{ "chunk_id": "ta_edu_Grade10His_06", "heading": "கண்டி இராச்சியம்", "sub_heading": "8.1. ஆரம்பமும் பரவலும்", "text": "சேனா சம்மத விக்கிரமபாகுவின் மகனான ஜயவீர பண்டார அவனை அடுத்து அரசேற்றான். இவன் நீண்டகாலமாக (கி.பி. 1511-1551) இவ் விராச்சியத்தை ஆட்சி செய்தான். அவன் சீதா வாக்கை மன்னனான மாயாதுன்னையின் நண்பனாவான். கோட்டை இராச்சியத்தில் \"விஜயபாகு கொள்ளை” இடம்பெற்றபோது, ஜயவீர பண்டார அரசன் மாயாதுன்னைக்கு உதவி புரிந்துள்ளான்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 6, "source_file": "Grade_10_History_Chapter_08", "overlap_reference": "", "created_at": "2026-02-27T19:19:35.707227", "created_by": "chunker", "text_length": 303, "status": "approved", "approved_at": "2026-02-28T17:27:22.130148" }