{ "chunk_id": "ta_edu_Grade11His_06", "heading": "இலங்கை சுந்திரம் அடைதல்", "sub_heading": "சோல்புரி யாப்பும் சுதந்திரம் பெறலும்", "text": "அவர்களின்‌ அறிக்கையை அடிப்படையாகக்‌ கொண்ட வெள்ளை அறிக்கை இந்நாட்டு அரசுக்‌ கழகத்தால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர்‌ சோல்பரி அரசியல்‌ யாப்புத்‌ தொடர்பான அனுசரணை 1946 ஆம்‌ ஆண்டு மே மாதத்தில்‌ பிரித்தானியாவால்‌ வெளியிடப்பட்டது. சோல்பரி யாப்பின்படி நடைபெற வேண்டிய முதலாவது பாராளுமன்றத்‌ தேர்தலை 1947 ஆம்‌ ஆண்டின்‌ மத்தியில்‌ நடத்துவதற்குத்‌ தீர்மானித்திருந்தாலும்‌ இலங்கைக்கு சுதந்திரம்‌ வழங்குதல்‌ தொடர்பாக அதுவரை பிரித்தானியா எவ்வித அறிவிப்பும்‌ செய்திருக்கவில்லை.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 6, "source_file": "Grade_11_History_Chapter_06", "overlap_reference": "அரசியல்‌ யாப்புத்‌ தொடர்பான அனுசரணை 1946 ஆம்‌ ஆண்டு மே மாதத்தில்‌ பிரித்தானியாவால்‌ வெளியிடப்பட்டது.", "created_at": "2026-02-25T17:19:28.880697", "created_by": "chunker", "text_length": 460, "status": "approved", "approved_at": "2026-02-26T05:50:46.440823" }