{ "chunk_id": "ta_edu_Grade11His_01", "heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.", "sub_heading": "அறிமுகம்‌", "text": "போர்த்துக்கேயர்‌ ஆசியாவுக்கு வநீத விதத்தையும்‌ போர்த்துக்கேயரும்‌ ஒல்லாந்தரும்‌ இலங்கையின்‌ கரையோரப்‌ பிரதேசங்களில்‌ ஆட்சியை நிலைநாட்டிக்‌ கொண்டமை பற்றியும்‌ 10 ஆந்‌ தரத்தில்‌ நீங்கள்‌ கற்றுள்ளீர்கள்‌. இவ்விரு நாட்டினருக்கும்‌ பின்னர்‌ இலங்கை மீது பெருஞ்‌ செல்வாக்கைச்‌ செலுத்திய ஐரோப்பியர்‌ பிரித்தானியராவர்‌.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 1, "source_file": "Grade_11_History_Chapter_02", "overlap_reference": "", "created_at": "2026-03-10T11:39:58.747392", "created_by": "chunker", "text_length": 310, "status": "approved", "approved_at": "2026-03-10T17:42:43.473057" }