{ "chunk_id": "ta_edu_Grade10His_43", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "நாணயங்கள்", "text": "யானை மற்றும் சுவஸ்திகா உருவம் பதித்த நாணயம், இலக்ஷ்மியின் உருவம் பதித்த நாணயம் மற்றும் அக என்னும் பொன் நாணயம் என்பனவும் இந்நாட்டில் பயன்படுத்தப்பட்ட புராதன நாணயங்களாகும். பொலன்னறுவைக்காலத்தில் “தம்பமஸ்ஸ” என்னும் செப்பு நாணயம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கைக்குரிய நாணயங்கள் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டிருப்பதுடன் அவற்றை வார்ப்பதற்கான அச்சுகளும் அகழ்வுகளின்போது கிடைக்கப் பெற்றுள்ளன.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 43, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "யானை மற்றும் சுவஸ்திகா உருவம் பதித்த நாணயம், இலக்ஷ்மியின் உருவம் பதித்த நாணயம் மற்றும் அக என்னும் பொன் நாணயம் என்பனவும் இந்நாட்டில் பயன்படுத்தப்பட்ட புராதன நாணயங்களாகும்.", "created_at": "2026-02-28T07:07:41.364084", "created_by": "chunker", "text_length": 388, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.148430" }