Vipooshanb commited on
Commit
0e9044c
·
verified ·
1 Parent(s): e7673ae

Add cleaned file: Grade_10_History_Chapter_09

Browse files
Files changed (1) hide show
  1. Grade_10_History_Chapter_09.txt +85 -0
Grade_10_History_Chapter_09.txt ADDED
@@ -0,0 +1,85 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ அறிமுகம்
2
+ மறுமலர்ச்சி என்ற சொல்லின் பொருள் மீண்டும் மலர்தல் என்பதாகும். கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் கலை, விஞ்ஞானம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தை விளக்குவதற்காக வரலாற்றாசிரியர்கள் மறுமலர்ச்சி என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
3
+ பழைய கிரேக்க, உரோமப் பண்பாடுகள் நிலவிய காலகட்டம் ஐரோப்பிய வரலாற்றில் பழைய யுகமாகக் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் உரோமப் பண்பாடு வீழ்ச்சி அடைந்த பிறகு உள்ள ஆயிரம் ஆண்டுகள் ஐரோப்பிய வரலாற்றில் நடுப்பாலையுகம் எனப்படுகிறது. நடுப்பாலையுகத்தின் இறுதிப் பகுதியில் பழைய கிரேக்க, உரோமப் பண்பாடுகளில் நிலவிய இலக்கியம், கலை, தத்துவம் தொடர்பாக மீளாய்வு செய்ய ஐரோப்பியர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். அதன் விளைவாக கிரேக்க, உரோமப் பண்பாடுகளில் உள்ள பண்புகளை மீண்டும் பயன்படுத்தவும், இலக்கியம் மற்றும் தத்துவத்தை ஆழமாகக் கற்கவும் ஐரோப்பியர்கள் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக ஐரோப்பிய சமூகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இதன் மூலம் மேற்சொன்ன பழைய நாகரிகம் மீண்டும் மலர்தல் என்ற கருத்துடைய மறுமலர்ச்சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மறுமலர்ச்சி காலத்தில் ஐரோப்பாவில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாக நடுப்பாலையுகம் முடிந்து, நவீன யுகம் ஆரம்பமானது.
4
+ 9.1 மறுமலர்ச்சி தோன்றுவதற்கான காரணங்கள்
5
+ • கொன்ஸ்டாண்டினோப்பிள் துருக்கியர் வசமானது
6
+ நடுப்பாலைக் காலத்தின் இறுதிப் பகுதியில் நன்கு முன்னேற்றம் அடைந்த வர்த்தக நகரமான கொன்ஸ்டாண்டினோப்பிள், ஐரோப்பிய கல்விமான்களை கவர்ந்த ஓரிடமாக விளங்கியது. கொன்ஸ்டாண்டினோப்பிள் நகரிலிருந்த நூலகங்களில் கிரேக்க, உரோம இலக்கிய நூல்கள் வைக்கப்பட்டிருந்ததுடன் அறிஞர்கள் அவற்றைக் கற்பதில் ஈடுபட்டிருந்தனர். எனினும் கி.பி. 1453 ஆம் ஆண்டு இந்த நகரம் இஸ்லாமியரான துருக்கியரின் கைகளுக்கு வந்ததால், கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றிய அறிஞர்களால் தொடர்ந்து அந்நகரில் வாழ முடியாமல் போனது. இதனால் அவர்கள் கிரேக்க, உரோம நூல்களுடன் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுக்குச் சென்று அங்கு கிரேக்க, லத்தீன் மொழிகளைப் பரப்பினர். இதன் விளைவாக கிரேக்க, உரோமப் பண்பாடுகளில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
7
+ வர்த்தக முன்னேற்றமும் புதிய செல்வந்த வர்க்கத்தின் தோற்றமும்
8
