{ "chunk_id": "ta_edu_Grade11His_02", "heading": "உலக மகாயுத்தங்களும் இணக்கப்பாடுகளும்", "sub_heading": "இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கான காரணிகள்", "text": "இரண்டாம் உலக மகாயுத்தமானது 1939 ஆம் ஆண்டில் ஆரம்பமாகிய பொழுதிலும் அது திடீரென ஏற்பட்ட ஒரு நிகழ்வு அல்ல. முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற்று ஒரு தசாப்தம் சென்றபின் ஐரோப்பாவில் குறிப்பிட்ட சில நாடுகளின் செயற்பாடுகளும் வல்லரசுகளிடையே நிலவிய போட்டியும் மீண்டும் யுத்தமொன்றுக்கு அடித்தளமிட்டது. இந்நிலைமையை ஆராய்ந்து பார்க்கும்பொழுது இரண்டாம் உலக யுத்தத்திற்கு உரமிட்ட காரணிகள் பலவற்றை காணலாம். அக்காரணிகளைச் சற்று ஆராய்வோம்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 2, "source_file": "Grade_11_History_Chapter_08", "overlap_reference": "", "created_at": "2026-03-14T07:50:54.559499", "created_by": "chunker", "text_length": 418, "status": "approved", "approved_at": "2026-03-14T10:15:55.492903" }