சத்யம் ) மூலம் உணர்ந்து பற்றிக் கொள்ளுதல் ( ஆக்ரஹ ) எனலாம். அன்பும் , தன்னைத... |
தனியாக நின்று அறவழியில் போரிடல் ‘ சத்தியாகிரகம் ’ எனப்படும். “ Fight for the right cause ”. இறைக் கொள்கைளை ஏற்று வளர்ந்த காந்தியடிகள் கடவுளை உருவமான ஒன்றாகத் தான் கண்டார். கடவுளே உண்மை ( God is truth ) என்பதை மாற்றி உண்மையே கடவுள் ( Truth is God ) எனக் கொண்டார். கடவுள் என்ற சொல் யாவருக்கும் ஒரே பொருளைத் தருவதாக இல்லை. ... |
சொல்லும்போது உண்டாகின்ற வேறுபாடுகள் உண்மை , சத்யம் ( Truth ) என்று சொல்லும்போது உண்டாவதில்லை. எனவே , உள்ளது ( Truth ) { சத் ) என்பது ஒருவகை ஒற்றுமையை உண்டாக்கும் சொல் என்று கொண்டார். கடவுள் நம்பிக்கை உடையவர்களிடம் கூட அக்கடவுளைப் பற்றிய எண்ணங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மேலும் , சிலர் கடவுள் என்ற தத்துவத்தையே ஏற்ற... |
சொல்லால் தந்தருளினார். அதற்குச் சத்தியத்தின் ஆற்றல் ( Truth force ) என்று விளக்கம் அமைத்துக் கொண்டார் காந்தியடிகள். சத்தியத்தின் ஆற்றலை ( Truth force ) ஆன்மிக ஆற்றலாகிய அன்பினால் பெறலாம் என்ற முடிவுக்கும் வந்தார். நம் முன்னோர்கள் இந்நெறியை “ உண்மைநெறி என்றும் அருள்நெறி என்றும் திருநெறி என்றும் , நல்லாறு என்றும் , சன்மா... |
முதலியன அவரது சத்தியாகிரக வாழ்விற்குச் சாரமாக அமைந்தது. மேலும் சத்தியாகிரகத்தின் நேர்மையையும் , பெருமையையும் உணர்த்தி அவரை விழிக்கச் செய்தது. இயேசு பிரானின் மலைப் பிரசங்கமே ஆகும். ( புதிய ஏற்பாடு இதனையே காந்தியடிகள். கிறிஸ்து நாதரின் மலைப்பொழிவை யான் வாசித்தபோது , அதிலுள்ள ( தீமையைத் ) தீமையால் எதிர்த்து நிற்க வேண்டாம்... |
314 செய்யுங்கள் , இப்படிச் செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கும் பிள்ளைகளாயிருப்பீர்கள். ( மத்தேயு 5 : 44-5 ) என்பதைக் கண்ட வேளையில் எனக்கு மகிழ்ச்சி வரம்பின்றிப் பொங்கித் ததும்பி வழிந்தது. இவ்வெண்ணத்தை பின்பு பகவத் கீதையைப் படித்த போதும் உணர்ந்தேன். அதன் பின் டால்ஸ்டாய் எழுதிய பரலோக ராஜ்யம் உன்னுள்ளத்திருக்க... |
உண்மையின் வழியில் நின்று , அறவழியில் நின்று தீமையை வெல்லுவதே ‘ சத்யாகிரஹம் ’ ஆகும். 10. 6.3. சமுதாய சேவைகள் இந்து முஸ்லீம் ஒற்றமை இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்குப் பெரும்பாடுபட்டவர் காந்தி , பல்வேறு சமயத்தவர். இனத்தவர்களிடம் ஒற்றுமையை நிலை நாட்ட வந்த அருளாளர் எல்லோரும் உடன்பிறந்தார் என்ற உணர்வுடன் வாழ வேண்டும் என விரும்பி... |
வாழ்வின் தரம் உயர அயராது பாடுபட்டார். பல்லாயிர ஆண்டுகாலமாகச் சாதிப்பாகுபாட்டில் ஊறித் திளைத்த இந்துக்கள் தாழ்த்தப்பட்டோரைத் தரைக்குறைவாக நடத்தினர். ஆலயத்தின் உள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. அவர்களிடம் காணப்பட்ட தப்பெண்ணங்களைத் தவிர்த்து , அவர் களை ஆலயத்திற்குள் அனுமதிக்க வேண்டினார். தீண்டாமையை எதிர்த்து உரத்தகு... |
பெண்களின் நிலை உயர பெண்ணுரிமை பெறவும் , ஆண்களோடு சரிநிகர் சமானமாக அவர்களை நடத்தவும் பெரிதும் பாடுபட்டார். ஆண்கள் அனுபவித்த உரிமைகள் அனைத்தையும் பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக அயராது உழைத்தார். பெண்கள் அனைவரும் கல்விபெற வேண்டுமென்பதை மிகவும் வலியுறுத்தினார். அவருடைய சமுதாய அரசியல் பணிகளில் பல பெண்கள் ஈடுபட்டிருந்தனர். ... |
அரசு வலியுறுத்த வேண்டுமென விரும்பிளார். கல்வி முறைகள் மனிதனின் அறியாமையைக் கலைந்து அறிவை விளக்கி அவனது வாழ்வை நேர்மையால் செலுத்தவல்லவது கல்வி. “ தாய்மொழியின் வழி பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றல் மிக முக்கியமானது. தாய்மொழியை அவமதிப்பது நாட்டுத் தற்கொலை யாகும். தாய்மொழி வழி கல்விகற்று அறிவு விளங்கப்பெற்று பின்னர் உலகில் உள்ள... |
செலவுள்ள கல்வி எல்லாருக்கும் கிடைக்கக் கூடியதன்று. குழந்தைகளின் சூழலோடு ஒட்டிய கல்வி இதுவன்றுக் கூறினார். அடிப்படைக்கல்விக் கொடுத்தார். 316 தொழிற்கல்வியோடு கூடிய கல்விதான் நாட்டுக்கு நலம் பயக்க கூடிய கல்வி எனக்காந்தி கருதினார். “ ஆளும் வளரனும் , அறிவும் வளரனும் ” , அதுவே கல்வியின் வளர்ச்சி என்றார். மேலைநாட்டுத்தொழில்மய... |
ஏற்படுகிறது. இதனால் இவர் தன்னிறைவுள்ள குடிசைத் தொழிலை ஆதரித்தார். இது பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. இவர் வேலை நிறுத்தத்தையும் , கதவடைப்பையும் எதிர்த்தார். கிராமப் பொருளாதாரம் தாய்மைப் பொருளாதாரமாகும். இதனை நிலைத்த பொருளாதாரம் எனவும் கூறுவர். மகாத்மா காந்தியின் மணிமொழிகள் 1. எல்லாரும் உடன்பிறந்தோர் அனைவருடைய நலனே வா... |
