template_id int64 | template_lang string | inputs string | targets string |
|---|---|---|---|
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அன்றைக்குக் கடைசி ஆடி. ஊர் முழுக்க தோசை வாசனை கம்ம்மென்று முறுகல் மணல். ஆட்டுரல்களில் சட்னி ஆட்டுகிற கடகடா சப்தம். வழக்கத்துக்கு மாறாக... காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிறான் சீனிவாசன். ஒரே பரபரப்பு. அங்கேயும் இங்கேயுமாய்ப் பாய்கிறான். ஆளைக் கையில் பி... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காட்டு ருசி' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஓர் ஊரில் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தாள் ஒருத்தி. அவளுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். மூவருமே அழகிகளாக விளங்கினார்கள். எவ்வளவு உழைத்தும் அவர்களால் வயிறார உண்ண முடியவில்லை. வறுமையில் வாடினார்கள். ஒருநாள், அவர்கள் வீட்டிற்கு அழகான இளைஞன் ஒருவன் வந்த... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மூட்டையை வைத்தால்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: குரு, சீடர்கள், பூர்வாசிரமம், ஆயுதங்கள், தியானம், குழப்பம், தவறு, இயல்பு
தலைப்பு: குரு சிஷ்யன்
| ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர். ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?" ‘நிஜம்தான்.. ஆனால் அதெல்ல... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், “ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!” என்றா... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சிறந்த ஆயுதம்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பெண், குழந்தை, கணவன், பணக்காரி, ஞானி, டாக்டர், இனிப்பு, அறிவுரை, உடல்நிலை
தலைப்பு: அறிவுரைக்கான தகுதி
| ஒரு பெண் தனது குழந்தையினால் மிகவும் தொந்தரவுக்குள்ளானாள். அவளுக்கு ஒரே ஒரு குழந்தை. அவளது கணவன் இறந்துவிட்டான். அவள் பெரும் பணக்காரிதான். ஆனால் அவளுக்கு வாழ்வில் மிகவும் சலிப்பாகிவிட்டது. அவள் தனது குழந்தைக்காகத்தான் வாழ்ந்தாள். சில சந்தர்ப்பங்களில் குழந்தைகள் மிகவும் தொந்தரவாகி விடுவர். அந்த பையன் இனிப்பைத் தவிர வேறு ... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், சீடர்கள், பின்னிரவு, பயணம், ஆறு, மரத்தடி, விழிப்பு, தூக்கம், கொள்ளிக்கட்டை, அக்கரை, அபிஷ்டு, வழிப்போக்கன்,கோயில், மந்திர சக்தி, முதுகு
தலைப்பு: காணாமல் போனது யார்?
| பொழுது விடியாத பின்னிரவு நேரத்தில் பரமார்த்த குரு பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஆறு ஒன்று குறுக்கிட்டது. ஆறு வேகமாக சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஆற்றில் சல சல இரைச்சல் இருப்பதால் அது விழித்துக் கொண்டிருக்கிறது என்று குரு கருதினார். அதனால், இந்த வேளையில் ஆற்றைக் கடப்பது ஆபத்து எனப் பயந்தார். எனவே, ஆறு தூங்கும் வேளையில்... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: எப்படியோ அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆகி விட்டார், பரமார்த்த குரு. அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். "நம் குரு முதல் அமைச்சர் ஆகிவிட்டதால், இனி கவலையே பட வேண்டாம்" என்று சந்தோஷம் கொண்டனர், ஐந்து சீடர்களும் ... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தண்டச் சோற்றுத் தடிராமன்கள்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, “என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவ... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பட்டாணி' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: போலிச்சாமியார், தெனாலிராமன், போதை மருந்து, கழுதைகள், குழி, கூன், மன்னர்
தலைப்பு: கூன் வண்ணான்
| ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள். இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சா... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கிழவன், மனைவி, பூனை, மகன், இளவரசன், நரி, அரண்மனை, கொடுமை, வீரர்கள்
தலைப்பு: ஒருவர் மட்டும் போதாது
| ஓர் ஊரில் கிழவன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு பூனையை அவர்கள் அன்பாக வளர்த்து வந்தார்கள். முதுமையான அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். மகன் குழந்தையாக இருக்கும் போதே அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். அந்தக் குழந்தையை பூனை வளர்க்கத் தொடங்கியது. எங்கிருந்தோ பறவையின் மெல்லிய இறகுகளைக் கொண்டு வந்தது. அதில் மெத்த... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கிருஷ்ண தேவராயர், தெனாலிராமன், கருப்பங்கழி, சேனாதிபதி, ராஜகுரு
தலைப்பு: கருப்பங்கழி!
| விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, "அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்?" என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான். ஒரு... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பல், நாய்கள், பயந்தாகொள்ளிகள், தைரியசாலி, குழந்தை, கரும்பு, தங்க மோதிரம், யானை
தலைப்பு: குழந்தையின் அழுகை
| அக்பர் சக்கரவர்த்தியைக் காக்காய் பிடிப்பதற்காக அவருடைய சில அதிகாரிகள் எப்போதும் அவரைச் சூழ்ந்து கொண்டு, அவர் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய செயலைக் கண்டு முகம் சுளித்த பீர்பல், ‘இவர்கள் அக்பரின் பணிஆளர்களா, இல்லை எதற்கெடுத்தாலும் வாலையாட்டும் நாய்களா?" என்று எண்ணினார். தன் மனத்தில் தோன்றியதை... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சமுராய் போர் வீரன், ஸென் ஆசிரியர், பௌர்ணமி, மரம்
தலைப்பு: சாமுராயும் மரமும்
| தன்னை உயர்வாக மதித்துக்கொள்ளக் கூடிய ஒரு சமுராய் போர் வீரன் ஸென் ஆசிரியர் ஒருவரை சந்திக்கச் சென்றான். சமுராய் போர் வீரன் தன் வீர தீரச் செயல்களால் மக்களிடத்தில் புகழும் செல்வாக்கும் பெற்றவன். ஸென் ஆசிரியரின் தோற்ற அழகினையும் இனிய பண்பும் அருள் நிறைந்த மனத்தினையும் பார்த்தவன் தீடிரென தன்னை தாழ்வு மனப்பான்மையுடன் நினைக்க ... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஜுபிடர், ஒட்டகம், காளை, கரடி, சிங்கம்
தலைப்பு: ஜூபிடரும் ஒட்டகமும்
| கடவுளான ஜுபிடரிடம் ஒரு நாள் ஒட்டகம் ஒன்று வந்து புலம்ப ஆரம்பித்தது. "மற்ற மிருகங்களோடு ஒப்பிட்டால் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ, யாரையும் தாக்கவோ எதுவுமே எனக்கு நீங்கள் தரவில்லை" என்றது ஒட்டகம். "காளை மாட்டுக்கு கொம்பகள் இருக்கின்றன. கரடிக்கு நீண்ட பற்கள்; சிங்கத்திற்கும் புலிக்கும் வலிமையான நகங்கள். இதனால், எல்லா மிரு... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு முறை விவசாயி ஒருவர் தன்னுடைய கழுதையை விற்று விடத் தீர்மானித்தார். அருகிலுள்ள கிரமாத்துக்குத் தன் கழுதையையும், மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்தே போனார்கள். செல்லும்போது அதைப்பார்த்த வழிப் போக்கர் ஒருவர... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'விவசாயி, மகன், கழுதை' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மரியாதை இராமனுக்குப் பேரும் புகழும் சேரச் சேர, ராமன் அந்த ஊரில் மட்டும் அல்ல, அண்டை நாடுகளிலும் பிரபலம் ஆனான். வழக்கு என்றால், நீதிபதி முதல் கடைசி ஆள்வரை ஒரே கோணத்தில்தான் ஆராய்வார்கள். ஆனால், மரியாதை இராமன் யார் மீது கொஞ்சம்கூட சந்தேகம் இல்லையோ அவரைப் பி... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நீயா கொலைகாரி?' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், சீடர்கள், கந்தபுரம், நரபலி, சாமியார் நாகப்பா, காளி கோயில், மண்டை ஓட்டு மாலை, கொடுவாள், பல்லி
தலைப்பு: நரபலி சாமியார் நாகப்பா
| பரமார்த்தரும் சீடர்களும் கந்தபுரம் என்ற ஊருக்குள் நுழைந்தார்கள். அப்போது அந்த ஊர் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் நரபலி சாமியார் நாகப்பா அந்த ஊரில் உலவுகிறான் என்பதுதான்! "குருவே! நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் நமக்கே ஆபத்தாக முடிகிறதே! அது ஏன்?" என்று மட்டி கேட்டான். "நாம் எல்லோரும் போன பிறவ... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.பழங்கள் மேஜைமீது ஒரு... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மறைக்க முடியாத பொய்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, “அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிற... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கருப்பங்கழி!' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கிருஷ்ண தேவராயர், அப்பாஜி, கப்பம், மன்னர், ஆடுகள்
தலைப்பு: கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி மந்திரி ஆன கதை
| விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி என்று ஒரு மந்திரி இருந்தார். அவர் இதற்கு முன் கிருஷ்ணதேவராயருக்குக் கப்பம் கட்டும் ஒரு குறு நில மன்னரிடம் மந்திரியாக இருந்தார். அந்த மன்னர் ஏதோ காரணத்தால் வரிசையாக சில ஆண்டுகள் கப்பம் கட்ட இயலவில்லை. கிருஷ்ண தேவராயரின் கோபத்துக்கு அஞ்சினார். அவர் சர்வ சாதாரணமாக சம்பந்தப்பட்ட ம... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பல், கிழவி, குல்ஷா, சுந்தரி பாய், பத்ரிநாத், புறாச்சின்னம், தங்க நாணயங்கள், செப்பு நாணயங்கள்
தலைப்பு: செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள்
| சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செய்தி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் பிரபுக்கெதிராக கூறப்போகும் புகாரை அக்பர் நம்புவாரா என்ற சந்தேகமு... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, நண்பர், கழுதை, இரவல்
தலைப்பு: கழுதையால் கிடைத்த பாடம்
| ஒருநாள் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்தார். " முல்லா அவர்களே! உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து
இரவலாகத் தாருங்கள் இரண்டு நாட்கள் கழிந்ததும் திருப்பி தந்துவிடுகிறேன் " என்றார்
நண்பர். அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை இரவல் வாங்கிச் சென்றதுண்டு.
அப்பொழுதெல்லாம் சொன்ன நாட்கள... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: விக்கிரமன், வேதாளம், கபாலி, வியாபாரி பத்மநாபன், வியாபாரியின் மகள் பிரத்யுஷா, பத்மநாபநின் நண்பன் மகன் ஆனந்தன், வைத்தியர் தனஞ்சயன், சீடன் சஞ்சய், ஆனந்தனின் நண்பன் சிவநாதனு, கிழவர், கிழவி, இளவரசி, மகாதம்பன் என்ற மந்திரவாதி
தலைப்ப... | தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்இருந்த வேதாளம் விக்கிரமனிடம், "மன்னா! ஆவிகளும், பேய்களும் உலவும் இந்த பயங்கர வனத்தில் நீ எதற்காக இவ்வாறு அலைந்து திரிகிறாய் என்று எனக... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, குளக்கரை, நடமாட்டம், தற்பெருமைக்காரர்
தலைப்பு: தற்பெருமை
| ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து
கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார்.
முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால் முல்லாவைக் காப்பாற்றியவரோ சும்மா... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: கிடைத்ததில் சம பங்கு ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கிடைத்ததில் சம பங்கு' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சென் துறவி, மாணவன்
தலைப்பு: அப்படியானால் நீயே வைத்துக் கொள்
| சென் துறவி ஒருவர் தனது 60வது வயதில் தான் ஜென் தத்துவங்களைப் படிக்க ஆரம்பித்தார். தனது 80வது வயது வரை படித்தார். பின்னர் தான் காலமான 120ம் வயது வரை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அந்த துறவியிடம் மாணவன் ஒருவன்… ஒரு மாணவன், ‘குருவே, என் மனதில் எதுவுமே இல்லையென்றால் என்ன செய்வது?" என்றான். குரு, ‘அதைத் தூக்கி எறிந்து வ... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: பீர்பாலின் நகைச்சுவையான பேச்சுகளை அக்பர் மட்டுமன்றி தர்பாரில் பலரும் ரசித்தனர். ஆனால், சிலருக்கு மட்டும் பீர்பாலுக்குக் கிடைத்த பாராட்டுகள் பொறாமையை அளித்தன. ஒவ்வொரு முறையும் அக்பர் மனந்திறந்து பீர்பாலைப் பாராட்டுகையில், அவர்களுடைய மனம் பற்றியெரிந்தது. ... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முட்டாள்களின் கேள்விகள்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு சமயம் பா'ன் யூன் என்ற துறவி, சா'ன் ஆசிரியர் ஷிடோவை முதன் முதலில் சந்தித்த போது, "எல்லா தர்மங்களின் துணையினையும் உதறித் தள்ளிய மனிதர்கள் எப்படிப் பட்ட மனிதர்களாக இருக்க முடியும்?" என்று கேட்டான். கேட்டவனின் வாயை அப்படியே தனது கைகளால் பொத்தினார் ஷிடோ. த... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நதியினைக் குடி' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில்தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தி, பின்னர் அதைத் தோளில் சுமந்து கொண்டுசெல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா? நீவீரமும், பராக்கிரமும் மிகுந்தவன் என்பதில் சந்தேகமில்லை. ஒர... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வாரிசாகத் தகுதியானவன் யார் ?' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முன்னொரு காலத்தில் மோஜுத் என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் தான் சிறு அதிகாரியாக பதவி வகிக்கும் ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தான், மற்றும் அவன் எடைக்கற்களை பரிசோதிக்கும் அதிகாரியாகவே கடைசி வரை தன் நாட்களை கழித்துவிடுவான் என்பது போல தோன்றியது. ஒருநா... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மோஜுத்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முல்லாவின் நண்பர் ஒருவர் பெரிய பணக்காரர். அவர் வீட்டுக்கு முல்லா செல்லும் போதெல்லாம் பணக்காரர் தமது திரண்ட சொத்துக்களை தம் மக்களுக்கு எவ்வாறு பிரித்து உயில் எழுதி வைப்பது என்பது பற்றியே அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்.உயிலை எழுவதால் அவருக்கு சிக்கல் ஏதும் ... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முல்லாவின் உயில்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முனிவர் சித்தானந்தர், பணக்கார பெண்மணி, சிறிய பெண் குழந்தை, சீடர்கள், வயதான மூதாட்டி, பணியாள், ஏழை விதவைப் பெண்
தலைப்பு: குருவின் நல்ல உள்ளம்
| ஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர். ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. குழந்தைகள்... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தரு, பரமார்த்தகுருவின் சீடர்கள், முட்டாள், மூடன், மட்டி, நாட்டு அரசன், தளபதி
தலைப்பு: தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது
| திடீரென்று பரமார்த்தரின் படுக்கை அறை தீப்பிடித்து எரிந்து போனது. அத்துடன் குருவின் தாடியும் கொஞ்சம் பொசுங்கி விட்டது! அதைக் கண்டு சீடர்கள் ஐவரும் கவலையுடன் இருந்தனர். குருதேவா! உங்கள் மூன்றடி நீளமுள்ள தாடி, இப்படிக் குறுந்தாடியாக ஆகிவிட்டதே! என்று அழுதான், மட்டி. போனால் போகட்டும். இதற்காகக் கவலைப் படாதீர்கள். மீசை குறை... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, காதலி, கண்ணாடி, ஊசி, எருமை மாடு, கண் டாக்டர்
தலைப்பு: முல்லாவின் காதலி
| முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது.ஆகவே அவர் கண் டாகடரிடம் கேட்டார் :"கண்ணுக்கு சோடாபுட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள்?அவளுடைய முகம் கூட எனக்கு சரியாகத் தெர்யவில்லையே! நான் கண்ணாடி போட்டபடி அவள் எதி... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர்
கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து
அவள் கஷ்ட ஜவனம் நடத்திக் க... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'எதிர்கால வாழ்க்கை' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: நாய், சிப்பி, முட்டை
தலைப்பு: நாயும் சிப்பியும்
