{ "chunk_id": "ta_edu_Grade10His_37", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "கல்வெட்டுக்கள்", "text": "கல்வெட்டு எழுதப்பட்டுள்ள கல்லின் அமைப்பைப் பொறுத்து அது குகைக் கல்வெட்டு, குன்றுக் கல்வெட்டு, தூண் கல்வெட்டு, சுவர்க் கல்வெட்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் புராதன கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டவையாகும். கற்குகைகளைப் பௌத்த பிக்குமாரின் வசிப்பிடங்களாக வசதிசெய்து கையளித்தமை பற்றி அவை கூறுகின்றன. அமைத்தவர்களைப் பற்றிய சிறு விபரங்கள் அதாவது அவர்களின் பதவி, பரம்பரை என்பன அவற்றில் அடங்கும். புரதான சமூக வரலாறு, குடியேற்றங்களின் பரம்பல் என்பவற்றை அறிவதற்கு இக்கல்வெட்டுகள் உதவும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 37, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "", "created_at": "2026-02-28T06:52:45.648076", "created_by": "chunker", "text_length": 503, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.146170" }