முடியாது. 4. உலகம் ஒன்றுபடாவிடின் , இவ்வுலகில் வாழந்து நாம் எந்த இன்பத்தையும் அடைய முடியாது. ஏழு சமுதாயத் தீவினைகள் காந்தி , தமது மறைவுக்கு முன்னர் அக்காலத்தில் நிலவி வந்த ஏழு சமுதாயத்தீவினைகளைக் கூறி , அவற்றினை அகற்றப் பாடுபட்டார். 1. கொள்கையில்லா அரசியல் 2. உழைப்பில்லா செல்வம் 317 3. மனச்சான்றில்லா மகிழ்ச்சி 4. பண்பி... |
மக்களுக்கு அமைத்துத் தருவது அவர்களே. அவ்விதி முறைகளைப் பின்பற்றி அச்சூழலே அமைத்துக் கொள்வதும் இயலாத ஒன்று எனக் கூறினார். இருப்பினும் அவர் தமது ஆசிரமத்தில் ஆரோக்கியச் சூழலை அமைக்க எளிய முறைகளைக் கையாண்டார். இந்நாட்டு மக்கள் தொகையில் பெரும் பகுதியான கிராம மக்கள் பின்பற்றக் கூடிய முறையில் காந்தியின் ஆரோக்கியச் சூழ்நிலை அம... |
இம்முறையினை எள்ளி நகையாடினாலும் , இந்தியர்கள் இதன் சிறப்பை உணர்ந்து கைத்தொழில்களைப் பேணி வளர்த்தனர் , இந்தியத் தட்பவெப்ப நிலை இவைகட்கு ஏற்றதாக அமைந்திருந்தது. ஏழை உழவர்கள் ஆண்டில் குறிப்பிட்ட காலங்களில் பயிரிட முடியாமையால் அவர்கள் கைத்தொழில்களில் ஈடுபட்டனர். இவை பொருளியல் ரீதியில் பயனுடையனவாக இருந்தன. இயற்கையோடிமைந்த வ... |
கூறினார். இயற்கை 318 மருத்துவ முறையே உடலுக்கு ஊறு செய்யாத முறை மேலைநாட்டு மருந்துகள் பயனற்றவை என்பது இவரது முடிவு. உடலுக்கு ஊட்டம் தரும் எளிய உணவு முறையைப் பின்பற்றச் சொன்னார். கூட்டு வழிபாடு அனைவரும் ஆன்ம ஈடேற்றம் பெறவேண்டுமென காந்தி விரும்பினார். கூட்டுவழிபாட்டு முறை இறையுணர்வை மட்டுமன்று ஒற்றுமையுணர்வையும் மக்களிடைய... |
சத்யாக்கிரக வாழ்வே சமய வாழ்வென்பது. மனிதனிடம் விலங்கு தன்மையும் உண்டு. மனிதத் தன்மையும் உண்டு , முன்னையதைக் களைந்து , பின்னையதை விளங்கச் செய்வது சமயமாகும். “ தன்னை உணர்தலும் ” சமயமாகும். சமயம் என்பது ஒழுக்கம். நாம் ஒழுக்கத்தினின்று தவறினால் சமய நெறியின்று பிறழ்ந்வராகிறோம். சமயத்தின் சாரம் ஒழுக்கமே. சமயமில்லா வாழ்வு பற்... |
நேசிப்பதன்று. மாற்றாரையும் நேசிப்பது அன்பு. “ சத்தியம் ஒரு சமய வேதத்துக்கு மட்டும் உரிய உடைமையன்று ” “ குரானை ஏற்பதில் எனக்குச் சிறிதும் தயக்கமில்லை. பைபிள் , ஜெந்த அவஸ்தா , கிரந்தாசாகிப் , புத்த சமண நூல்கள் முதலிய எம்மத நூல்களையும் யான் ஏற்பேன். மறைமொழி ஒரு நாட்டுக்கோ , ஒரு வகுப்புக்கோ மட்டும் உரியதன்று ” “ நாம் அனைவர... |
பூமியின் மீது அழிக்கப்படும். கடவுள் ஒளியாயிருக்கிறார். இருளாயில்லை ; கடவுள் அன்பு ; பகைமையன்று கடவுள் உண்மை , பொய்மையன்று ; கடவுள் ஒருவரே பெரியவர். ” ” மேற்கூறிய யாவும் சமயம் பற்றி காந்தியடிகளின் கருத்துகளேயாகும். அறநெறி என்ற வித்திற்குச் சமயம் என்ற நீர் வார்க்கப்படாவிடின் அதிலிருந்து செடி வளராது. அறநெறி என்ற அடிப்படைய... |
பாற்பட்டதாக அமைதல் வேண்டும். இறுதியாக , உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்பதே ஒழுக்கம். ஒழுக்கத்தைத் தராத கல்வியினால் ஒரு பயனும் இல்லை என்பது காந்தியடிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மனித குலம் காந்தியடிகளின் அகிம்சை வழியில் சென்று உன்னத நிலையை எய்த வேண்டும். ஒழுக்கம் கல்வியறிவின் பயன் ஒழுக்கமாகும். பன்னூல் பயின்ற ஒ... |
ஒழுக்கத்தினால் எய்துவர் மேன்மை ” என்கிறார். “ கற்ற அறிஞர் குணநலத்தை இழப்பாராயின் , மற்றெல்லாவற்றையும் இழந்தவராவர் 320 என்றும் , “ வெறும் ஏட்டுக்கல்வி மனிதனது ஒழுக்க நிலையை உயர்த்துவதாகா என்பதும் - ஒழுக்க வளர்ச்சி அக்கல்வியினின்றுந் தனித்து நிற்பதென்பதும். எனது வாழ்வில் எனக்கு நன்றாக அறிவுறுத்தியிருக்கின்றன ” என்று கல்வ... |
வலியுறுத்துகிறார். அதாவது தனிமனித ஒழுக்கம் , இல்லற ஒழுக்கம் , சமுதாய ஒழுக்கம் என்பனவாகும். அவர் மூன்று குரங்குகளின் வாயிலாக நமக்கு ஒழுக்கத்தை அறிவுறுத்துகிறார். தீயவற்றைக் கேட்காதே தீயவற்றைப் பார்க்காதே தீயவற்றைப் பேசாதே - என்பதேயாகும். ஆன்ம முன்னேற்றம் ஆன்ம முன்னேற்றத்திற்கு புத்தகப் படிப்பால் ஆன்ம ஞானம் கை கூடாதென்று... |
ஆன்ம முன்னேற்றம் அடைய உடல் நலம் பேணல் அவசியம். பின்பு மன நலம் பேண வேண்டும். உடலும் மனமும் ஒருங்கிணையும் பொழுது ஆன்ம முன்னேற்றம் அடைகிறது. விலங்கின் இயல்பிலிருந்து மனிதன் தெய்வநிலைக்கு மாறுவதாகும். கவியரசு கண்ணதாசன் இதனையே மிருகத்தன்மை அழிந்து தெய்வத்தன்மை பெற்று மனம் சாந்தி அடைகிறது என்கிறார். ஆன்ம முன்னேற்றத்திற்கு மன... |