| ஒரு ஊரில் நாய் ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் முட்டைகளை சாப்பிட்டே பழக்கம். ஒரு நாள் அது முட்டை வடிவில் இருந்த ஒரு சிப்பியைப் பார்த்தது. உடனே முட்டை என்று நினைத்து அப்படியே கவ்வி, விழுங்கிவிட்டது. ஆனால், விழுங்கியது சிப்பி என்பதால், நாயின் வயிறு கடுமையாக வலிக்க ஆரம்பித்தது. "எனக்கு இது தேவைதான். முட்டை வடிவில் ... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சிறுவர்கள், கடைக்காரன், கோபால், பானை செய்பவர், இனிப்பு, கடைக்காரனின் மகன், எறும்பு
தலைப்பு: எறும்பு தின்னது
| சித்தனூரில் இனிப்பு கடை ஒன்று இருந்தது. சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைக் கண்டால் பிடிக்காது. அவர்கள் மீது எரிந்து விழுவான். அவர்களால் ஏதேனும் வேலை ஆக வேண்டி இருந்தால் அவர்களை அழைப்பான். "இந்த வேலையை முடியுங்கள்; இனிப்பு தருகிறேன்" என்பான். அவர்கள் அதைச் செ... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அது ஒரு மலையடிவாரம். அதன் அருகே அழகிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கே ஆறு ஓடிக் கொண்டிருந்ததால் மலையடிவாரத்தில் பச்சைப் பசேல் என்று புல் வளர்ந்திருந்தது. மலையடிவாரத்தின் மேலே அங்கங்கே காணப்படும் சமபரப்புப் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முரட்டு ஆடு' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, முஸ்லீம்கள், தொழுகை, பிரார்த்தனை
தலைப்பு: பிரார்த்தனையும் மனிதனும்!
| பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு
கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப்
பார்த்து " அடடா நினைவு மறதியினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்து விட்டேன் "
எ... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பத்து விவசாயிகள், கடவுள்
தலைப்பு: முடிவுகளில் கவனம் தேவை
| சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது. பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர். வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இட... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மரியாதை இராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார். ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிட... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நேர்மை கொண்ட உள்ளம்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: புனிதர், வேலைக்காரன், அந்தப்பிரதேசம், குடிசை, உபசாரம்
தலைப்பு: வேலைக்காரனாய் வந்த புனிதர்
| அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர்பரவிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில்வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது. தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்"சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடுநாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம்அடைந்தார். குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிகவேலைலைக்கரன் வரவேற்றான்."நா... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பல், பக்கத்து ஊரு ராஜா, ரோஜா செடிகள், முட்டை கோஸ், மாட்டு வண்டி
தலைப்பு: பீர்பாலின் புத்திசாலித்தனம்
| பீர்பாலின் புத்திசாலித்தனம் எட்டுத் திக்கிலும் பரவி இருந்துச்சு. பக்கத்து ஊரு ராஜாவுக்கு ரொம்ப பொறாமை.. இப்படி ஒரு ஆள் நம்ம தேசத்துல இல்லயேன்ணு..எப்படியாவது இந்த பீர்பாலை அவமானப்படுத்தணுனு யோசிச்சிட்டிருந்தான்.ஒரு யோசனை தோணுச்சு.. உடனே தன்னோட நாட்டில இருக்கும் அனைத்து வகை அபூர்வ ரோஜா செடிகளையும் அக்பருக்கு பரிசா அனுப்ப... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு காட்டில் ஒரு காகம் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. அக் காகம் விவாகமாகி ஆண் காகமும் பெண்காகமும் அக்கூட்டிலே வாழ்ந்தனர். பல நாட்கள் சென்ற பின் பெண் காகம் 5 முட்டைகள் இட்டது. அதனைக் கண்ட ஆண்காகம் தான் ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையாக போவதையிட்டு மிக மகிழ்ச்சியடைந... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காகமும் மகாராணியின் நெக்கிளேசும்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், ஜமீன்தார் ஜம்புலிங்கம், துணி, கழுதை, திருடன்
தலைப்பு: உதைக்கிற கழுதையே உழைக்கும்
| குருதேவா! ஜமீன்தார் ஜம்புலிங்கம் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாம். அந்த வேலையைச் செய்தால் என்ன? என்று சீடர்கள் கேட்டனர். துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது? என்றார் பரமார்த்தர். கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோம... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம். அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன. பண்ணையாரிடம் வந்த அவன், " ஐயா! எல்லா நிலத்தில... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'குருவி கொடுத்த விதை' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: போர்வீரன், ஜென் குரு, நரகம், பிச்சைக்காரன், வாள், நரகத்தின் கதவுகள், சொர்க்கத்தின் கதவுகள்
தலைப்பு: அப்படியா,சேதி !