+ கி.பி. 12 ஆம் நூற்றாண்டு தொடக்கம் மேற்கு, கிழக்கு நாடுகளுக்கிடையே வர்த்தகத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் வெனிஸ், ஜெனோவா போன்ற வர்த்தக நகரங்களை உடைய இத்தாலியில் வர்த்தகத்தின் மூலமும் வங்கிகளின் மூலமும் பணம் சேகரித்த புதிய செல்வந்தர்கள் உருவாகினர். இந்தச் செல்வந்தர்கள் பழைய மானிய முறைக் பிரபுக்களில் தங்கியிருப்பவர்களாக இல்லாதவர்களாக இருந்ததால், இவர்கள் கலைகளில் ஆர்வம் செலுத்தக்கூடிய சுதந்திர மனநிலையை உடையவர்களாக இருந்ததுடன், கலைகளை ஆதரிக்கக்கூடிய பணபலமும் அவர்களிடம் இருந்தது. இத்தாலியில் அக்காலத்தில் பல சிறிய இராச்சியங்கள் இருந்ததால், அவற்றில் தோன்றிய செல்வந்தர்கள் கலைகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்தனர். மறுமலர்ச்சி முதலில் இத்தாலியில் தோன்றுவதற்கு இது முக்கிய காரணமாக அமைந்தது. இத்தாலியில் ஃப்ளோரன்ஸ் நகரில் வாழ்ந்த மெடிசி (Medici) என்ற செல்வந்தக் குடும்பத்தினர் கலைகளுக்கு அனுசரணை வழங்கிய செல்வந்தர்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
9
+ • அறிவு வளர்ச்சி
10
+ உரோமப் பண்பாடு வீழ்ச்சி அடைந்த பின்னர் சமய நிறுவனங்களை மையமாகக் கொண்ட கல்வி முறையில் முக்கியப் பாடங்களாக இறையியல், தத்துவம், சட்டம் என்பன விளங்கின. எனினும் 12ஆம் நூற்றாண்டின் பின்னர் தோன்றிய புதிய கல்வி நிறுவனங்களில் பழைய இலக்கியம், நாடகம், இலக்கணம், வரலாறு போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டதால் மறுமலர்ச்சி காலத்தில் புதிய கல்விமான்கள் தோன்றினர். அச்சு இயந்திரமும் ஐரோப்பியர்களின் அறிவு வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. 1454 ஆம் ஆண்டு குதன்பெர்க் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார். மறுமலர்ச்சி காலத்தில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சியின் விளைவாக திருச்சபையில் இருந்த குறைபாடுகள் விமர்சனத்திற்குள்ளானது.இங்கிலாந்தின் ஜான் வைக்ளிப், பொஹீமியாவின் ஜான் ஹஸ், பிரான்சில் இராஸ்மஸ், ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் என்போர் திருச்சபையை விமர்சித்தவர்களில் முக்கியமானவர்கள்.
11
+ ஐரோப்பாவின் மாற்றத்திற்கு மறுமலர்ச்சியின் செல்வாக்கு
12
+ ஐரோப்பா அதுவரை மேற்கொண்ட பயண வழியை மாற்றியமைக்க மறுமலர்ச்சி பெரும்பாலும் உதவியது. கல்வி, அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் ஆகிய துறைகளை மாற்றியமைப்பதில் அ��ு வெற்றி கண்டது. குதன்பெர்க் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்ததும் இத்தாலியில் பல்வேறு பிரதேசங்களில் அச்சுக் கூடங்கள் ஆரம்பமானது. அதன் மூலம் பல நூல்கள் வெளியிடப்பட்டன. கிரேக்க, உரோம நூல்கள் அச்சிடப்பட்டமை போன்ற காரணங்களால் இலக்கியம், நாடகம் என்பவற்றில் அதிக அக்கறை காட்டப்பட்டது.
13
+ கல்வி மறுமலர்ச்சி
14
+ பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த மொழி, இலக்கியம், சிற்பம், சித்திரம், கட்டடக் கலை ஆகிய துறைகளில் ஏற்பட்ட மாற்றம் கல்வி மறுமலர்ச்சி எனப்படுகிறது.
15
+ மொழி, இலக்கிய மறுமலர்ச்சி
16
+ நடுப்பாலைக் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் கோத்திக் மொழிகளே நடைமுறையில் இருந்தன. சமய செயல்பாடுகளிலும் சட்டக் கல்வி பயிலும் போது ஓரளவு லத்தீன் மொழி பயன்படுத்தப்பட்டது. கிரேக்க மொழி வழக்கில் இல்லாத மொழி என்ற நிலையை அடைந்திருந்தது. எனினும் மறுமலர்ச்சி காலத்தில் கிரேக்க, லத்தீன் மொழிகளில் எழுதப்பட்ட நூல்களின் பயன்பாடு அதிகரித்ததால் அந்த மொழிகளில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இது கல்வி மறுமலர்ச்சியில் ஏற்பட்ட முக்கிய விளைவாகும்.