மறுமலர்ச்சி என்பது யாது ? 2. ஆங்கிலக் கல்வி முறையால் ஏற்பட்ட நன்மைகள் இரண்டினைக் கூறுக. 3. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார் ? 4. சுவாமி தயானந்தரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் பெயர் என்ன ? 5. சுவாமி தயானந்தர் எழுதிய அரியநூல் எது ? ஆரிய சமாஜம் கூறும் புனிதப்படுத்துதல் என்றால் என்ன ? இராம கிருஷ்ணரின் சீடர் யார் ? 6. 7. ... |
காந்தியடிகளின் சேவையைக் கூறு. பிரம்ம ஞான சபை யாரால் தோற்றுவிக்கப்பட்டது ? மகாத்மா காந்தியின் இயற்பெயர் என்ன ? 14. மதுவிலக்கு பற்றி மஹாத்மா கூறுவன யாவை ? ஆ. ஒரு பத்தி அளவில் அல்லது பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்தியாவின் நிலை எவ்வாறு இருந்தது ? 322 2. ஆங்கிலேயர் ஆட்சி , கல... |
பருவம் பற்றி நீவிர் அறிவன யாவை ? 7. அஹிம்சைக்கு காந்தியடிகளின் விளக்கம் யாது ? 8. சத்யாக்கிரஹம் பற்றி காந்தியடிகள் கூறுவன யாவை ? இ. ஒரு பக்க அளவில் அல்லது முப்பது வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. இந்தியாவில் சீர்திருத்த இயக்கத்திற்கான காரணிகளைத் தொகுத்துக் கூறு ? பிரம்ம சமாஜத்தின் கொள்கைகளை விவரி. 2. 3. ஆரிய சமாஜத்தின் கோ... |
இயக்கம் பற்றிய காந்தியின் கருத்துகளை விவரி. 8. சுயராஜ்ஜியம் பற்றிய காந்தியின் கருத்துகளை விவரி. 9. கூட்டு வழிபாடு பற்றி காந்தியின் கருத்துகளை விவரி. 10. ஒழுக்கம் பற்றிய காந்தியடிகளின் கருத்துகளை விவரி. 323 11. உலகப் பண்பாட்டிற்கு இந்தியாவின் கொடை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இன்றும் சீரும் சிறப்புமாக நிலை பெ... |
நிலையில் இருந்து வருகிறது இந்தியப் பண்பாடு. 11. 1 , பிற நாடுகளில் இந்தியப் பண்பாடு பௌத்த சமயமும் இந்து சமயமும் கீழைநாடுகளின் பல பகுதிகளில் கி.பி. 100 - லிருந்து 1500 வரை பரவியிருந்ததை வரலாறு மூலம் அறிகின்றோம். இந்து சமயம் தென்னிந்தியாவிலிருந்தும் , பௌத்த சமயம் வட இந்தியாவிலிருந்தும் இப்பகுதிகளுக்கு சென்றன. அசோகர் காலத்... |
துருக்கிஸ்தானிலிருந்து ( Turkestan ) சீனாவரை பரவியிருந்தது. இப்பகுதிகளில் அகழ் வாராய்ச்சியில் மடாலயங்கள் , ஸ்தூபிகள் , கல்வெட்டுகள் , கையெழுத்து பிரதிகள் போன்றவைகளின் பௌத்த அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. திபெத்தில் ஏழாம் நூற்றாண்டில் பௌத்த சமயம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் திபெத்திய அரசர்கள் பல இந்தி... |
அங்கு நிலைபெற்றது , பர்மாவில் நூற்றுக்கணக்கான பௌத்த விஹாரங்களை இன்றும் காணமுடிகிறது. சீனாவில் நான்காம் நூற்றாண்டில் ஐம்பது பௌத்த சமஸ்கிருத நூல்கள் சீனமொழியில் கொணரப்பட்டன. சீனாவிலிருந்து பௌத்த சமயம் நான்காம் நூற்றாண்டில் கொரியாவிற்கு சென்றது. பின்பு அங்கிருந்து அது ஜப்பானுக்கு வெகு வேகமாகப் பரவியது. அசோகருடைய முயற்சியா... |
ஆதிக்கத்தை செலுத்தியது. இவற்றையெல்லாம் பல வரலாற்று சான்றுகளும் அகழ்வாராய்ச்சிகளும் கல்வெட்டுகளும் , இலக்கியங்களும் , அழகு கலைகளும் பழக்க வழக்கங்களும் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துகாட்டுகின்றன. சமய நூல்களும் , கல்வெட்டுகளும் , இலக்கியங்களும் அழகுக் கலைகளும் , பழக்க வழக்கங்களும் நமக்கு மிகதெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. சம... |
செய்யப்பட்டு உலகெங்கும் பரவின. இந்தியக் கட்டடக்கலை , ஓவியக்கலை , இசை , நடனம் , சிற்பக்கலை இவற்றை மேலை நாட்டார் பாராட்டியதுடன் அப்பாணிகளை அங்கு புகுத்தவும் தலைப்பட்டனர். 11.1.1. பௌத்த சமயம் கீழை நாடுகளில் பெரும் செல்வாக்குடன் இன்றும் திகழ்ந்து வருவது பௌத்த சமயம். அது தோன்றிய நாட்டில் சிறப்பான நிலையை பெற்றிராவிடினும் , இ... |
அந்நாடுகளுக்கு இந்நாட்டின் பண்பாட்டு நாகரிகக் கூறுகளையும் அழகுக்கலைப் பாணிகளையும் , பழக்க வழக்கங்களையும் உடன் சுமந்து சென்றனர். இறைவனை அடைய இந்து சமயம் மூன்று முக்கிய நெறிகளை கூறுகின்றது. அவை முறையே ஞான மார்க்கம் ( அறிவு நெறி கரும 326 மார்க்கம் ( கடமை நெறி ) பக்தி மார்க்கம் ( அன்பு நெறி ) எனப்படுபவை. வாழ்வில் வளம்பெற்ற... |
சமஸ்கிருத மொழியில் உள்ள காளிதாசனின் நாடகங்கள் , இராமாயணம் , மகாபாரதம் போன்ற வீர காவியங்கள் , பகவத்கீதை உபநிடதங்கள் , வேதங்கள் போன்றவை மேலை நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அவற்றில் பொதிந்துள்ள சமய , தத்துவக் கருத்துக்களை போற்றி பாராட்டி உலகமே பின்பற்ற முயல்கின்றது. காளிதாசனின் சாகுந்தல நாடகமும் இராமாயணமும் இன்றும்... |