| ஹாக்கின் ஒரு ஜென் ஞானி. அவர் குடிசைக்கு அருகில் அழகிய ஜப்பானியப் பெண் தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். திடீரென அவள் கர்ப்பமானாள். பெற்றோர் பதறினர். குழந்தைக்குத் தகப்பன் யார் என அவள் கூற மறுத்தாள். மற்றவர் வற்புறுத்தலால் ஹாக்கின் தான் காரணமென்று கூறி விட்டாள். பெற்றோர் ஜென் ஞானியிடம் சென்று கோபப்பட்டு கத்தினார்கள். அவ... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான். முல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார். “ இங்கு... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கற்பனை காதலி' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர். ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்ப... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அன்பின் மதிப்பு' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது கி.பி., பதினெட்டாம் நுõற்றாண்டு. அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படையுடன் கடுமையாக மோத... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'புத்திசாலி ராணுவவீரர்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: வித்யாசாகர், பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா, இராமன், கட்டை, திலகாஷ்ட மகிஷ பந்தனம், கயிறு
தலைப்பு: புலவரை வென்ற தெனாலிராமன்
| ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல
சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது
என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம்
வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே
ஒருநாள் ... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சீலைப்பேன், மூட்டைப் பூச்சி, அரசன், அரசி, வேலைக்காரர்கள்
தலைப்பு: மூட்டைப்பூச்சியால் இறந்த சீலைப்பேன்
| ஓர் அரசனுடைய படுக்கையில் சீலைப்பேன் ஒன்று வாழ்ந்து வந்தது. அரசனும் அரசியும் உறங்கும் நேரம் பார்த்து அது அவர்கள் உடலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்து வந்தது. ஒருநாள் கொள்ளிவாய்ப் பிசாசு வந்ததுபோல் ஒரு சிறு மூட்டைப் பூச்சி அங்கு வந்து சேர்ந்தது. அது சீலைப் பேனை நெருங்கி, நான் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன்" என்று... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, அறிஞர்கள், குழப்பவாதிகள், ரொட்டி
தலைப்பு: குழப்பவாதிகள்
| முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார். அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: எப்பொழுதும் போலத் தான் அன்றைய பொழுதும் விடிந்தது தொழிலதிபர் ராஜசேகரன் இல்லத்திற்கு. வழக்கம் போல முதலில் தேநீர் முகத்தில் தான் முழித்தார் ராஜசேகரன். ஆனால் மனைவி வைஷ்ணவி இன்று போட்ட டீ இன்று மிகவும் நன்றாக தெரிந்தது இராஜசேகரனுக்கு. இராஜசேகரன் பிறப்பால் ஓர் ... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நடிகன் என்னும் பொய்வேஷம்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் சிறந்த ஸென் துறவியை சந்திந்து அவரிடம் ஞானம் பற்றி தெளிவு பெறுவதற்காக சென்றார். துறவி அமைதியாக தேனீரினை கோப்பையில் ஊற்றிக் கொண்டு இருந்த போது, பேராசிரியர் ஸென் புத்த மதத்தை பற்றியும் தியானம் பற்றியும் தனக்கு தெரிந்ததை பற்றி வலவ... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கோப்பையை காலி செய்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: தூரத்தில் தெரிகின்ற மேகங்களைப் போலவே உன் நினைவுகளும் கலைந்ததும் மறைந்து விடுபவையாய்...! கார்த்தி பஸ்ஸை விட்டு கிருஷ்ணாபுரம் காலனியில் இறங்கியபோது ஹேமா ஞாபகம் வராமல் இல்லை. மனதில் அழுத்திக் கிடந்த உணர்வுகள் தமிழ் மண்ணை மிதித்தும் பீறிட்டு வெளிக்கிளம்பிய போ... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தொலைந்து போனவர்கள்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மணிவண்ணன் என்பவர் ஒரு வியாபாரி தொழிலில் நல்ல இலாபம் வந்தபடியால் வைரக் கடுக்கன்கள் செய்து இரண்டு காதுகளிலும் போட்டுக் கொண்டார். ஒகு நாள் வியாபார நிமித்தமாக அவர் வெளியூர் செல்ல வேண்டி நேரிட்டது. இர்வு வெகு நேரமாகி விட்டதால் அங்குள்ள சத்திரத்தின் திண்ணையில் ... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காதுக் கட்டுக்கனைத் திருடியவன்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு வேலையில்லாத மனிதன் வெடவெடக்கும் குளிர்கால இரவில் புத்தருடைய கோயிலிற்கு வந்தான். கோயிலில் இருந்த புத்த விக்கிரத்திற்கு முன்பு மண்டியிட்டு அமர்ந்து தன்னுடைய பிரார்த்தனையை செய்தான். பிரார்த்தனையை முடித்தவன், கண்களில் பொலபொலவென கண்ணீர் வழிய சத்தமாக அழுது ... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'புத்தாவினை உடைத்துக் கொடு' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, கப்பல் பிரயாணம், பிரயாணிகள், பிரார்த்தனை, வாக்குறுதி
தலைப்பு: பிரார்த்தனை
| ஒரு தடவை முல்லா கப்பல் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். கப்பல் திசைமாறி தாறுமாறாக அலையத் தொடங்கியது. கரையே பல நாட்கள் கண்களில் தென்படவே இல்லை. உணவும் குடிநீரும் முற்றிலும் தீர்ந்து விட்டன. கப்பலின் பயணம் செய்தவர்களுக்குத் தாங்கள் உயிர்பிழைக்க மாட்டோம் என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது. அதனால் பிரயாணிகள் அனைவரும் தரையில் மண்ட... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, பள்ளி வாசல், குருநானக், நீதிபதி, கோழி, குர்ஆன்
தலைப்பு: கோழியால் வந்த குழப்பம்
| ஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். கருணையும் இரக்கமும் மிக்க ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரான அல்லாவின் திருப்பெயரால்…. இந்த சமயத்தில் குருநானக் அங்கு வந்தார் அவர் முகத்தில் புன் முறுவல் முல்லாவுக்கு கோபம் வந்து விட்டது. ஏன் சிர... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: வீட்டுக்காரர், முல்லா, விழா, பாத்திரங்கள், நையாண்டி, விசேஷம், தகனம்
தலைப்பு: குட்டி போட்ட பாத்திரம்
| ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து " என் வீட்டில் குடும்ப விழா
ஒன்று நடக்கிறது, புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை உங்களிடம் இருக்கும்
சொற்ப பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடும். வேலை முடிந்ததும் திரும்பித் தந்து
விடுகிறேன் " என்று கேட்டார். முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு மிகவும் பெரிய கெட்டி... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: குத்புதின் அன்சாரி, மனைவி, அம்மா, மகள், புறா, சப்தம்
தலைப்பு: கூக்குரல்
| நான் குத்புதின் அன்சாரி, வயது 29. தையல்காரன். அம்மா, மனைவி, மூன்று வயதுள்ள மகள் என சுருங்கியிருக்கும் என் குடும்பம் அகமதாபாத் பாபு நகர் காலனியில் வாழ்கிறது. உங்களுக்கு என்னைத் தெரியும். நான் காற்றின் தொடக்க காலமான ஜனவரியில் பாபு நகரில் மிகவும் உயரமான கட்டடத்தின் மேலே ஏறி பட்டம் விட்டவன். கடையை மூடிவிட்டு இரவில் வீட்டுக... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து
கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார்.
