{ "chunk_id": "ta_edu_Grade10His_04", "heading": "", "sub_heading": "", "text": "பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரான வரலாற்றைக் கற்கும்போது அக்காலகட்டங்களில் அவர்கள் எழுதி வைத்த விடயங்களும் அவர்களின் பல்வேறு ஆக்கங்களும் கிடைக்கப் பெறுகின்றன. அந்த எழுத்தாவணங்கள் அல்லது ஆக்கங்கள் மூலம் முற்கால மனித செயற்பாடுகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிவதனால் அவை மூலாதாரங்கள் எனப்படுகின்றன.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 4, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "அக்காலகட்டங்களில் அவர்கள் எழுதி வைத்த விடயங்களும் அவர்களின் பல்வேறு ஆக்கங்களும் கிடைக்கப் பெறுகின்றன.", "created_at": "2026-02-27T18:59:57.616901", "created_by": "chunker", "text_length": 302, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.134615" }