| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_48", | |
| "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", | |
| "sub_heading": "புராதன சிதைவுகள்", | |
| "text": "சித்திரங்கள், செதுக்கல்கள், தொல்பொருள்கள்\nபுராதன சித்திரங்கள், சிற்பங்கள் (சிலைகள்) செதுக்கல் கலைகள் என்பன இலங்கையின் கலாசார வளர்ச்சியின் வரலாற்றைக் காட்டும் உயிரோட்டமான சாட்சிகளாகும். எமது முன்னோர்களின் ஆடையணிகள், கலையாற்றல்கள், பயன்படுத்திய ஆபரணங்கள், நிறப்பயன்பாடுகள், சமய நம்பிக்கைகள் என்பன பற்றி அறிந்து கொள்வதற்கு சித்திர, சிற்ப, செதுக்கல் கலையம்சங்கள் பெரிதும் உதவுகின்றன.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 48, | |
| "source_file": "Grade_10_History_Chapter_01", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-28T07:18:12.284120", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 379, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T10:09:49.151848" | |
| } |