17
+ அவ்வாறே லத்தீன், கிரேக்க ஆகிய மொழிகளை கற்றல் நாகரிகம் என்ற நிலையும் ஏற்பட்டது. இதனால் அதுவரை பேசப்பட்ட பிரதேச மொழிகள் வீழ்ச்சி அடையத் தொடங்கின. கிரேக்க, லத்தீன் மொழிகளை கற்ற பின்னர் அந்த மொழிகளில் எழுதப்பட்ட நூல்களை வாசித்ததன் மூலம் இலக்கியத்திலும் புத்துணர்வு ஏற்பட்டது. குறிப்பாக கிரேக்க நாடகங்கள் தொடர்பாக அதிக ஆர்வம் ஏற்பட்டது. இலக்கியத் துறையில் பணியாற்றிய பல்வேறு எழுத்தாளர்கள் இக்காலத்தில் உருவாகினர். இத்தாலியில் தாந்தே, பெட்ரார்க், பொக்காச்சியோ, இங்கிலாந்தில் சர் தோமஸ் மூர், பிரான்சிஸ் பேக்கன், வில்லியம் ஷேக்ஸ்பியர், பிரான்சில் இராஸ்மஸ் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.
18
+ இவர்கள் பல நூல்களை எழுதியனர். தாந்தே எழுதிய டிவைன் காமெடி என்ற காவியத்தையும், பெட்ரார்க் லோராவுக்காக எழுதிய கவிதைகளையும் உதாரணங்களாக குறிப்பிடலாம்.
19
+ • மனிதவாதம்
20
+ மனிதவாதம் என்பது மனிதன் மேன்மையானவன் என்ற கொள்கையாகும். இது மறுமலர்ச்சியின் விசேஷ இயல்பாகும். நடுப்பாலைக் காலத்தில் அனைத்தும் சமயத்தை மையமாகக் கொண்டு நிகழ்ந்தன. எனினும் மனிதவாதம் முக்கியத்துவம் பெற்றதால் அனைத்தையும் தர்க்கரீதியாகப் பார்ப்பது என்ற நிலை ஏற்பட்டது. இறையியல் பாடங்களுக்கு பதிலாக மனிதவாதப் பாடங்களை கற்பிப்பது ஆரம்பமானது. உதாரணமாக இலக்கியம், வரலாறு, கலை, சட்டம், ஒழுக்கவியல் என்பவற்றைக் குறிப்பிடலாம். இதனால் கிரேக்க, உரோம செல்வாக்கிற்கு உட்பட்டு மனிதவாதம் சார்ந்த பல எழுத்தாளர்கள் பலர் இக்காலத்தில் தோன்றினர்.
21
+ மறுமலர்ச்சி காலத்தில் கலைத்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள்
22
+ நடுப்பாலைக் காலத்தில் கலைஞர்கள் குழுக்களின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டனர். இதனால் அக்காலத்தில் தோன்றிய படைப்புகள் குழுவின் பெயரால் அறிமுகமானது. அவ்வாறே கலைப் படைப்புகள் சமய சார்பாக அமைந்தமை சிறப்பம்சமாகும். கலைகளுக்கு அனுசரணை வழங்குவது திருச்சபைக்கு மட்டும் உரியதாக இருந்ததுடன், நடுப்பாலைக் கால சிந்தனை சமயப் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டிருந்தது. இதனால் கலைஞர்கள் சுயாதீனமாக தமது படைப்புகளை உருவாக்க சந்தர்ப்பம் இல்லை. எனினும் மறுமலர்ச்சி காலத்தில் இவை அனைத்தும் மாற்றமடைந்தன. கலைஞர்களை ஆதரிக்க உலகியலைப் போற்றும் செல்வந்தர்கள் முன்வந்தனர். மறுமலர்ச்சி காலத்தில் சிறப்பிடம் பெற்ற மனிதவாதத்தின் விளைவாக கலைஞர்கள் சுயமாகச் செயல்பட்டு தமது படைப்புகளை வெளிக்கொணரத் தொடங்கினர். இதுவரை குழு ரீதியான பெயரில் அறிமுகமான கலைப்படைப்புகள் அவற்றை உருவாக்கியோரின் பெயரில் வெளிவர ஆரம்பமானது. இதனால் சமய கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்குப் பதிலாக தனியார்மயத்திற்கு இடமளிக்கும் உலகியல் ரசனையை முன்னிலைப்படுத்தும் கலைப்படைப்புகள் பல தோன்றின.
