{ "chunk_id": "ta_edu_Grade10His_01", "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", "sub_heading": "அறிமுகம்", "text": "சுமார் ஓர் இலட்சத்து இருபத்தையாயிரம் (125 000) வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் மனிதன் வாழ்ந்திருக்கின்றான். இந்துசமுத்திரத்தைக் கடந்து இங்கு வந்த ஹோமோசேப்பியன் என்னும் நவீன மனிதன் நாட்டின் நாலா திசைகளிலும் பரவிச் சென்று அவ்வப் பகுதியின் சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்து வாழத் தலைப்பட்டான். மிக நீண்ட காலமாக இந்நாட்டில் அம்மனிதன் வாழ்ந்தமையால் பல்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப, அவனது கலாசாரமும் மாற்றங்கண்டது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 1, "source_file": "Grade_10_History_Chapter_02", "overlap_reference": "", "created_at": "2026-02-26T05:06:50.513813", "created_by": "chunker", "text_length": 407, "status": "approved", "approved_at": "2026-02-26T15:05:17.034126" }