{ "chunk_id": "ta_edu_Grade11His_03", "heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.", "sub_heading": "2.1 பிரித்தானியரின் ஆசிய வருகை", "text": "போர்த்துக்கேயரும்‌ ஒல்லாந்தரும்‌ ஆசியாவுடனான வர்த்தகத்தால்‌ பேரளவில்‌ இலாபம்‌ ஈட்டுவதை அவதானித்த ஆங்கிலேயரும்‌ ஆசியாவில்‌ தமது கவனத்தைச்‌ செலுத்தினர்‌. இதற்கமைய பிரித்தானிய மகாராணி 1 ஆம்‌ எலிசபெத்‌ அவர்களிடமிருந்து அனுமகிப்‌ பத்திரம்‌ ஒன்றைப்‌ பெற்றுக்‌ கொண்டு, ஆங்கிலேய வணிகக்‌ குழு ஒன்று 1600 டிசெம்பரில்‌ ஆங்கிலேயக்‌ கிழக்கிந்திய வர்த்தகக்‌ கம்பனி ஆசியாவில்‌ வர்த்தகத்தில்‌ ஈடுப்பட்டனர்‌.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 3, "source_file": "Grade_11_History_Chapter_02", "overlap_reference": "", "created_at": "2026-03-10T11:41:36.496787", "created_by": "chunker", "text_length": 391, "status": "approved", "approved_at": "2026-03-10T17:42:43.473946" }