{ "chunk_id": "ta_edu_Grade10His_22", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள்", "text": "பௌத்த சமய நூல்களாகக் கருதத்தக்க போதிவம்சம், தூபவம்சம், தாதுவம்சம், பூஜாவலிய, சத்தர்மாலங்கார முதலிய நூல்கள் இராசரட்டைக் கால வரலாற்றை அறிவதற்கு உதவுகின்றன. இலங்கையின் புத்த சாசன வளர்ச்சி பற்றி எழுதப்பட்டுள்ள நிகாய சங்கிரஹய, அரசியல் தகவல்களை அடக்கியுள்ள ராஜாவலிய என்பன கம்பளை முதல் கோட்டை வரையிலான காலப்பகுதியின் வரலாற்றைக் கற்பதற்கு உகந்த முக்கிய மூலாதாரங்களாகும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 22, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "பௌத்த சமய நூல்களாகக் கருதத்தக்க போதிவம்சம், தூபவம்சம், தாதுவம்சம், பூஜாவலிய, சத்தர்மாலங்கார முதலிய நூல்கள் இராசரட்டைக் கால வரலாற்றை அறிவதற்கு உதவுகின்றன.", "created_at": "2026-02-28T05:25:38.377488", "created_by": "chunker", "text_length": 362, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.140340" }