23
+ சித்திரக்கலை
24
+ கலைகளில் சித்திரக்கலையே மறுமலர்ச்சி காலத்தில் பெரும் மாற்றத்திற்கு உள்ளானது. இத்தாலியில் ஃப்ளோரன்ஸ் நகரில் புதிய சித்திரக்கலைகளை உருவாக்கிய மையம் ஒன்று இருந்தது. உலகியல் ரசனையின் பொருட்டு இயற்கைக்கு முன்னுரிமை அளித்து சித்திரம், சிற்பம் என்பன உருவாக்கப்பட்டன. இதுவரை சமய சார்பாக முக்கிய இடம் வகித்த இயேசுநாதர், கன்னி மரியாள் போன்றோரின் உருவங்கள் வரையப்பட்டன. எனினும் மறுமலர்ச்சி காலத்தில் செல்வந்தர்களின் உருவங்களும் சித்திரமாக வரையப்படத் தொடங்கின.
25
+ இக்காலத்தில் இருந்த முக்கிய சித்திரக் கலைஞர்கள்:
26
+ • லியோனார்டோ டா வின்��ி
27
+ • மைக்கேல் ஏஞ்சலோ
28
+ • ரஃபேல்
29
+ • மெசாச்சியோ
30
+ • போட்டிசெல்லி
31
+ லியோனார்டோ டா வின்சி சித்திரக் கலைஞராக மட்டுமன்றி பல துறைகளிலும் சிறந்து விளங்கினார். அவர் கவிஞராகவும், பாடகராகவும், விஞ்ஞானியாகவும், பொறியியலாளராகவும் இருந்தார். அவரது புகழ்பெற்ற படைப்புகள்:
32
+ • மோனா லிசா
33
+ • இறுதி இராப்போசனம்
34
+ இவை இன்றும் உலகப் புகழ் பெற்றவை. மைக்கேல் ஏஞ்சலோவும் அக்காலத்தின் சிறந்த சித்திரக் கலைஞராவார். அவர் சிற்பக்கலையிலும் கட்டடக்கலையிலும் சிறந்து விளங்கினார். சிஸ்டைன் ஆலயத்தின் பாவுகையில் அவர் வரைந்த சித்திரங்கள் சிறப்பிடம் பெறுகின்றன.
35
+ “இறுதி தீர்ப்பு”, “ஆதாமின் படைப்பு” ஆகியவை அவரது முக்கிய படைப்புகளாகும்.
36
+ சிற்பக்கலை
37
+ சிற்பக்கலையும் மறுமலர்ச்சி காலத்தில் சிறப்பிடம் பெற்றது. பளிங்குக் கற்களில் சிற்பங்கள் செய்தல் இக்காலத்தில் காணப்பட்ட சிறப்பம்சமாகும். மைக்கேல் ஏஞ்சலோ மறுமலர்ச்சி காலத்தின் சிறந்த சிற்பக் கலைஞராவார். மெடிசி குடும்பத்தில் லொரென்சோ மெடிசியின் உருவத்தை இவர் பளிங்குக் கல்லில் வடிவமைத்தார். அவரது புகழ்பெற்ற சிற்பங்கள்:
38
+ • பியேட்டா
39
+ • மோசஸ்
40
+ • டேவிட்
41
+ கட்டடக்கலை
42
+ மறுமலர்ச்சி காலத்தில் கட்டடக்கலையிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. நடுப்பாலைக் காலத்தில்: முனை கோபுரங்கள் , வளைவுக் கூரைகள் , பிரமிட் வடிவங்கள் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களாக இருந்தன. மறுமலர்ச்சி காலத்தில் வட்ட வடிவ வளைவுகள் , உயர்ந்த தூண்கள் , அரைவட்ட சிகரங்கள் முக்கியத்துவம் பெற்றன.
