{ "chunk_id": "ta_edu_Grade10His_44", "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", "sub_heading": "6.2. சட்டமும் பாரம்பரியங்களும்", "text": "குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை ஏனையோர் படிப்பினையாகக் கொண்டு குற்றங்கள் செய்யாதிருக்கும் பொருட்டே தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை எமது சட்டங்களுக்குப் பின்னணியாக அமைந்ததாகும். தற்காலத்தில் உரோமன்டச்சுச் சட்டங்களே இலங்கையில் பின்பற்றப்படுகிறது. இது மிகவும் பிற்பட்ட காலத்திலேயே அறிமுகம்செய்யப்பட்டதாகும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 44, "source_file": "Grade_10_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-26T19:04:16.040367", "created_by": "chunker", "text_length": 308, "status": "approved", "approved_at": "2026-02-27T14:45:04.387668" }