{ "chunk_id": "ta_edu_Grade11His_01", "heading": "இலங்கை சுந்திரம் அடைதல்", "sub_heading": "அறிமுகம்‌", "text": "1948 ஆம்‌ ஆண்டில்‌ இலங்கைக்கு சுதந்திரம்‌ கிடைக்கப்பெற்றமை இந்நாட்டு வரலாற்றில்‌ முக்கியமான ஒரு திருப்பு முனையாகும்‌. அத்தோடு பாராளுமன்றஜனநாயக ஆட்சி முறை ஒன்று இந்நாட்டிற்கு கிடைக்கப்பெற்றமையால்‌, பிரதி நிதித்துவ ஜனநாயகத்தின்‌ மூலம்‌ அரசியல்‌ செயல்பாடுகளில்‌ தொடர்புபடும்‌ சந்தர்ப்பம்‌ பொது மக்களுக்குக்‌ கிடைக்கப்பெற்றது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 1, "source_file": "Grade_11_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-25T15:34:56.831658", "created_by": "chunker", "text_length": 322, "status": "approved", "approved_at": "2026-02-26T05:50:46.439697" }