{ "chunk_id": "ta_edu_Grade10His_41", "heading": "கண்டி இராச்சியம் நாயக்க அரச வம்ச ஆட்சி (கி.பி.1739 - 1815)", "sub_heading": "ஸ்ரீ விஜய இராஜசிங்க மன்னன் (கி.பி.1739 - 1747)", "text": "புத்த சமயத்தைத் தழுவிக் கொண்டு நீண்ட காலமாக பிக்குகளுடனே வாழ்ந்த இவன், வெலி விட்ட சரணங்கர தேரரின் ஆலோசனைக்கு அமைய பர்மாவிலிருந்து குருமாரைத் தருவித்து, உபசம்பதாவை நடத்த முற்பட்டாலும் அது வெற்றிபெறவில்லை. இம்மன்னன் தென்னிந்திய இளவரசியை திருமணம் செய்திருந்த போதிலும் வாரிசு இன்றி 1747 இல் இறந்தான்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 41, "source_file": "Grade_10_History_Chapter_08", "overlap_reference": "", "created_at": "2026-02-28T15:02:45.427735", "created_by": "chunker", "text_length": 296, "status": "approved", "approved_at": "2026-02-28T17:27:22.142672" }