பெருமையை அளிக்கக் கூடிய ஒன்று. ஜெர்மானியத் தத்துவ ஞானிகளாகிய கதேஸ்கோப்பளார் , பிக்டே ஹெகல் போன்றோர் சமஸ்கிருத மொழியில் ஈர்க்கப்பட்டு இந்திய இலக்கியங்களை பயின்று அவற்றால் தாங்கள் பெற்ற அறிவுச் செல்வத்திற்காக இந்தியாவை மிகவும் பாராட்டியுள்ளார்கள். இம்மைக்கும் மறுமைக்கும் அமைதியையும் ஆனந்தத்தையும் தருபவை உபநிடதங்கள் என ஸ்... |
கூறிக்கொள்கின்றார்கள். 11.1.3. இந்திய விடுதலையும் மகாத்மா காந்தியும் குருதி கொட்டாமல் , குழப்பம் விளைவிக்காமல் பிரிட்டானியரிடமிருந்து அஹிம்சை நெறியைக் கடைபிடித்து மகாத்மா காந்தி இந்நாட்டிற்கு விடுதலை பெற்றுத்துத் தந்த இச்செயல் உலகெங்கும் பாராட்டும் நிலையை உருவாக்கியுள்ளது. இதே வழிமுறைகளை மார்டின் லூதர்கிங் போன்றோர் தங்... |
நடைமுறைப்படுத்தியதில்லை. 11.1.4. தேர்தல்கள் உலகிலேயே மிகப் பெரிய குடியரசு நாடு இந்தியா. இக்குடியரசு நாட்டில் இந்தியர்கள் சுதந்திரம் பெற்ற பின்பு பல முறை தேர்தல்கள் அமைதியாக , வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இவை அனைத்தும் சட்டத்தின் அடிப்படையில் ஜனநாயக முறைப்படி மிக நல்ல முறையில் நடந்துள்ளன. இதை இன்றும் பல நாடுகள் பின்பற்றி... |
உறுதிப் பொருள்கள் நான்கில் அறத்தை அல்லது தருமத்தை முதன் முறையாக நமது சமயம் வைத்துள்ளது. இந்திய நாட்டை நம் முன்னோர் “ தரும பூமி ” என்றழைத்தனர். நமது சமயத்தையும் தருமம் என்ற சொல்லால் அழைத்தனர். இத்தரும பூமி ஆன்ம விடுதலையை மிகவும் வலியுறுத்துகின்ற நாடு. இதை மையமாகக் கொண்டே இந்த நாட்டின் பண்பாடு அமைந்துள்ளது. இக்கோட்பாடும்... |
இப்பஞ்சசீலக் கோட்பாடாகும் அவையாவன : 1. அமைதியான கூட்டு வாழ்வு 2. பிறநாட்டு நடவடிக்கைகளில் தலையிடாதிருத்தல் 328 3. வலியப்போருக்குச் செல்லாமை 4. நாட்டைக் கூறுபோடாமை 5. வாணிக ஒப்பந்தம் 11.1.7. வேறு சில இந்தியப் பரிசுகள் இந்தியா குறிப்பாக ஐரோப்பியர்கட்கு நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தும் வழிமுறைகளைக் கற்றுத் தந்தது. இறைச்ச... |
பயிரிடப்பட்டு வருகின்றன. சதுரங்க விளையாட்டு , அனைத்து நாடுகளும் பின்பற்றும் எண்முறை , பதின்கூறான கணக்கீடு முறை ( Decimal System ) போன்றவை இந்தியா உலகுக்களித்துள்ள பரிசுகளாகும். 11.1.8. பல்வேறு இயக்கங்கள் இராமகிருஷ்ணன் இயக்கம் , பிரமஞான சபை , பிரமசமாஜம் , ஆரியசமாஜம் போன்றவை உலகெங்கும் தங்கள் கிளைகளை நிறுவி. இந்நாட்டின் ... |
காட்டுதல் , எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பாவிக்கும்பொழுது இறைவனின் அருள் கிட்டும் என்பதையும் உணர்த்துகின்றது. பண்பாடு மனித நேயத்தை மட்டுமின்றி ஆன்ம நேயத்தை உலகிற்கு அளித்துள்ளது. 11.1.8.2. உயர்ந்த தத்துவங்கள் இப் பண்பாடு உயர்ந்த தத்துவங்களின் மொத்த கூறுகளாகவே விளங்குகின்றது. மனிதன் வெறும் சடப்பொருள் அன்று. அவனுக்கு ஆன்... |
எடுத்தியம்புகிறது. ‘ தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் ’ என்று மகாபாரதம் உலகத்திற்கு உணர்த்துகிறது. ரிக் , யஜூர் , சாமம் அதர்வணம் போன்ற வேதங்கள் , பகவத்கீதை , திருக்குறள் , காளிதாசரின் சாகுந்தலம் போன்றவை இன்றும் உலக மக்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன. பகவத்கீதையானது மனிதகுலத்திற்காக இந்திய ... |
போற்றுகின்றோம். தாய்நாடு என்றே அழைத்து மகிழ்கிறோம். ஆறுகள் , மலைகள் இவற்றினை பெண்மையின் பெயராலேயே மிகவும் அழைக்கப்படுகின்றது. பெண்மையைப் போற்றாத எந்த நாடும் மேன்மை அடையாது என்பதை இந்தியப் பண்பாடு உலகிற்கு எடுத்துரைக்கின்றது. 11. 1. 8. 5. அகிம்சை சத்யம் என்பது உள்ளது அல்லது உண்மையெனப் பொருள்படும் , இவ்வுலகம் சத்யத்தின் ... |
மீது வலியச் சென்று போர் தொடுத்தாக வரலாறு இல்லை. எத்தனையோ படையெடுப்புகளால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் கூட , அது அமைதியையே நாடுகிறது. மேலும் உலக அமைதிக்காக இன்றுவரை உலக அரங்கில் போராடிவருகிறது. 11. 1. 8. 7. நுண்கலை கலைகளின் பிறப்பிடம் இந்தியாவாகும். ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்பர். இக்கலைகள் எழில் உணர்வால் 330 தோன்றியவ... |
புரிகின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நடனம் என்றும் , வட இந்திய தென்னிந்திய இசை என்றும் இந்திய இசை பிரிக்கப் பட்டுள்ளது. பரதம் , கதகளி , கதக் , மோகினியாட்டம் , குச்சிப்புடி , ஓடிசி போன்ற நடளங்கள் மூலமாக இந்தியப் பண்பாட்டை உலக நாடுகளில் பரவச் செய்கின்றது. 11.1.8.8. யோகா ‘ யோகா ’ என்பது ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இண... |
