{ "chunk_id": "ta_edu_Grade10His_06", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "கொன்ஸ்டாண்டினோப்பிள் துருக்கியர் வசமானது", "text": "நடுப்பாலைக் காலத்தின் இறுதிப் பகுதியில் நன்கு முன்னேற்றம் அடைந்த வர்த்தக நகரமான கொன்ஸ்டாண்டினோப்பிள், ஐரோப்பிய கல்விமான்களை கவர்ந்த ஓரிடமாக விளங்கியது. கொன்ஸ்டாண்டினோப்பிள் நகரிலிருந்த நூலகங்களில் கிரேக்க, உரோம இலக்கிய நூல்கள் வைக்கப்பட்டிருந்ததுடன் அறிஞர்கள் அவற்றைக் கற்பதில் ஈடுபட்டிருந்தனர்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 6, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "மாற்றத்திற்கு மறுமலர்ச்சியின் செல்வாக்கு , கல்வி மறுமலர்ச்சி , மொழி, இலக்கிய மறுமலர்ச்சி , மனிதவாதம்", "created_at": "2026-02-27T18:29:49.140933", "created_by": "chunker", "text_length": 295, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.440180" }