முல்லா அவருக்கு நன்றி சொ... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தற்பெருமை' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், தோட்டம், கீரை, பாத்திகள், பானை, வேர், மாடு, முனியாண்டி
தலைப்பு: தோட்டத்தில் மேயுது ...
| அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில் கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும். செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர். ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, "ஐயோ! போச்சு! போச்சு!" என்று அலறினான். பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள். மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கொக்கு, மீன்கள், நண்டு, செம்படவன்
தலைப்பு: நண்டு, கொக்கைக் கொன்ற கதை
| ஒரு குளக்கரை. கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. "நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்" என்று. "நமக்கேன்" என்று இராமல் அதன்முன் வந்தது. "என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்க... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சிங்கம், காகம், நரி, புலி, ஒட்டகம்
தலைப்பு: ஒட்டகத்தைச் கொன்ற காகம்
| ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அரசு செய்து கொண்டிருந்தது. அதற்கு அமைச்சர்களாக ஒரு நரியும், ஒரு புலியும், ஒரு காக்கையும் இருந்து வந்தன. ஒரு நாள் ஒட்டகம் ஒன்று வழிதப்பி அந்தக் காட்டுக்குள் வந்து விட்டது. அதைக் கண்ட காகம், சிங்கத்தினிடம் அழைத்துக் கொண்டு வந்து விட்டது. சிங்கம் அதற்கு அடைக்கலம் கொடுத்து, அதையும் தன் அமைச்சர்கள... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், “”மன்னா! யாரையாவது பழி தீர்ப்பதற்காக இந்த நள்ளிரவில் ம... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'புரிந்து கொள்ளாத மக்கள்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: உருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு விடையங்களில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களை... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உருவுகண்டு எள்ளாமை வேண்டும்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: வையாபுரி, பட்டினம், நகரம், கடற்கரை, முத்து வியாபாரி, மாணிக்கம், வீடு, அரண்மனை, ரத்தினம், வைரம், இறப்பு , உடல்நிலை, பேராசை, குளம், கோவில்
தலைப்பு: சாகாத வரம்
| வையாபுரி பட்டினம் என்ற நகரம் கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்தது. வையாபுரி பட்டினத்தில் முத்து வியாபாரி மாணிக்கத்தை தெரியாதவர் இருக்கமுடியாது. மாணிக்கத்தின் வீடு அரண்மனையைப் போல் விசாலமாக இருக்கும். முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபார... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர்
ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு
ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ராஜகுருவின் நட்பு' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: செந்தில், ராசாத்தி, சுப்பு, ஜெயலட்சுமி, லலிதா, வனஜா, வனஜாவின் கணவர், குடம்
தலைப்பு: ராசாத்தியின் கோபம்
| காலையில் ஆடு செத்துப் போச்சு. ஒரு வேளை ராத்திரி செத்தாலும், பூச்சுப்பட்டைக் கடிச்சு இருக்கும்னு நினைக்கலாம். அதுவுமில்லாமல், இப்பத்தான் செத்திருக்கு. செந்தில் "ஷிப்டு" முடிஞ்சு வரும்போது நல்லாத்தான் நின்றது. பக்கத்தில் நின்று பார்த்தார். ஆடு "மே" ன்னு கூப்பிட்டது. மூத்திரம் பேஞ்சது. புளுக்கை போட்டது. ரெண்டு குட்டிகளுக்... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: இரண்டு ஜப்பானியர்கள் நியுயார்க் சென்றார்கள். அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றார்கள். ஒரு பழக்கடையைப் பார்த்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த அந்தக் கடையில் அவர்கள் பார்த்திராத ஒரு பழமும் இருந்தது. கடைக்காரரிடம் அந்தப் பழத... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அரசர் கிருஷ்ணதேவராயரின் அவைக்கு ஒரு நபர் வந்தார். அவர் அரசரிடம், “அரசே! என்னுடைய வயலும் பக்கத்து வீட்டுக்காரர் வயலும் அருகருகில் உள்ளன. இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பில், ஒரு தென்னை மரம் உள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் அதை எனக்கு விற்று விட்டார். நான்தான்... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தென்னை மரம்!' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு துறவி தானகவே வலிய வந்து ஸென் ஆசிரியர் ஸூவான்-ஷாவிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். பின்பு ஆசிரியரிடம், "நான் இப்பொழுதுதான் மடத்திற்கு வந்துள்ளேன். எனக்கு மார்கத்தினை அடைவதற்கான வழியைக் காண்பியுங்கள்" என்று கேட்டார். "பள்ளத்தாக்கில் இரச்சலுடன் ஓடு... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மார்கத்தின் வழி' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு காட்டில் பல குரங்குகள் வசித்து வந்தன. ஒரு நாள் இரவு குளிர் தாங்காமல் அவை குளிர் காய்வதற்கு எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தன. அப்போது தூரத்தில் மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டு தீ என்று நினைத்துக் கொண்டு, அந்த இடத்தை நோக்கிச... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'குரங்குக்கு அறிவு சொன்ன கொக்கு' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: கல்லில் சிலை வடிக்கும் சிற்பி ஒருவன் ஒரு தேவதையின் சிலையை வடித்துக் கொண்டிருந்தான். அற்புதமாக தத்ரூபமாகத் தோற்றமளித்த அந்தச் சிலை வடித்து முடித்த கணம் ஒரு மின்னல் நேரத்தில் உயிர் பெற்றது. தேவதை மகிழ்ச்சியுடன் சிற்பியின் கலைத் திறனைப் பாராட்டி வேண்டிய வரம்... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வல்லவர் யார் ?' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: காகம்
