{ "chunk_id": "ta_edu_Grade10His_08", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "வர்த்தக முன்னேற்றமும் புதிய செல்வந்த வர்க்கத்தின் தோற்றமும்", "text": "கி.பி. 12 ஆம் நூற்றாண்டு தொடக்கம் மேற்கு, கிழக்கு நாடுகளுக்கிடையே வர்த்தகத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் வெனிஸ், ஜெனோவா போன்ற வர்த்தக நகரங்களை உடைய இத்தாலியில் வர்த்தகத்தின் மூலமும் வங்கிகளின் மூலமும் பணம் சேகரித்த புதிய செல்வந்தர்கள் உருவாகினர்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 8, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "ரேக்க, லத்தீன் மொழிகளைப் பரப்பினர். இதன் விளைவாக கிரேக்க, உரோமப் பண்பாடுகளில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.", "created_at": "2026-02-27T18:30:32.806107", "created_by": "chunker", "text_length": 243, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.441322" }