{ "chunk_id": "ta_edu_Grade10His_45", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "அரசியல் மறுமலர்ச்சி", "text": "நடுத்தர வர்க்கினர் சமூகத்தில் வலிமை பெற்றதுடன், அதுவரை நில உரிமையாளர்களாக இருந்த பிரபுக்களின் அதிகாரங்களும் உரிமைகளும் நலிவுறத் தொடங்கின. தேசிய அரசுகளின் அரசர்கள் தமது நிர்வாக செயல்பாடுகளில் புதிதாகத் தோன்றிய நடுத்தர வர்க்கினரின் உதவியைப் பெற்றுக் கொண்டனர். அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அரச அனுசரணை கிடைத்தது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 45, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "வங்கியாளர்கள், கப்பல் உரிமையாளர்கள், போக்குவரத்து வண்டிகளின் உரிமையாளர்கள் போன்றோர் அடங்குவர்.", "created_at": "2026-02-27T18:45:38.519818", "created_by": "chunker", "text_length": 315, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.450923" }