எடுத்துரைக்கிறது. 11.1.8.9. எளிமையானவாழ்வும் உயர்ந்த சிந்தனைகளும் இப்பண்பாடு எளிமையான வாழ்வினை வலியுறுத்துகின்றது. அக்காலத்தில் இயற்கை உணவு , உண்ட காரணத்தால் , நோய்கள் நீங்கி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தனர். காந்தியடிகளின் கதர் ஆடை இன்றளவும் உலக மக்களால் போற்றுதற்குரியதாகும் , எனவே எளிய உடை , உணவு பழக்கவழக்கங்கள் போன்றவற்... |
எனவே , இந்தியப் பண்பாடு தியாக வாழ்வை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது. முடிவுரை இன்றும் ஐக்கிய நாட்டுச் சபையில் இந்தியா உலகெங்கும் அமைதியை நிலைநாட்டப் பெரும் பாடுபட்டு வருகிறது. அமைதியை நாடும் இந்நாட்டினர் பிறநாட்டு மக்களுடன் அமைதியுடன் வாழ விரும்புவதில் வியப்பொன்றுமில்லை. 12. இந்தியப் பண்பாடும் , சுற்றுச் சுழல் கல்வியும... |
ஆகும். இயற்கையின் மிகப்பெரிய உள்ளடக்கம் சுற்றுப்புறமும் , ( environment ) மற்ற உயிரினங்களும் ஆகும். இவை இரண்டிற்கு இடையே உள்ள இந்த உறவுகளையெல்லாம் பற்றி கற்கும் கல்விக்கு சூழ்நிலையியல் ( Econology ) என்று பெயர். வீடு என்று பொருள் உணர்த்தும் ஆய்காஸ் என்ற கிரேக்கச் சொல்லும் , கற்றல் என்ற பொருள் உணர்த்தும் லோகாஸ் என்ற கிர... |
சூழ்நிலைத் தொகுப்பு ( Ecosystems ) எனப்படும். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதன. சுவாசிப்பதற்கு நல்ல தூய காற்று , பருகுவதற்குச் சுவையான நீர் மற்றும் ஊட்டச்சத்து மிக்க நல்ல உணவு ஆகியவை ஆகும். இவை அனைத்தும் கொண்டதே தூய்மையான சுற்றுச்சூழல் ஆகும். மலை , நதி , கடல் , சூரியன் , ஆகாயம் , காற்று மற்றும் விலங்கினங்கள் இவற்றைப் பற்... |
பல்விருகமாகிப் பலவகைப் பிறவி களெடுத்து மனிதனாய்ப் பிறப்பெடுப்பது இவ்வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்காகவே. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாது இப்படித்தான் வாழவேண்டுமென்று வாழ்வதுதான் திட்டமிட்ட வாழ்க்கை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆனால் இன்றுள்ள உலகில் மனிதன் தான் விரும்புவதுபோல் உடல்நலத்துடன் வாழ முடிவதில்லை.... |
வீடு , மற்றொன்று நாம் வாழ்ந்துவரும் உலகம். வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறோம். ஆனால் உலகம் என்ற இன்னொரு வீட்டை மாசுபடுத்தி வருகிறோம். உலகம் என்ற வீட்டை நாம் தூய்மையாக வைத்துக்கொள்ளா விட்டால் நம் நாட்டைச் சுற்றிலும் இருந்துவரும் பலதரப்பட்ட மாசு நம் வீட்டையும் தூய்மையற்றதாக மாற்றிவிடும். ஆனால் , நமது பண்பாடு எவ்வாறு சுற்... |
என்றான் பாரதி. இப்பாரத பூமி பண்பாட்டின் சிகரமாக திகழ்கின்றது. இந்தியப் பண்பாட்டிற்கு இந்தியச் சுற்றுச்சூழல் ஒரு சிறப்பம்சமாகும். இந்தியா கிழக்கே வங்காள விரிகுடாவாலும் , மேற்கில் அரபிக்கடலாலும் , தெற்கே இந்து மகா கடலாலும் , வடக்கே இமயமலையாலும் சூழப்பட்டுள்ளது. இந்தியாவின் அமைவிடம் மிகச் சிறப்பு வாயந்ததாகும். உலகிலேயே அத... |
புனிதநதி ’ என்று அழைக்கப்படுகின்றது. கங்கை , யமுனை , சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமமானது ' திரிவேணி சங்கமம் ’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவை கடகரேகையானது தீபகற்ப இந்தியா , புறதீபகற்ப இந்தியா என இரண்டாகப் பிரிக்கிறது. இங்கு பாலைத் தாவரங்கள் முதற்கொன பசுமை மாறாத் தாவரம் வரை பரவியுள்ளது. 12.2.1. மலைகள் நம் பண்பாட்ட... |
இறைவன் வடிவமாகும். திருமால் அங்கு உறைகின்றார். ஆகவே , அதனைக் காலால் மிதியாமல் முழங்காலிட்டே தவழ்ந்து ஏறினார் ஒரு வைணவப் பெரியார். ' காரைக்கால் அம்மையாரும் ' கைலாயத்திற்குத் தலையால் நடந்து போனதாகச் சொல்வார்கள். பராசக்திக்கு விந்திய மலையாகும். அதனால் ‘ விந்தியாசல நிவாசினி ” என்றும் , சாமுண்டி மலையின் மீது வாசம் பண்ணுவதால... |
இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்பதால் முருகளை ' குன்றுதோறும் ஆடுபவன் ' என்பர். திருத்தணியும் , திருப்பரங்குன்றமும் , பழனியும் , விராலி மலையும் அதற்குச் சான்று. ' திருவண்ணாமலையே சிவனின் வடிவம் ’ என்று மகரிஷி கூறியுள்ளார். ஆகையால் , இறைவனையே “ அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே ” என்று ஒருவர் பாடினார். எனவே நமது... |
உதாரணம் கிருஷ்ணா , பிரம்மபுத்திரா போன்றவைகள். சில நதிகளோடு இறைவனின் பெருமையை இணைத்துச் சொல்கின்றோம். கங்கை திருமாலின் திருவடியை கழுவுகின்றது என்றும் , சிவபெருமானின் முடியில் உறைகிறது என்றும் கூறுகிறோம். யமுனை நதியில் கண்ணன் விளையாடினான். சரயு நதிக்கரையில் ராமன் வாழ்ந்தான். நர்மதை நதியில் ஒவ்வொரு கூழாங்கல்லும் சிவனின் வ... |
