{ "chunk_id": "ta_edu_Grade11His_07", "heading": "இலங்கை சுந்திரம் அடைதல்", "sub_heading": "சோல்புரி யாப்பும் சுதந்திரம் பெறலும்", "text": "சோல்பரி யாப்பின்படி நடைபெற வேண்டிய முதலாவது பாராளுமன்றத்‌ தேர்தலை 1947 ஆம்‌ ஆண்டின்‌ மத்தியில்‌ நடத்துவதற்குத்‌ தீர்மானித்திருந்தாலும்‌ இலங்கைக்கு சுதந்திரம்‌ வழங்குதல்‌ தொடர்பாக அதுவரை பிரித்தானியா எவ்வித அறிவிப்பும்‌ செய்திருக்கவில்லை. இதனால்‌ சுதந்திரத்தைப்‌ பெற்றுக்‌ கொள்வதற்கு இலங்கையருக்கு உள்ள உரிமை பற்றி டீ.எஸ்‌. சேனாநாயக்க உட்பட இந்நாட்டுத்‌ தலைவர்கள்‌ பிரித்தானியாவுக்கு தத்துவார்த்த ரீதியிலான கருத்துக்களை முன்வைத்தனர்‌.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 7, "source_file": "Grade_11_History_Chapter_06", "overlap_reference": "இலங்கைக்கு சுதந்திரம்‌ வழங்குதல்‌ தொடர்பாக அதுவரை பிரித்தானியா எவ்வித அறிவிப்பும்‌ செய்திருக்கவில்லை.", "created_at": "2026-02-25T17:20:15.228810", "created_by": "chunker", "text_length": 433, "status": "approved", "approved_at": "2026-02-26T05:50:46.441029" }