{ "chunk_id": "ta_edu_Grade11His_06", "heading": "கைத்தொழிற்‌ புரட்சி", "sub_heading": "கைத்தொழில் புரட்சியின் ஆரம்பமும் வளர்ச்சியும்", "text": "18 ஆம்‌ நூற்றாண்டாகும்போது ஐரோப்பாவின்‌ நிலைமையைப்‌ பார்க்கும்போது பிரித்தானியா தவிர பிரான்ஸ்‌, போர்த்துக்கல்‌, ஸ்பானியா முதலிய நாடுகளும்‌ குடியேற்ற நாடுகளைக்‌ கொண்டிருந்ததுடன்‌ பரவலான முறையில்‌ வெளிநாட்டு வர்த்தகத்தில்‌ ஈடுபட்டிருநதமை தெரியவருகின்றது. கைத்தொழிற்‌ புரட்சியானது பிரித்தானியாவில்‌ ஆரம்பமானமைக்கான காரணங்களை ஆராய்வது முக்கியமானதாகும்‌.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 6, "source_file": "Grade_11_History_Chapter_01", "overlap_reference": "", "created_at": "2026-02-28T07:45:47.470740", "created_by": "chunker", "text_length": 349, "status": "approved", "approved_at": "2026-02-28T10:26:32.146121" }