தலைப்பு: யுக்தியால் தாகம் தீர்த்த காகம்
| ஒரு கோடை காலம், பகல் நேரம். கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வருத்தியது. தாகம் எல்லோருக்கும் ஏற்பட்டது பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன. அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது. ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஜம்பு, வண்டியோட்டி, கொல்லன், உழவன், உழவநின் உறவினர்கல்
தலைப்பு: கஞ்ச மகா பிரபு
| பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன். எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில் அமர்ந்து செல்வார். ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டத... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில் கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும். செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர். ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, "ஐயோ! போச்சு! போச்சு!" என்று அலறினான். பரமார்த்தரும், மற்ற சீடர்களும் த... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தோட்டத்தில் மேயுது ...' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: பீர்பாலின் நகைச்சுவையான பேச்சுகளை அக்பர் மட்டுமன்றி தர்பாரில் பலரும் ரசித்தனர். ஆனால், சிலருக்கு மட்டும் பீர்பாலுக்குக் கிடைத்த பாராட்டுகள் பொறாமையை அளித்தன. ஒவ்வொரு முறையும் அக்பர் மனந்திறந்து பீர்பாலைப் பாராட்டுகையில், அவர்களுடைய மனம் பற்றியெரிந்தது. ... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முட்டாள்களின் கேள்விகள்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பத்மா, பத்மாவின் கணவன் ராஜா, பத்மாவின் மாமியார், பத்மாவின் மாமியார், பத்மாவின் தோழி கல்யாணி
தலைப்பு: உறவுப் பாலம்
| "வாங்கம்மா... பூ வாங்கிட்டுட்டுப் போங்க முழம் 2 ரூபாய் தான் பூ... பூ... ", " அம்மா... தாயே ... குழந்தை சாப்பிட்டு இரண்டு நாளாகுது ஏதாவது தர்மம் பண்ணுங்கம்மா...", "ஆரஞ்சு ... பைனாப்பிள் ... கிரேப்... ஆரஞ்சு" இந்த வசனங்களெல்லாம் பத்மாவிற்குப் பழக்கப் பட்டவை தான் இருந்தாலும் அனைத்தையும் காதில் வாங்கிய படி அவர்களைக் கடந்து... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல் ஏற்பட்டது. அதை சோதிக்க நினைத்து ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக் கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான். பிறகு இரண்டு ரொட்டித் துண... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நேர்மையான பிச்சைக்காரர்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சான் குரு ஃபாயா, துறவி, சீடர்கள், சுட்டு, நிலா
தலைப்பு: நிலவைச் சுட்டிக் காட்டு
| ஒரு பால் நிலா காயும் இரவு. சான் குரு ஃபாயாவும், அவரது இரண்டு சீடர்களான துறவிகளும் திறந்த வெளியில் மணல் பரப்பின் மீது உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நிலாவினைச் சுட்டிக் காட்டி பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் நடந்த சுவரசியமான உரையாடலே இன்றைய தினம் ஒரு ஸென் கதையின் கருவாகும். முதலாம் துறவி சா"ன் குரு ஃபாயானிடம் "குருவே... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முல்லா மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக
அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன்
உரையாடி மகிழ்ந்தார். மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச்... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உலகத்தில் சிறந்தது' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கண்ணாடி, அழகு, பெண், மக்கள், கௌதம புத்தர், ஊர், அரசர்கள், ராஜா பிரஜென்ஜீதா, விரல், மாலை, மரணம், அங்குலிமால், அப்பாவி, கொலைகாரன், கொலை, கருணை
தலைப்பு: அங்குலிமால்
| தன்னுணர்வை நீ எடை போடவே முடியாது. தன்னுணர்வு கண்ணாடி போன்றது. கண்ணாடி பிரதிபலிக்கும், ஆனால் அது எடை போடாது. ஒரு அழகான பெண்ணோஅசிங்கமான பெண்ணோ யார் எதிரில் நின்றாலும் அது பிரதிபலிக்கும். எந்த விதபாகுபாடும் இல்லாமல் அது பிரதிபலிக்கும். அதற்கு விருப்பு வெறுப்பு கிடையாது. அதன் வேலை அதன் எதிரில் நிற்பது பாவியோ, ஞானியோ யாராக ... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: கூனனை ஏமாற்றிய கதை ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ரா... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கூனனை ஏமாற்றிய கதை' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: போர்வீரன், ஜென் குரு, நரகம், பிச்சைக்காரன், வாள், நரகத்தின் கதவுகள், சொர்க்கத்தின் கதவுகள்
தலைப்பு: சொர்க்கம் - நரகம்
| போர்வீரன் ஒருவன் ஜென் குருவை அணுகிக் கேட்டான். "ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?" அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கேட்டார் குரு- "நீ உண்மையிலேயே ஒரு போர்வீரனா? பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கிறாய். உன்னைத் தன் படைவீரனாக நியமித்திருக்கும் உன்னுடைய அரசன் எப்பேர்ப... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: நண்பர்கள், பஞ்சு, வியாபாரம், எலிகள், பூனை, கொலுசு, அணிகலன், கால், மருந்து
தலைப்பு: ஆளுக்கு ஒரு கால்!
