{ "chunk_id": "ta_edu_Grade10His_09", "heading": "கண்டி இராச்சியம்", "sub_heading": "8.1. ஆரம்பமும் பரவலும்", "text": "அக்கால கண்டி இராச்சிய பிரதானியான பேராதனையின் வீரசுந்தர பண்டார, I ஆம் இராஜசிங்க மன்னனுக்கு கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிப்பதற்கு உதவி புரிந்தான். இவ்வாக்கிரமிப்புக்கு முகங்கொடுக்க இயலாத கரலியத்த பண்டார மன்னன், தனது புதல்வியான குசுமாசனதேவியுடனும் மருமகனான யம் சிங்க பண்டாரவுடனும் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்தான். குசுமாசனதேவி டோனா கத்தரினா என்றும் யமசிங்க பண்டார டொன் பிலிப் என்னும் பெயரிலும் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிக் கொண்டனர்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 9, "source_file": "Grade_10_History_Chapter_08", "overlap_reference": "", "created_at": "2026-02-27T19:26:04.606628", "created_by": "chunker", "text_length": 426, "status": "approved", "approved_at": "2026-02-28T17:27:22.130630" }