| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_47", | |
| "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", | |
| "sub_heading": "புராதன சிதைவுகள்", | |
| "text": "வரலாற்று இடங்கள் அல்லது தொல்பொருள்கள் என்று கூறப்படும் இச்சிதைவுகள் இலங்கையின் வரலாற்றை அறிவதற்கான சிறந்த மூலாதாரங்களாகும். முற்கால மக்களின் கலையாற்றல், தொழினுட்ப அறிவு, கட்டடக் கலையாற்றல் என்னும் வாஸ்த்துக் கலைத்திறன், சுற்றாடல் பாது காப்பு, நீர் முகாமைத்துவம் என்னும் பல்வேறு துறைகள் பற்றிய முறையான அறிவினைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு இச்சிதைவுகள் எமக்குப் பெரிதும் துணைபுரிகின்றன.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 47, | |
| "source_file": "Grade_10_History_Chapter_01", | |
| "overlap_reference": "வரலாற்று இடங்கள் அல்லது தொல்பொருள்கள் என்று கூறப்படும் இச்சிதைவுகள் இலங்கையின் வரலாற்றை அறிவதற்கான சிறந்த மூலாதாரங்களாகும்.", | |
| "created_at": "2026-02-28T07:17:00.487957", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 388, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T10:09:49.150942" | |
| } |