{ "chunk_id": "ta_edu_Grade11His_136", "heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.", "sub_heading": "1848 ஆம்‌ ஆண்டு சுதந்திரப்‌ போராட்டம்‌", "text": "கிராம சபைகள்‌ செயலற்றுப்‌ போனமை\n\nகோல்புறூக்‌ சீர்திருத்தத்தினால்‌ கட்டாய அரச சேவை ஒழிக்கப்பட்டது. இராம சபைகளின்‌ செயற்பாடுகளுக்கு இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. அவ்வப்‌ பிரதேச குளங்கள்‌, அணைக்கட்டுகள்‌, கால்வாய்களை அமைப்பதும்‌ பராமரிப்பதும்‌ பெரும்பாலும்‌ கிராம சபைகளாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன.கிராம சபைகளுக்கு உழைப்பைப்‌ பெற்றுக்‌ கொள்ளும்‌ பிரதான வழிமுறையாக அமைந்தது அரச SHLD முறையாகும்‌.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 136, "source_file": "Grade_11_History_Chapter_02", "overlap_reference": "", "created_at": "2026-03-10T17:21:39.101121", "created_by": "chunker", "text_length": 398, "status": "approved", "approved_at": "2026-03-10T17:42:43.502288" }