{ "chunk_id": "ta_edu_Grade10His_41", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "வைத்தியத் துறையின் முன்னேற்றம்", "text": "சுவிஸ் இனத்தவரான பராசெல்சஸ் நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அதற்கான சிகிச்சைகளையும் பரிசோதனை மூலம் கண்டறிந்தார். நவீன மருந்து தொடர்பாகவும் நோய்களைச் சிகிச்சையளித்தல் தொடர்பாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். சுவிஸ் இனத்தவரான மைக்கல் சர்வேட் மனித உடலின் குருதி, இதயத்தின் வலது பக்கத்திலிருந்து புறப்பட்டு சுவாசப்பையில் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் இதயத்தை அடைந்து உடல் முழுவதும் பரவிச் செல்கின்றது என்பதைக் கண்டறிந்தார் ஜெர்மனியரான ஜோஹன்னஸ் குதன்பெர்க் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 41, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "ர். நவீன மருந்து தொடர்பாகவும் நோய்களைச் சிகிச்சையளித்தல் தொடர்பாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்", "created_at": "2026-02-27T18:44:31.256605", "created_by": "chunker", "text_length": 493, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.449693" }