{ "chunk_id": "ta_edu_Grade10His_07", "heading": "கண்டி இராச்சியம்", "sub_heading": "8.1. ஆரம்பமும் பரவலும்", "text": "ஜயவீர பண்டாரனின் மரணத்தின் பின்னர் அவனது மகனான கரலியத்த பண்டார கண்டி இராச்சியத்திற்கு மன்னனானான். அவன் போர்த்துக்கேயருடன் உடன்பாடான கொள்கை யைக் கடைப்பிடித்தான். கரலியத்த பண்டாரனின் இக்கொள்கையையிட்டு கண்டிப்பிரதானிகள் அதிருப்தியுற்றிருந்தனர். ஆகையால் அவர்கள் சீதாவாக்கை மன்னன் இராஜசிங்கனுக்குத் தமது ஆதரவை வழங்கினர்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 7, "source_file": "Grade_10_History_Chapter_08", "overlap_reference": "", "created_at": "2026-02-27T19:20:23.352993", "created_by": "chunker", "text_length": 315, "status": "approved", "approved_at": "2026-02-28T17:27:22.130370" }