{ "chunk_id": "ta_edu_Grade11His_07", "heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.", "sub_heading": "2.1 பிரித்தானியரின் ஆசிய வருகை", "text": "இதனால்‌ 1623 ஆம்‌ ஆண்டில்‌ அம்பொய்னா தீவிலிருநீ்த கோட்டை ஒன்றைத்‌ தாக்கிய ஒல்லாந்தர்‌ அங்கிருந்த ஆங்கிலேயர்களில்‌ ஒரு பகுதியினரைக்‌ கொன்றுவிட்டனர்‌. அதற்கு எதிராக ஒல்லாந்தர்‌ மீது பதில்‌ தாக்குதலைப்‌ புரியும்‌ அளவிற்கு அப்பிரதேசத்தில்‌ ஆங்கிலேயரின்‌ பலம்‌ போதியதாக இன்மையால்‌, தென்கிழக்கு ஆசியப்‌ பிரதேசங்‌களில்‌ இருந்து ஆங்கிலேயர்‌ அகன்று சென்றனர்‌.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 7, "source_file": "Grade_11_History_Chapter_02", "overlap_reference": "", "created_at": "2026-03-10T11:45:01.326125", "created_by": "chunker", "text_length": 350, "status": "approved", "approved_at": "2026-03-10T17:42:43.474657" }