| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_07", | |
| "heading": "உலக மகாயுத்தங்களும் இணக்கப்பாடுகளும்", | |
| "sub_heading": "இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கான காரணிகள்", | |
| "text": "இதனால் ஜேர்மனியில் வேலை வாய்ப்பின்மை மிக அதிகரித்ததோடு பொருள்களின் விலை மேலும் அதிகரித்தது. சில நகரங்களில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் கூட ஏற்பட்டன. உலகில் அதிகமான நாடுகள் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த பொழுதிலும் ஹிட்லரின் ஆதரவாளர்கள் ஜனநாயக வைமார் அரசுக்குப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆற்றல் இல்லை எனத் திரிபுபடுத்தினர்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 7, | |
| "source_file": "Grade_11_History_Chapter_08", | |
| "overlap_reference": "பொருள்களின் விலை மேலும் அதிகரித்தது. சில நகரங்களில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் கூட ஏற்பட்டன.", | |
| "created_at": "2026-03-14T07:56:16.073843", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 342, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-03-14T10:15:55.579539" | |
| } |