43
+ உரோமர்களை பின்பற்றி இக்காலத்தில் சொகுசான மாளிகைகளும் அமைக்கப்பட்டன. மறுமலர்ச்சி கட்டடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகள் புனித பேதுரு பேராலயம் , ஃப்ளோரன்ஸில் உள்ள பேராலயம் பிரமன்டே, மைக்கேல் ஏஞ்சலோ, லியோனார்டோ டா வின்சி, ரஃபேல் ஆகியோர் இக்காலத்தின் சிறந்த கட்டடக்கலைஞர்கள்.
44
+
45
+ விஞ்ஞான வளர்ச்சி
46
+ மறுமலர்ச்சி காலத்தின் முக்கிய நிகழ்வுகளில் விஞ்ஞான முன்னேற்றமே சிறந்த இடத்தைப் பெறுகிறது. கிரேக்க, உரோம நூல்களில் இருந்து முன்மாதிரிகளைப் பெற்ற அறிஞர்கள், ஒரு விடயத்திற்கே மட்டும் கட்டுப்படாமல் பல விடயங்களை விஞ்ஞான ரீதியாக ஆராய முற்பட்டனர்.
47
+ புவி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற அனைத்தையும் ஆராய்ந்தனர். இதன் விளைவாக புவி���ைப் பற்றிய புதிய கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
48
+ புவி தொடர்பாக முன்வைக்கப்பட்ட புதிய கருத்து
49
+ போலந்தைச் சேர்ந்த நிக்கோலஸ் கோபர்னிக்கஸ் புவி கோள வடிவமானது , அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று கண்டுபிடித்தார்.
50
+ விஞ்ஞானத் துறைக்கு பெரிய பங்களிப்பு செய்த இவர், நவீன வானியல் விஞ்ஞானத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
51
+ ஜெர்மனியரான ஜோஹன்னஸ் கெப்லர்
52
+ கெப்லர், கோபர்னிக்கஸ் கூறிய கருத்துக்களை உறுதிசெய்து அதை முன்னெடுத்துச் சென்றதுடன், ஞாயிற்றுத் தொகுதி கோள்கள் அனைத்தும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றனவென்றும் கூறினார்.
53
+ இத்தாலியரான கலிலியோ கலிலி
54
+ தொலைநோக்கியை கண்டுபிடித்தார். அதன் மூலம் வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வியாழனைச் சூழ உபகோள்கள் உள்ளன எனக் கண்டுபிடித்தார். அவர் எதையும் செய்து பார்க்கும் முறையைப் பின்பற்றியதால் செயல்பாட்டு விஞ்ஞானத்தின் தந்தை எனப் படுகிறார்.
55
+ இங்கிலாந்தைச் சேர்ந்த ஐசக் நியூட்டன்
56
+ புவியீர்ப்புச் சக்தியை கண்டுபிடித்தார்.
57
+ வைத்தியத் துறையின் முன்னேற்றம்
58
+ மறுமலர்ச்சி காலத்தில் வைத்தியத் துறையில் பல புதிய கண்டுபிடிப்புகள் ஏற்பட்டமையால் அத்துறையிலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆங்கிலேயரான வில்லியம் ஹார்வே மனித உடலின் குருதி சுழற்சிமுறையை தொடர்பான முக்கிய தகவல்களை முன்வைத்தார். சுவிஸ் இனத்தவரான பராசெல்சஸ் நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அதற்கான சிகிச்சைகளையும் பரிசோதனை மூலம் கண்டறிந்தார். நவீன மருந்து தொடர்பாகவும் நோய்களைச் சிகிச்சையளித்தல் தொடர்பாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். சுவிஸ் இனத்தவரான மைக்கல் சர்வேட் மனித உடலின் குருதி, இதயத்தின் வலது பக்கத்திலிருந்து புறப்பட்டு சுவாசப்பையில் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் இதயத்தை அடைந்து உடல் முழுவதும் பரவிச் செல்கின்றது என்பதைக் கண்டறிந்தார் ஜெர்மனியரான ஜோஹன்னஸ் குதன்பெர்க் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார்.
59
+ அரசியல் மறுமலர்ச்சி
60
+ நிலமானிய காலத்தில் ஒவ்வொரு பிரதேசத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரம் பிரதேச ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பிரதேச ஆட்சியாளராக பரம்பரையான நிலப் பிரபுக்கள் செயல்பட்டனர். அவர்கள் சுதந்திரமாக இயங்கியதால் அரசனைவிட அதிகாரம் உடையவர்களாக இருந்தனர்.
