{ "chunk_id": "ta_edu_Grade11His_131", "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்", "sub_heading": "புரட்சி ஏற்படல்‌", "text": "1789 ஆம்‌ ஆண்டாகும்போது இவ்வாறு எதிர்ப்புக்கள்‌ தோற்றம்பெற்று இருந்த பிரான்சில்‌ புரட்சி ஏற்படுவதற்கு உடனடிக்‌ காரணமாக அமைந்தது அரசின்‌ நிதி நிலைமை சீரற்று இருந்தமையால்‌ ஏற்பட்ட நிலையாகும்‌. அதற்கு மாற்று நடவடிக்கையாக வரிச்‌ சீர்த்திருத்தம்‌ செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்‌ பொருட்டு எஸ்டேட்‌ ஜெனரல்‌ எனப்பட்ட பாராளுமன்றத்தை 16 ஆம்‌ லூயி மன்னன்‌ கூட்டினான்‌. இது 175 ஆண்டுகள்‌ கூட்டப்படவில்லை.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 131, "source_file": "Grade_11_History_Chapter_07", "overlap_reference": "", "created_at": "2026-03-04T08:31:45.284427", "created_by": "chunker", "text_length": 397, "status": "approved", "approved_at": "2026-03-04T10:11:21.493230" }