{ "chunk_id": "ta_edu_Grade10His_04", "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", "sub_heading": "குடியேற்றங்களின் பரம்பல்", "text": "அவன் இந்நாட்டின் பல்வேறு காலநிலை வலயங்களுக்கு ஏற்ப தன்னை இசைவாக்கிக் கொண்டு பரந்த புவியியல் பிரதேசம் ஒன்றில் வாழ்ந்த தலைப்பட்டான். வேட்டையாடலும் இடத்திற்கிடம் திரிந்து உணவுப் பொருள்களைச் சேகரித்தலும் அவனது பிரதான சீவனோபாய முறைகளாகக் காணப்பட்டன.\nஇலங்கையில் கற்காலத்திற்குரிய ஆதாரங்கள் பல இடங்களில் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் முதலாவது இரத்தினபுரி மற்றும் அதன் அயற்சூழலில் அமைந்துள்ள இரத்தினக்கல் சுரங்கங்களாகும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 4, "source_file": "Grade_10_History_Chapter_02", "overlap_reference": "அவன் இந்நாட்டின் பல்வேறு காலநிலை வலயங்களுக்கு ஏற்ப தன்னை இசைவாக்கிக் கொண்டு பரந்த புவியியல் பிரதேசம் ஒன்றில் வாழ்ந்த தலைப்பட்டான்.", "created_at": "2026-02-26T05:12:05.881198", "created_by": "chunker", "text_length": 410, "status": "approved", "approved_at": "2026-02-26T15:05:17.034812" }