{ "chunk_id": "ta_edu_Grade10His_35", "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும் அறிமுகம்", "sub_heading": "6.2. சட்டமும் பாரம்பரியங்களும்", "text": "பண்டைய சமுதாயத்தில் நிலவிய நிலவிய முக்கிய தொழில்களில் வர்த்தகமும் ஒன்றாகும். உள் நாட்டு வர்த்தகம் ஒழுங்காக நடைபெற அக்கால மன்னர்கள் சட்டங்கள் இயற்றினர். கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் நிலவிய அவ்வாறான சட்டங்கள் எவ்வாறானவை என்பதனை அறிய எமக்கு உதவுவது பதுளைக் கல்வெட்டாகும். இது சொரபொரவெவத் தூண் கல்வெட்டு என்றும் அழைக்கப்படுகிறது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 35, "source_file": "Grade_10_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-26T18:48:51.541923", "created_by": "chunker", "text_length": 322, "status": "approved", "approved_at": "2026-02-27T14:45:04.386122" }