61
+ அக்கால மக்கள் பிரதேச ஆட்சியாளர்களின் கீழ் இருந்ததால் தமது பிரதேசம் என்ற நிலையில் வாழ்ந்தார்களேயன்றி, ஒரு நாட்டின் மக்கள் என்ற நிலையில் செயல்படவில்லை. மறுமலர்ச்சி காலத்தில் தேசிய அரசுகள் தோன்றியது அரசியல் துறையில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாகும். பல பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரு அரசனின் கீழ் ஆட்சி செய்யும் முறை இதன் மூலம் உருவானது. இதனால் அரசியலில் அரசன் முக்கியத்துவம் பெற்றதுடன், அனைத்து அதிகாரங்களும் அரசனை மையமாகக் கொண்டு விளங்கின. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வர்த்தக முன்னேற்றத்துடன் நடுத்தர வர்க்கம் ஒன்றும் தோன்றியது. நடுத்தர வர்க்கினர் என்போர் வர்த்தகத்தின் மூலம் பணத்தைச் சேகரித்த செல்வந்தர்களாவர். இந்த வர்க்கத்தில் வர்த்தகர்கள், வங்கியாளர்கள், கப்பல் உரிமையாளர்கள், போக்குவரத்து வண்டிகளின் உரிமையாளர்கள் போன்றோர் அடங்குவர்.
62
+ நடுத்தர வர்க்கினர் சமூகத்தில் வலிமை பெற்றதுடன், அதுவரை நில உரிமையாளர்களாக இருந்த பிரபுக்களின் அதிகாரங்களும் உரிமைகளும் நலிவுறத் தொடங்கின. தேசிய அரசுகளின் அரசர்கள் தமது நிர்வாக செயல்பாடுகளில் புதிதாகத் தோன்றிய நடுத்தர வர்க்கினரின் உதவியைப் பெற்றுக் கொண்டனர். அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அரச அனுசரணை கிடைத்தது.
63
+ பொருளாதார மறுமலர்ச்சி
64
+ மறுமலர்ச்சி காலத்தில் ஐரோப்பாவில் பொருளாதாரத் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. நடுப்பாலைக் காலத்தில் நிலமானிய முறையை மையமாகக் கொண்ட சுயதேவையைப் பூர்த்தி செய்யும் பொருளாதார முறை நலிவடைந்து, வர்த்தக முன்னேற்றம் ஏற்பட்டது.
65
+ ஐரோப்பாவில் தேசிய அரசுகள் தோன்றிய பின்னர் வர்த்தகத்தை விரிவடையச் செய்யும் பொருட்டு அரச அனுசரணை நேரடியாகக் கிடைத்தது. அதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் தேசிய வர்த்தகக் கொள்கை, தேசிய வரிக் கொள்கை என்பன செயல்படத் தொடங்கின. நாடு பயணங்களின் விளைவாக புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் ஐரோப்பியர்கள் கிழக்குத் தேசங்களுக்கும், அமெரிக்காவுக்கும் செல்லக்கூடியதாக இருந்தது. அப்பிரதேசங்களில் இருந்து வாசனைப் பொருட்கள், தங்கம், வெள்ளி, முத்து, இரத்தினக் கற்கள், யானைத் தந்தம் போன்றவற்றை ஐரோப்பாவிற்கு கொண்டு வர முடிந்தது. இத��் மூலம் வர்த்தக வளர்ச்சி ஏற்பட்டது.
66
+ வர்த்தக வளர்ச்சியின் காரணமாக பணப்புழக்கம் அதிகரித்தது. நாணயத்தாள்கள், நாணயக் காசுகள் போன்றவை பணப்புழக்கத்திற்கு வந்தன. பணத்தைத் தூர இடங்களுக்கு கொண்டு செல்லுதல் சிரமமாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருந்ததால் காசோலை முறையும் வங்கி முறையும் ஆரம்பமானது. வர்த்தகர்கள் தமது வர்த்தகத்திற்குத் தேவையான பணத்தை வங்கி மூலம் கடனாகப் பெற முடிந்தது.
