{ "chunk_id": "ta_edu_Grade11His_06", "heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.", "sub_heading": "2.1 பிரித்தானியரின் ஆசிய வருகை", "text": "அப்போது ஆங்கிலேயர்‌ சில சந்தர்ப்பங்களில்‌ போர்த்துக்கேயருக்கு எதிராக ஓல்லாநீதருடன்‌ ஒன்றுபட்டுச்‌ செயற்பட்டனர்‌. இவ்விரு சாராரின்‌ பொது எதிரியான போர்த்துக்கேயருக்கு எதிராகப்‌ போராடுவதற்கு ஆங்கிலேயரின்‌ உதவியைப்‌ பெற்றுக்‌ கொண்டாலும்‌ தென்கிழக்கு ஆசியாவில்‌ வாசனைத்‌ திரவியங்கள்‌ பெருமளவில்‌ விளையும்‌ தீவுகளில்‌ ஆங்கிலேயரின்‌ ஆகிக்கம்‌ பலப்படுவதை ஒல்லாந்தர்‌ விரும்பவில்லை.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 6, "source_file": "Grade_11_History_Chapter_02", "overlap_reference": "", "created_at": "2026-03-10T11:44:19.934423", "created_by": "chunker", "text_length": 373, "status": "approved", "approved_at": "2026-03-10T17:42:43.474480" }