இந்தியப் பண்பாட்டில் ‘ பரம்பொருளின் வடிவம் ’ என்று நம் மக்கள் நம்புகின்றார்கள். நதிகள் பெண்மைத்தன்மையுடையன. எனவே அவற்றைத் தாயாகப் போற்றுகிறோம். 12.2.3. மரங்கள் நயக்ரோத , உதும்பர , அசுவத்த என்ற மரங்கள் விஷ்ணுவின் நாமங்கள் என்று போற்றப்படுவதாக. விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. அதாவது அத்திமரம் , ஒதிய மரம் , அரச மரம் ஆகிய யாவ... |
ஆலமரத்தின் அடியில் அறிவுக்கடளாகிய தட்சிணா மூர்த்தியும் , அதன் இலையில் பாலகிருஷ்ணன் படுத்திருப்பதாக நாம் பேசுகின்றோம். திரிவேணி சங்கமத்தில் ஆலமர வடிவத்தில் விஷ்ணு வணங்கப்படுகிறார். “ கதம்ப வனக்குயிலே ” எனப் பராசக்தியை கதம்ப மரத்தோடு இணைத்துப் பேசுகின்றோம். முருகனையும் ' கடம்பன் ' என்று கூறுவது வழக்கம். அரசமரத்திற்கு பிள... |
இருக்கிறார்கள். ‘ குறும்பலா ’ குற்றாலத் தலவிருட்சமாகும். திருவானைக் காவலில் ‘ நாகலிங்க மரம் ’ வணங்கப்படுகிறது. ' புன்னை மரத்தை ' மயிலையிலும் , மாமரம் காஞ்சிபுரத்திலும் தலவிருட்சமாகப் போற்றப்படுகின்றன. ‘ பனைமரம் ’ திருப்பனந்தாளில் தெய்வமாக வணங்கப்படுகிறது. நெல்லிமரத்து நிழலில் சித்தர்கள் வாழ்ந்தார்கள். இப்படி எல்லா மரங்... |
12.2.4. பறவைகளும் விலங்குகளும் " எங்கு எங்கு பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் அங்கு அங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே ” என்று தாயுமானவர் கூறுகின்றார். திருமாலின் அவதாரங்களில் மீன் , ஆமை , பன்றி , சிங்கம் ஆகிய வடிவங்கள் அடங்கும். கருடனைத் திருமாலும் , காளையை சிவனும் , முஞ்சூற்றினை பிள்ளையாரும் , மயிலை முருகனும் பு... |
வாகனம் என்கிறோம். காக்கை சனிபகவானுக்கும் , ஆந்தை இலக்குமிக்கும். அன்னம் சரஸ்வதிக்கும் வாகனமாகும். பாம்பைத் திருமாலின் , படுக்கையாகவும் சிவனின் அணியாகவும் வழிபடுகின்றோம். கோகுல கண்ணனை பசுக்களோடு சேர்ந்து தியானிக்கிறோம். இப்படி விலங்குகள் , பறவைகள் அனைத்தும் ஏன் உயிர்கள் அனைத்தும் தெய்வத்தன்மை பெற்றவை என்று இந்தியப் பண்ப... |
2.5. கடலும் , காடும் காட்டில் தவம் புரிந்த ஞானிகள் ரிஷிகள் தாங்கள் உணர்ந்த யாவற்றையுமே இறைவடிவமாகக் கண்டனர். இதனையே நம் வேதங்கள் “ ஆரண்யம் ’ ” என்றழைத்து மகிழ்ந்ததுண்டு. இராமயணத் திலும் ‘ ஆரண்ய காண்டமே ' முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆகவே , காட்டையும் இறைவனாக அவர்கள் கண்டது வியத்தகு ஒன்றாகும். கடல் திரையறியாப் பெருங்கட... |
அனைத்திற்கும் புனிதத்தன்மை தருபவன் இறைவன். திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் எழுந்தருளி யுள்ளான். திருபாற்கடலில் திருமால் பள்ளி கொண்டுள்ளான். இலக்குமி கடலில் பிறந்தவள் , எனவே ‘ கடல் மகள் ’ என்றும் அழைக்கப்படுகிறாள். எனவே , இந்தியப் பண்பாடு கடலினையும் தெய்வமாகக் காண்கின்றது. 12.2.6. பஞ்சபூதங்கள் நிலம் , நீர் ,... |
திருவாரூர் , இராமேஸ்வரம் ஆகிய திருத்தலங்களில் சிவன் மண் வடிவத்தில் வணங்கப்படுகிறார். " மண்ணை இருந்து துழாவி வாமனன் மண்ணிது வெண்ணும் என்று ஆழ்வார் பாடுகின்றார். திருவானைக் காவலில் சிவபெருமான் நீர் வடிவத்திலும் காற்று வடிவத்தில் காளத்தியிலும் , சிவபெருமான் வணங்கப்படுகிறார். மேலும் , ஆகாய வடிவத்தில் சிதம்பரத்திலும் , ஜோதி... |
அனைவருக்கும் ஒரு நிரந்தரமான மதிப்புமிக்க இடம் உண்டு. மனிதன் தான் வாழ்வதற்கு எப்படி உரிமை உண்டோ , அதைப்போலவே துளசிச் செடிக்கும் , அருகம்புல்லுக்கும் , வில்வ மரத்துக்கும் , விஷத்தன்மையுடைய ஜீவராசிகளுக்கும் உரிமையுண்டு. இயற்கையில் மனிதன் மதிக்கத் தகுந்தவனாக இருப்பதைப் போலவே , அனைத்து உயிரினங்களும் , கடல் , நதி , மலைகளும் ... |
பாம்பும் எலியும் கடவுளை வணங்கி பெருமை அடைந்ததாக நாம் கேள்விப்படுகின்றோம். பாரதப் பண்பாட்டில் அறிவியல் இயற்கையோடு இணைந்து மனிதன் வாழவேண்டும் என்கிறது. இயற்கையை இயற்கையின் போக்கில் விடுவது நலம். அதனை போற்றுதல் நமது கடமை. மனிதன் தன்னுடைய அன்பை , தன்னலமின்றி , சுற்றத்தை மீறி மனித குலம் முழுவதும் செலுத்த வேண்டும். உயிருள்ள ... |
இப்படிப் படைப்பு முழுவதிலுமே தன்னையே காண மனிதனுக்குக் கற்றுத் தருவது இந்தியப் பண்பாடாகும். நாம் எல்லோரும் விரும்புவது வேண்டுவது , வாழ்க்கையில் மகிழ்ச்சியாக , இன்பமாக இருக்க வேண்டும் என்பது தான். உடலும் , உள்ளமும் நலமாகவும் , வாழ்வு வளமாகவும் இருந்தால் இன்பத்திற்கு குறை இருக்காது. சுற்றுச் சூழலையும் பண்பாட்டையும் நாம் ப... |
