{ "chunk_id": "ta_edu_Grade10His_40", "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", "sub_heading": "6.2. சட்டமும் பாரம்பரியங்களும்", "text": "மிருகங்களை எவரும் கொல்லக்கூடாதென முதன் முதல் சட்டம் இயற்றியவன் ஆமண்டகாமினி அபய மன்னனாவான். (கி.பி.19 29) அது படுகொலை சட்டம் எனப்பட்டது. எருமை, பசு, ஆடு என்பவற்றைக் கொல்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நான்காம் மகிந்த மன்னனால் (கி.பி. 956 - 972) நிறுவப்பட்ட மிகிந்தலை சுவர்க் கல்வெட்டில் காணப்படுகிறது. நீர் நிலைகளில் வாழும் பறவைகளைக் கொல்லக் கூடாதென நிசங்கமல்ல மன்னனால் (கி.பி.1187 - 1196) சட்டம் விதிக்கப்பட்டது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 40, "source_file": "Grade_10_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-26T18:57:36.982783", "created_by": "chunker", "text_length": 418, "status": "approved", "approved_at": "2026-02-27T14:45:04.386983" }