| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_40", | |
| "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", | |
| "sub_heading": "கல்வெட்டுக்கள்", | |
| "text": "கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து கண்டி இராச்சியக் காலம் வரை இலங்கையில் கல்வெட்டுகள் தொடர்ந்தும் எழுதப்பட்டுள்ளன. கி.பி 2 ஆம் நூற்றாண்டின் பின்னர் அவை விகாரைகளுக்கு வழங்கப்பட்ட கிராமங்கள், காணிகள் பற்றியும் விகாரைகளின் நிர்வாகம் பற்றியும் அரச கட்டளைகளைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையிலும் வர்த்தக நடவடிக்கை மற்றும் வரி அறவீடு பற்றியும் தவறு செய்தோருக்கு மன்னிப்பு அளித்தல் பற்றியும் தனி நபர்களின் சேவைகளைப் பாராட்டுதல் பற்றியும் வேறு விடயங்கள் பற்றிய தகவல்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 40, | |
| "source_file": "Grade_10_History_Chapter_01", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-28T07:04:57.460795", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 496, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T10:09:49.147341" | |
| } |