{ "chunk_id": "ta_edu_Grade10His_09", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "இலக்கிய மூலாதாரங்கள்", "text": "இலங்கை வரலாற்றை அறியக்கூடிய இலக்கிய மூலாதாரங்களை உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள், வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள் என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இலங்கையர் காலத்துக்குக் காலம் எழுதிய கவிதைகளும் உரைநடைகளும் உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்களாகக் கருதப்படுகின்றன.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 9, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "", "created_at": "2026-02-27T19:07:48.468900", "created_by": "chunker", "text_length": 302, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.135587" }