{ "chunk_id": "ta_edu_Grade10His_03", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "அறிமுகம்", "text": "நடுப்பாலையுகத்தின் இறுதிப் பகுதியில் பழைய கிரேக்க, உரோமப் பண்பாடுகளில் நிலவிய இலக்கியம், கலை, தத்துவம் தொடர்பாக மீளாய்வு செய்ய ஐரோப்பியர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். அதன் விளைவாக கிரேக்க, உரோமப் பண்பாடுகளில் உள்ள பண்புகளை மீண்டும் பயன்படுத்தவும், இலக்கியம் மற்றும் தத்துவத்தை ஆழமாகக் கற்கவும் ஐரோப்பியர்கள் ஆர்வம் காட்டினர்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 3, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "பண்பாடு வீழ்ச்சி அடைந்த பிறகு உள்ள ஆயிரம் ஆண்டுகள் ஐரோப்பிய வரலாற்றில் நடுப்பாலையுகம் எனப்படுகிறது.", "created_at": "2026-02-27T18:28:00.010165", "created_by": "chunker", "text_length": 325, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.439719" }