{ "chunk_id": "ta_edu_Grade10His_44", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "நாணயங்கள்", "text": "இலங்கைக்குரிய நாணயங்கள் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டிருப்பதுடன் அவற்றை வார்ப்பதற்கான அச்சுகளும் அகழ்வுகளின்போது கிடைக்கப் பெற்றுள்ளன. உள்நாட்டு நாணயங்கள் போலவே உரோம, சீன, இந்திய நாணயங்களும் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன.\nநாட்டின் பொருளாதாரநிலை, வர்த்தகம், உலோகப் பாவனை என்பவற்றை அறிவதற்கு நாணயங்கள் முக்கியம் வாய்ந்த மூலாதாரங்களாகும். புராதன நாணயங்கள் பற்றி கற்றல் \"நாணய விஞ்ஞானம்' எனப்படும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 44, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "இலங்கைக்குரிய நாணயங்கள் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டிருப்பதுடன் அவற்றை வார்ப்பதற்கான அச்சுகளும் அகழ்வுகளின்போது கிடைக்கப் பெற்றுள்ளன.", "created_at": "2026-02-28T07:10:25.180539", "created_by": "chunker", "text_length": 392, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.148595" }