{ "chunk_id": "ta_edu_Grade10His_35", "heading": "கண்டி இராச்சியம்", "sub_heading": "II ஆம் விமலதர்மசூரிய மன்னன் (கி.பி.1687-1707)", "text": "II ஆம் இராஜசிங்கனின் மரணத்தின் பின்னர் அவனது மகனான II ஆம் விமலதர்மசூரியன் மன்னனானான். இவன் தந்தையைப்போல ஆற்றல் வாய்ந்தவனாக இருக்கவில்லை. இதனால் கண்டி இராச்சியப்பிரதானிகள் இக்காலத்தில் தமது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொண்டனர். இவன் மன்னனான பின்னர் ஒல்லாந்தருடன் சமாதானமாக நடந்துகொண்டான்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 35, "source_file": "Grade_10_History_Chapter_08", "overlap_reference": "", "created_at": "2026-02-27T20:04:07.413208", "created_by": "chunker", "text_length": 286, "status": "approved", "approved_at": "2026-02-28T17:27:22.140170" }