{ "chunk_id": "ta_edu_Grade10His_01", "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", "sub_heading": "அறிமுகம்", "text": "எந்தவொரு சமுதாயமும் சமநிலையாக அமைவது அறிவை மையமாகக் கொண்டாகும். இங்கு அறிவானது அந்த சமுதாயத்திற்குரிய இயற்கைச் சூழலுக்கும் அதனோடு இணைந்து வாழும்போது தோன்றும் பண்பாட்டிற்கும் ஏற்றதாகக் கட்டியெழுப்பப்படும். இதனால் உலகில் காணப்படும் சமுதாயங்களில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட அறிவுத் தொகுதியைக் காணக்கூடியதாய் உள்ளது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 1, "source_file": "Grade_10_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-26T17:21:04.710221", "created_by": "chunker", "text_length": 308, "status": "approved", "approved_at": "2026-02-27T14:45:04.373342" }