| நான்கு நண்பர்கள் கூட்டாக பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். அவர்களது பஞ்சுக்கடையில் ஏராளமான எலிகள் சேர்ந்து பஞ்சுப் பொதிகளை நாசமாக்கி விட்டன. எலிகளை ஒழிப்பதற்காகப் பூனை ஒன்றை வளர்க்கலாம் என்று நால்வரில் ஒருவன் அபிப்பிராயம் சொன்னான். மற்ற மூவரும் அவன் கருத்தை ஆதரித்தனர். நால்வருமாகச் சேர்ந்து ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்தனர... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: “குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?” எனக் கேட்டான், முட்டாள். “அதனால் நமக்கு என்ன பயன்?” என்று பரமார்த்த குரு கேட்டார். “பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்” என்றான், மூடன். “அப்படியே செய்வோம்” என்றார் குரு. “மனிதர்களுக்... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மருத்துவத் தொழில்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பிச்சைக்காரன், அதிர்ஷ்ட தேவதை
தலைப்பு: பிச்சைக்காரனும் தங்க நாணயமும்
| ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, சொற்பொழிவு, மதத்தலைவர்கள், உணவு, இரவு, கைவிளக்கு, அமானுஷ்ய சக்தி
தலைப்பு: முல்லாவிடம் இருந்த சக்தி
| தற்பெருமை பேசுவார்களை கண்டால் முல்லாவுக்கு பிடிக்காது. அவர்களை எவ்விதமாவது மட்டந்தட்ட அவர் முயற்சி செய்வார். ஓரு தடவை ஒரு மதச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக வெளிநாட்டில் இருந்து மதத்
தலைவர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்கள் மக்கள் மத்தியில் சொற்பொழிவாற்றும் போது மதத்தைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ
அதிகம் பேசமால் தங்களு... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய்
மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால்
மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப்
பரிசோதிக்கச் ச... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சூடு பட்ட புரோகிதர்கள்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது. ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பால், கடவுள், விடை, குழந்தை, கங்கை, கேள்வி
தலைப்பு: கடவுளும் தூதுவர்களும்
| "கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?"இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம் பீர்பால் கூறினார் "இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்" சில நாட்கள் கழித்து அக்பர் குடும்பத்தாரோடு கங்கையில் படகில் செல்ல வேண்டியிருந... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சேவல், மற்றொரு சேவல், இரத்தினக்கல், குப்பைக் கிடங்கு, தாணியம்
தலைப்பு: சேவலும் இரத்தினக் கல்லும்
| அது ஒரு அழகிய பனிக்காலம். சேவல் ஒன்று வழக்கம் போல் காலையில் எழுந்து அதற்கான உணவைத்தேட தன் நண்பர்களுடன் கிளம்பியது. அந்த சேவல் தொலைவில் ஒரு குப்பைக் கிடங்கை கண்டது. அந்த குப்பைக் கிடங்கில் ஏதாவது உணவு கிடைக்குமா என்ற எண்ணத்துடன் கிளற ஆரம்பித்தது. அப்போது அந்த சேவலுக்கு விலை மதிப்பில்லாத இரத்தினக்கல் ஒன்று கிடைத்தது. அந்... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, மன்னர், பீன்ஸ் கறி, காய்
தலைப்பு: உலகத்தில் சிறந்தது
| முல்லா மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக
அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன்
உரையாடி மகிழ்ந்தார். மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச்
சொல்வார். ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: தேள், காடு, நீரோடை, மீன்கள், நண்டு, ஆமை, தவளை
தலைப்பு: தேளும் தவளையும்
| அது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது. அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தே... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, அயல் ஊர், குளியல் அறை, உடை, வேலைக்காரர்கள், செல்வந்தர், தங்கக் காசுகள், நறுமணப் பொடிகள், வாசனைப் பன்னீர், செப்பு, உபசாரம், பரிசு
தலைப்பு: அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு!
| ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது. முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார். அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த
வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர்.
சீக்கிரம்... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பல், பீடா, சுண்ணாம்பு, சௌகத் அலி, நெய்
தலைப்பு: சிறிய தவறும் பெரிய தண்டனையும்!
| அக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி தயாரிக்கும் பீடா அவருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக இருப்பதாக அக்பர் அடிக்கடி அவனிடமே புகழ்ந்து பேசுவதுண்டு! அந்த சமயங்களில் சௌகத் அலி அக்பருக்கு சலாம் செய்து விட்டு, "பீடா தயாரிப்பது எனக்கு கை வந்த கல... |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் மகா குறும்பன். இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் இருக்கிறார்க... | கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தொலைந்த மூக்கு' என்பதாகும். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.