மைதானத்தையும் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். இது அவர்களின் தலையாய கடமையாகும். 2. மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை மாணவர்கள் உணர்தல் வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி மக்களிடையே எடுத்துரைத்தல் வேண்டும். சுற்றுச் சூழல் கேடு அடைவதற்கு இதுவும் ஒரு காரணம் என அறிதல் அவசியம். 2. “ வீ... |
ஏற்ப , மாணவர்கள் தங்கள் வீட்டில் ஒரு சிறுசெடியாவது வளர்க்க வேண்டும். 4. புகை கக்கும் வண்டிகளின் பயன்பாட்டைக் குறைத்தல் வேண்டும். சிறிய தூரத்திற்கு நடந்து செல்ல பழக வேண்டும். முடிந்தவரை மிதிவண்டிகளை பயன்படுத்துதல் வேண்டும். 5. மின்சக்தியை பயன்படுத்துவதை முடிந்த மட்டும் குறைத்து கொள்ள வேண்டும். 340 6. அறிவியல் முன்னேற்றத... |
குறைத்து எளிய வாழ்வு வாழப் பழகிக் கொள்ள வேண்டும். 7. சுற்றுப்புறத்துத் தூய்மை பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே எடுத்துச் சொல்ல வேண்டும். “ சுத்தம் சோறு போடும் ” “ கந்தையாளாலும் கசக்கிக் கட்டு ” “ கூழானாலும் குளித்துக் குடி ” போன்ற பழமொழிகளின் பொருளை மக்களுக்கு உணர்த்தல் வேண்டும். 8. நாம் மட்டும் தூய்மையாக இருந்தால் போ... |
எவ்வாறு சுற்றுச் சூழலோடு தொடர்பு கொண்டுள்ளது என தெரிந்து கொள்வது நன்று. 10. இந்திய மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினார்கள் என்பதையும் , அதனால் நோயற்ற வாழ்வு வாழ்ந்தனர் என்ற விழிப்புணர்வையும் மக்களிடையே பரப்புதல் அவசியம். 11. உலக பூமி தினம் , உலக சுற்றுப்புறச் சூழல் தினம் , உலக சுகாதாரதினம் போன்ற தினங்களை மாணவர்கள... |
தவிர்க்க வேண்டும். 14. நீர்நிலைகளை மாசு படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். 15. இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ வேண்டும். 341 Page 195 of 201 பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1. சுற்றுச்சூழல் கல்வி என்றால் என்ன ? 2. சூழ்நிலையியல் கல்வி என்பது என்ன ? 3. கோலஜி ( Ecology ) என்றால் என்ன ? 4. சூழ்நிலைத் தொகுப்பு ( Eco S... |
சிறப்பினைக் கூறுக. ? 3. இந்தியப் பண்பாட்டில் நதிகளுக்கு அளிக்கப்படும் சிறப்பினைக் கூறுக ? 4. இந்தியப் பண்பாட்டில் மரங்களுக்கு அளிக்கப்படும் சிறப்பினைக் கூறுக ? 5. இந்தியப் பண்பாட்டில் பறவை மற்றும் விலங்குகளுக்கு அளிக்கப்படும் சிறப்பினைக் கூறுக ? இ. ஒரு பக்க அளவில் அல்லது முப்பது வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. சுற்றுச் ச... |
பற்றி கட்டுரை வரைக. 342 நேரம் : 3 மணி இந்தியப் பண்பாடு மாதிரி வினாத்தாள் மதிப்பெண்கள் : 200 பகுதி - அ எல்லா வினாக்களுக்கும் விடையளி. ஒவ்வொன்றிற்கும் ஓரிரு வரிகளில் விடையளி. 15 x 2 = 30 1. பண்பாடு பற்றி வால்டேர் கூறுவது யாது ? 2. உலகின் உறுதிப் பொருள்கள் யாவை ? 3. இந்தியாவின் உயரிய தனிச் சிறப்பு யாது ? 4. சிந்துவெளி நாக... |
இந்து சமயத்தின் சிறப்பம்சம் யாது ? 10. ' நிஷ்காமகர்மா ’ என்றால் என்ன ? 11. மௌரியர்கள் பற்றிய ஆதாரங்கள் யாவை ? 12. குடவோலை முறை என்றால் என்ன ? 13. வீரமா முனிவர் எழுதிய நூலின் பெயர் என்ன ? 14. ' சிவஞானபோதம் ' இயற்றியவர் யார் ? 15. சுற்றுச்சூழல் கல்வி என்றால் என்ன ? பகுதி ஆ எவையேனும் ஆறு வினாக்களுக்கு ஒவ்வொன்றிற்கும் பத்த... |
யாவை ? 19. கற்புடைமை பற்றி சங்க இலக்கியங்கள் கூறுவன யாவை ? 20. இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசைக்கு ஆற்றிய அரும்பணி யாது ? 21. உலகத் தோற்றம் பற்றி தொல்காப்பியர் கூறுவன யாவை ? 22. ' குடைவரைக் கோயில் ’ விளக்குக. 23. பக்தியின் இருவகைகளை விவரி. பகுதி இ எவையேனும் ஆறு வினாக்களுக்கு ஒவ்வொன்றிற்கும் ஒரு பக்க அளவில் விடை... |
தொகுத்து எழுதுக. 27. சோழர்கால சமூக நிலை மற்றும் சமய நிலையை விவரி. 28. கிறித்துவர்கள் ஆற்றிய சமுதாய நல்வாழ்வுப் பணிகளைப் பற்றி விவரி. 29. பக்தி இயக்கத்தின் விளைவுகள் யாவை ? 30. இந்தியப் பண்பாடு வெளிநாடுகளில் பரவிய முறையை விவரி ? 344 31. சுற்றுப்புறச் சூழலைப் பேணுவதில் மாணவர்களின் பங்கை எழுதுக. பகுதி ஈ எவையேனும் நான்கு வ... |
வரைக. 34. பழந்தமிழரின் சீரிய பண்பாட்டுக் கூறுகளைத் தொகுத்து ஒரு கட்டுரை வரைக. 35. இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியர்களின் கொடை மற்றும் கலையம்சங்களைக் குறித்து ஒரு கட்டுரை வரைக. 36. உலகப் பண்பாட்டிற்கு இந்தியாவின் கொடை என்ற தலைப்பில் நீவிர் தரும் செய்திகளை விவரி. 37. இந்தியப் பண்பாடும் சுற்றுப்புறச் சூழலும் பற்றி ஒரு கட்டுர... |
