| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_40", | |
| "heading": "மறுமலர்ச்சி", | |
| "sub_heading": "வைத்தியத் துறையின் முன்னேற்றம்", | |
| "text": "மறுமலர்ச்சி காலத்தில் வைத்தியத் துறையில் பல புதிய கண்டுபிடிப்புகள் ஏற்பட்டமையால் அத்துறையிலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆங்கிலேயரான வில்லியம் ஹார்வே மனித உடலின் குருதி சுழற்சிமுறையை தொடர்பான முக்கிய தகவல்களை முன்வைத்தார். சுவிஸ் இனத்தவரான பராசெல்சஸ் நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அதற்கான சிகிச்சைகளையும் பரிசோதனை மூலம் கண்டறிந்தார். நவீன மருந்து தொடர்பாகவும் நோய்களைச் சிகிச்சையளித்தல் தொடர்பாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 40, | |
| "source_file": "Grade_10_History_Chapter_09", | |
| "overlap_reference": "் தந்தை எனப் படுகிறார்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த ஐசக் நியூட்டன்\nபுவியீர்ப்புச் சக்தியை கண்டுபிடித்தார்.", | |
| "created_at": "2026-02-27T18:44:09.499886", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 440, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T18:57:25.449564" | |
| } |