| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_06", | |
| "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", | |
| "sub_heading": "குடியேற்றங்களின் பரம்பல்", | |
| "text": "சுமார் தொண்ணூறு அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த அகழ்வுகளில் கிடைக்கப்பெறும் இரத்தினக் கனியப்படிவுகளில் காணப்படும் சரளைக் கற்களுடன்கூடிய மண் படைகளில் மிகப் புராதன காலத்தில் வாழ்ந்த மனிதன் பயன்படுத்திய கல்லாயுதங்களும் இல்லாது ஒழிந்துபோன சில விலங்குகளின் எலும்புகளும் புதைந்துள்ளன. பினைத்தோசின் என்னும் புவியியற் காலப்பகுதியில் ஏற்பட்ட அதிகளவு மழை வீழ்ச்சி காரணமாக மலைப்பாங்கான பிரதேசத்தில் நிகழ்ந்த மண்ணரிப்பினால் உருவான சரளைக்கற் படிவுகள் இவ்வாறு தாழ்நிலங்களில் புதைந்துள்ளன.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 6, | |
| "source_file": "Grade_10_History_Chapter_02", | |
| "overlap_reference": "சுமார் தொண்ணூறு அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த அகழ்வுகளில் கிடைக்கப்பெறும் இரத்தினக் கனியப்படிவுகளில் காணப்படும் சரளைக் கற்களுடன்கூடிய மண் படைகளில் மிகப் புராதன காலத்தில் மனிதன் பயன்படுத்திய கல்லாயுதங்களும் இல்லாது ஒழிந்துபோன சில விலங்குகளின் எலும்புகளும் புதைந்துள்ளன.", | |
| "created_at": "2026-02-26T05:17:39.249374", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 471, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-26T15:05:17.035064" | |
| } |