ந.சி. ( 1966 ). தமிழர் பண்பாடு. சென்னை. கல்யாணசுந்தரனார் , வி. ( 1975 ). மனித வாழ்க்கையும் காந்தியடிகளும். சென்னை கேந்திரத் தொண்டர் , ( 2003 ). பாரதப் பண்பாடு. தூத்துக்குடி. சந்திரசேகரன் , P. ( 2001 ) , தமிழக வரலாறு. ராஜபாளையம். சுப்பிரமணியன் , ( 1987 ). இந்தியப் பண்பாட்டு வரலாறு. மதுரை. சுவாமிநாதன் , A. ( 1984 ). தமிழ... |
பண்பாட்டு வரலாறு. சென்னை. சேதுராமன் , G. ( 2001 ) , தமிழக வரலாறு. ராஜபாளையம். தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் , ( 2004 ). வரலாறு மேல் நிலை முதலாம் ஆண்டு. சென்னை. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் , ( 2001 ). சமூகவியல். ஒன்பதாம் வகுப்பு. சென்னை. தமிழக அரசு பாடநூல் நிறுவனம் , ( 1996 ). இந்தியப் பண்பாடு. சென்னை. 346 பரிமேலழகர் உரை.... |
தஞ்சாவூர். புரட்சிதாசன் , ( 1993 ). சிந்துவெளி. சென்னை. மெர்சிபாஸ்கர் , ( 2004 ) , சுற்றுச்சூழல் புதிய கல்வி. திண்டுக்கல். லஷ்மணள் , கி. ( 2002 ). இந்திய தத்துவஞானம். சென்னை. ஸ்ரீசத்யசாய் புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன்ஸ் , ( 2003 ). தெய்வத்திருவாக்கு. சென்னை. ஸ்ரீ சத்யசாய் பாலவிகாஸ் கல்வி அறக்கட்டளை , பிரசாந்தி நிலையம். ( 198... |
For More Materials அத்தியாயம் 1 அரசின் வளர்ச்சி ‘ அரசு ’ என்பது மனித சமுதாயத்தின் வாழ்விற்கும் வசதிக்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு இன்றியமையாத அமைப்பாகும். ‘ அரசு ’ இயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட அத்தியாவசியமான அமைப்பாகும். பல்வேறு அரசியல் அறிஞர்கள் ‘ அரசு ஒரு தேவையான துன்பம் ’ என்ற கூற்றை ஆமோதித்துள்ளனர். லாஸ்கி , “ அரசு என்ப... |
தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாக அரசு கருதப்படுகிறது. பைனர் என்பவர் , அரசு இல்லையெனில் உலகில் சச்சரவும் குழப்பங்களுமே மிஞ்சும் என குறிப்பிடுகிறார். இவ்வத்தியாயத்தில் , அரசின் வளர்ச்சி குறித்து காண்போம். நாம் காணும் தற்கால அரசு , பல காலகட்டங்களில் பலவாறாக உருவெடுத்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது. எனினும் , இதுதான் அரசின் பரிண... |
பேரரசாக , கிரேக்க நகர அரசாக தற்போதைய மக்கள் நல அரசாக மாறுவதற்கு முன் உருப்பெற்றிருந்திருக்கிறது. கீழே சில முக்கியமான வகை அரசுகள் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. 1. நகர அரசு 2. நிலப்பிரபுத்துவ அரசு 3. தேசிய அரசு 4. சமஉடைமை அரசு , மற்றும் 5. மக்கள் நல அரசு. நகர அரசு பழமைப் பேரரசு முடிவுக்கு வந்த பின்னர் கிட்டத்தட... |
முதலில் அரசியல் சிந்தனையின் , முக்கியத்துவத்தை உணர்ந்து நடைமுறைப்படுத்தின. கிரேக்கர்கள் , ‘ அரசியல் ’ என்பதை வெறும் தர்க்க , தத்துவார்த்த நிலைகளிலேயே வைக்காமல் வாழ்க்கையோடு இணைத்து அதையே அரசாங்கமாகவும் ஏற்படுத்தி பெருமை பெற்றார்கள். ஐரோப்பாவில் புலம் பெயர்ந்த கிரேக்கர்கள் , சிறு சிறு குழுக்களாக பிரிந்து , ஆங்காங்கே மலை... |
அவ்வகை ஆட்சி முறை , பழங்குடியினரின் நிர்வாகத்தினை ஒத்திருந்தது எனலாம். இத்தகைய உள்ளாட்சி நிர்வாகமானது காலப்போக்கில் உருப்பெற்று நகர அரசாக திகழ்ந்தது. கிரேக்க நகரம் , எல்லா வகையிலும் , நவீன அரசின் அத்தனை அம்சங்களையும் கொண்டு உண்மையான அரசாக இருந்ததெனக் கருதப்படுகிறது. மக்களுடைய அரசியல் , பொருளாதார , அறிவார்ந்த , ஒழுக்க வ... |
கிரேக்க நகர அரசுகள் அனைத்தும் அளவில் சிறியவைகளாகவும் மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கையும் கொண்டவைகளாக இருந்தன. இத்தகைய அரசில் மட்டுமே சமூக , பொருளாதார , அறிவியல் சார்ந்த வாழ்க்கை அமைய முடியும் எனக் கருதப்பட்டது. இக்கருத்தை அரிஸ்டாட்டிலும் வலியுறுத்தியுள்ளார். வரி செலுத்துதலும் , தேர்தலில் வாக்களிப்பதும் மட்டுமே குடிமக... |
அவனுடைய கடவுள்களாக பாவித்தான். அனைத்து விழாக்களிலும் அவன் பங்கு பெற்றான். அரசும் சமுதாயமும் இருவேறு அமைப்பன்று , அவை ஒன்றே என்ற நிலை அக்காலத்தில் இருந்தது. கிரேக்க நகரம் அரசு , திருச்சபை , பள்ளி என்கிற அமைப்புகளின் ஒட்டுமொத்த அமைப்பாக இருந்து மனித வாழ்க்கையை முழுவதுமாக ஆக்ரமித்தது. நல்வாழ்க்கையை பெற்றுத் தருவதுதான் அரச... |
காணப்படவில்லை. ஆயகலைகள் அறிவியல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை அடைய அரசு பங்காளியாக இருக்கிறது என்னும் எட்மண்டு பர்க்கின் கருத்தையொட்டியதாகவே கிரேக்க நகர அரசு திகழ்ந்தது. ஏதென்ஸ் நகர அரசு புகழின் உச்சத்திலிருந்த போது கிரேக்கத்தின் சிறந்த அரசியல் கருத்துக்களின் பிரதி பிம்பமாகக் கருதப்பட்டது. கிரேக்க நகர அரசுகளில் நேரடி மக்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.