67
+ புதிய வர்த்தகப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டல்
68
+ கி.பி. 1453 ஆம் ஆண்டு கொன்ஸ்டாண்டினோப்பிள் நகரம் துருக்கியரால் கைப்பற்றப்பட்டதும் மேற்கு–கிழக்கு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் தடைப்பட்டது. கடல், தரை வழிகள் அனைத்தும் பெரும்பாலும் துருக்கிய பேரரசின் கீழ் வந்தன.
69
+ இதனால் ஆசியாவில் உள்ள பொருட்களைப் பெறுவதற்காக கிழக்கு நாடுகளுக்குச் செல்லக்கூடிய கடல் வழியை கண்டுபிடிக்க ஐரோப்பியர்கள் முனைந்தனர். புதிய கடல் வழியை கண்டுபிடிக்க உதவும் சாதகமான சூழலும் அக்காலத்தில் ஐரோப்பாவில் நிலவியது. பாதுகாப்பாக கடற்பயணம் செய்யக்கூடிய திசையறி கருவி, வட நட்சத்திரமானி போன்றன கண்டுபிடிக்கப்பட்டன. , மறுமலர்ச்சி காலத்தில் புவி கோள வடிவமானது என்பது அறியப்பட்டது , தொலமியின் உலகப் படத்தின் மூலம் உலகம் பற்றிய தெளிவான விளக்கம் கிடைத்தது , தேசிய அரசுகள் நாடுகாண் பயணங்களுக்கு அனுசரணை வழங்கின. நாடுகாண் பயணங்களில் அதிக ஆர்வம் காட்டிய நாடுகளாக கடலை அடைந்த போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் விளங்கின. போர்ச்சுகல் இளவரசன் ஹென்றி (கடலோடி ஹென்றி) நாடுகாண் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பை அளித்தான்.
70
+ போர்ச்சுகலிலிருந்து கிழக்குத் தேசங்களை அடைய கடல் வழியை கண்டுபிடிக்க முயன்ற பர்த்தலோமேயு டயஸ் ஆப்பிரிக்காவின் தென் முனையை அடைந்ததும் அங்கு புயலால் சிக்கி அப்பிரதேசத்திற்கு “புயல் முனை” என்று பெயரிட்டு மீண்டும் தன் தாய்நாட்டுக்குத் திரும்பினான். பின்னர் போர்ச்சுகல் மன்னனால் “நன்னம்பிக்கை முனை” என அதற்கு பெயரிடப்பட்டது. பர்த்தலோமேயு டயஸ் சென்ற வழியாகத் தன் பயணத்தை மேற்கொண்ட வாஸ்கோ ட காமா இந்தியாவின் கள்ளிக்கோட்டையை அடைந்தான். இது ஐரோப்பியர்கள் ஆசியாவிற்கு வருவதற்கு முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கடற்பாதையாகும். ஸ்பெயின் மன்னன் பேர்டினண்ட் மற்றும் அவன் மனைவி இசபெல்லா ஆகியோரின் அனுசரணையுடன் கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேற்கிந்திய தீவுகளை கண்டுபிடித்தான். அமெரிக்கோ வெஸ்புச்சி அமெரிக்காவை (புதிய உலகம்) கண்டுபிடித்தான். பேர்டினண்ட் மகலன் மற்றும் பிலிப்பைன்ஸை, கப்பொட் சகோதரர்கள் கனடாவையும் கண்டுபிடித்தனர்.
71
+ மறுமலர்ச்சி காலத்தில் உலகமயமாகுதல்
72
+ மறுமலர்ச்சி முதன் முதலில் இத்தாலியில் ஃப்ளோரன்ஸ் நகரில் ஆரம்பமானது. பின்னர் அது இத்தாலியின் ஏனைய பிரதேசங்களுக்கு பரவி, அதன் பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவியது. மறுமலர்ச்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நாடுகாண் பயணங்களால் ஐரோப்பியர்கள் புதிய நாடுகளை கண்டுபிடித்ததுடன் அங்கு செல்லவும் தொடங்கினர். அதன் விளைவாக ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற கண்டங்களில் பல நாடுகள் பல்வேறு ஐரோப்பிய இனத்தவர்களின் ஆதிக்கம் பரவியது. 16 ஆம் நூற்றாண்டிலிருந்து நான்கரை நூற்றாண்டுகள் வரை இக்கண்டங்களில் உள்ள சில நாடுகள் ