{ "chunk_id": "ta_edu_Grade10His_43", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "அரசியல் மறுமலர்ச்சி", "text": "அக்கால மக்கள் பிரதேச ஆட்சியாளர்களின் கீழ் இருந்ததால் தமது பிரதேசம் என்ற நிலையில் வாழ்ந்தார்களேயன்றி, ஒரு நாட்டின் மக்கள் என்ற நிலையில் செயல்படவில்லை. மறுமலர்ச்சி காலத்தில் தேசிய அரசுகள் தோன்றியது அரசியல் துறையில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாகும். பல பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரு அரசனின் கீழ் ஆட்சி செய்யும் முறை இதன் மூலம் உருவானது", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 43, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "ப் பிரபுக்கள் செயல்பட்டனர். அவர்கள் சுதந்திரமாக இயங்கியதால் அரசனைவிட அதிகாரம் உடையவர்களாக இருந்தனர்.", "created_at": "2026-02-27T18:45:00.711948", "created_by": "chunker", "text_length": 325, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.449940" }