text
stringlengths
11
513
பகைவர்க்கு அடிமையாகி விடுவோம். 9. குடும்பம் நடத்துகையில் வந்த குறைபாடுகள் சோம்பலை ஒழிக்கவே நீங்கிப்போம். சோம்பலிற் பட்டுச் சுறுசுறுப்பு இல்லாதவர்க்குக் குடும்பமும் அழியும் , குற்றமும் பெருகும். 10. திருமால் தாண்டிய உலகம் முழுதும் சோம்பல் இல்லா மன்னவன் அடைவான். 63. இடுக்கண் அழியாமை எளிய உரை 1. துன்பம் வரும்போது கேலிசெய்...
நல்லுறவு இருப்பினும் சோம்பேறி பெரும்பயன் அடையான். துன்பங் கண்டு துன்பப் படாதவர் துன்பத்தைத் துன்பப் படுத்துவர். கடினப்பாதை செல்லும் காளைபோன்றவனுக்கு வந்த துன்பமன்றோ துன்பப்படும். அடுக்கடுக்காக வரினும் அசையாதவனுக்கு வந்த துயரமன்றோ துயரப்படும் ! செல்வம் வந்தபோது பற்றற்று இருப்பவர் போனபோது துயரப் படுவாரோ ? இவ்வுடம்பு நோய்...
துன்பத்தை இன்பமாகக் கருதுபவனுக்கு எதிரியின் மதிப்பும் கிடைக்கும். . 3. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒவ்வாக்கால் செல்லும்வாாய் நோக்கிச் செயல் 5. பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருஸ்தீர எண்ணிச் செயல். முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். 68. வினைசெயல்வகை சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் ...
அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைவென் கொள்வர் பெரியார்ப் பணிந்து. 73. அவை அஞ்சாமை வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகை அறிந்த தூய்மை யவர். கற்றாருள் கற்றார் எ...
தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். 7. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. 8. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும். நல்லார் அவைஅஞ்சு வார். உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்...
வேண்டியதைக் கடத்தாதே. 3. முடிந்தவரை தூதால் முடித்துக்கொள்ளல் நன்று ; முடியாக்கால் பலிக்குமுறை பார்த்துச் செய்க. காரியக்குறை பகைக்குறை என்ற இரண்டும் நெருப்புக்குறை போல வளர்ந்து அழிக்கும். 10. சிற்றரசர் குடிமக்கள் நடுங்குவது கண்டு தூதுவரின் பேரரசரைப் பணிந்து கொள்வர். 73. அவை அஞ்சாமை - எளிய உரை 1. சொற்பொழிவை அறிந்தவர் பாக...
செய்க. ஒருசெயலைச் செய்பவன் செய்யும்முறை அதனை நன்கறிந்தவனது உறுதியைப் பெறுதல். யானையைக் கொண்டு யானை பிடிப்பதுபோல ஒருசெயலால் இன்னொன்றையும் செய்துகொள். நண்பர்க்கு நல்லன செய்தலைக் காட்டிலும் விரைவாகப் பகைவரை அணைத்தல் வேண்டும். கற்றவருள் கற்றார் எனப்படுவார் யார் ? கற்றவர்முன் எடுத்துச் சொல்ல வல்லவரே. போரில் சாக அஞ்சாதவர் மி...
வீரர் அல்லார்க்கு வாளோடு என்ன உறவு ? மேடைஅஞ்சுவார்க்கு நூலோடு என்ன உறவு ? 8. நல்லவையில் எடுத்துச் சொல்ல இயலாதவர் பல படித்தும் பயனில்லை. மேடையில் அஞ்சுபவன் கற்ற நூற்படிப்பு போரில் பேடி பிடித்த கூரியவாள் போலும். 9. படித்தறிந்தும் நல்லவையில் பேச அஞ்சுபவர் படியாதவரினும் கீழ் என்பார்கள். மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர் வா...
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. 75. அரண் ஆற்று பவர்க்கும் அரண்வொருள் அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள். மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடையது அரண். உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவுஅரண் என்றுரைக்கும் நூல். சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண். 7. முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்...
பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண். முனைமுகத்து மாற்றவர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்டது அரண். எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண். 74. நாடு எளிய உரை 1. குறையாத விளைச்சலும் நடுநிலைமை யாளரும் சோர்விலாத வணிகரும் உடையது நாடு. 2 பொருட் பெருக்கத்தால் விரும்பத் தக்கதும் கேடின்றி மிக விளைவதும் நாடு...
நாட்டிற்கு அணி என்பர். 9. தன்னிறைவுடைய வளநாடே உரிமை நாடு ; பிறநாட்டை எதிர் நோக்கும் நாடு நாடன்று. 10. மேலைச் சிறப்பெல்லாம் இருந்தும் பயனில்லை நல்லாட்சி இல்லாத நாடு. 75. அரண் எளிய உரை போர்மேற் செல்வார்க்கும் மதில்வேண்டும் ; அஞ்சித் தற்காப்பவர்க்கும் அது வேண்டும். உயரம் அகலம் உறுதி அருமை நான்கும் அமைந்ததே அரண் என்று நூல்...
கொண்டுபோய் உதவும் நல்லாளும் உடையதே அரண். 8. வலுவாகச் சூழ்ந்து வளைத் வளைந்தோ திடீரெனத் தாக்கியோ வஞ்சித்தோ பிடிக்க முடியாதது அரண். ரயும் நிலைதளராது நின்று வெல்வதே அரண் , 9. போர்முனையில் பகைவர் ஓடுமாறு போர்வினையில் பெருமிதச் சிறப்புடையதே அரண். அரண் எவ்வாற்றல் உடையதாக இருந்தாலும் பேராற்றல் இல்லாதார்க்குப் பயன் இல்லை. 98. ப...
கீழல்லார் கீழல் லவர். ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு. 5. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல். 6. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும்தான் சீரல் லவர்கண் படின். 8. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன...
செய்து முடிப்பர். 6. பெரியவர்களைப் போற்றிக் கொள்ளும் கருத்து சிறியவர்கள் அறிவிற் படுவதில்லை. சிறப்புக்கள் இழிந்தவர்களைச் சேருமாயின் தாறுமாறான காரியங்களே நடக்கும்.. பெருமை எளிய உரை ஊக்கம் மிகுதியே ஒருவர்க்கு மதிப்பாகும் ; அதனை விட்டு வாழ்தல் என்பது குறைவாகும். ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும் செயல் வேற்றுமையால் சிறப்பு...
: தற்புகழ்ச்சி பாடுதல் சிறுமையின் இயல்பு. தற்செருக்கு இன்மை பெருமையின் குணம் ; தற்செருக்கின் வடிவு சிறுமையின் குணம். 10. பிறர் குற்றம் மறைத்தல் பெருமையின் இயல்பு ; குற்றமே கூறுதல் சிறுமையின் இயல்பு. வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும் ; அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என...
பள்ளியின் தகவல்பலகையில் காட்சிப்படுத்தலாம். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியை வகுப்புவாரியாக நடத்தலாம். திருக்குறள் கலைவிழாக்கள் , ஓவியக் கண்காட்சிகள் , நாடக விழாக்கள் , குறளின் பொருளை வாழ்வியல் அனுபவங்களோடு பொருத்துதல் , குறளை இசையமைத்துப் பாடுதல் போன்ற நிகழ்வுகளைப் பள்ளிகளில் ஒருங்கிணைக்கலாம். இலக்கிய மன்றக் கூட்டங்களி...
திருக்குறள் கருத்துகளை விளக்கலாம். பள்ளி சார்ந்த அழைப்பிதழ்கள் , பரிசுச் சான்றிதழ்களில் திருக்குறளை அச்சிட்டு வழங்கலாம். உலகப் பொதுமறையாம் திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள் , இசைப்பாடல்கள் , சித்திரக் கதைகள் , அசைவூட்டப் படங்கள் வாயிலாகத் திருக்குறள் வளங்களை மாணவர்களிடம் ...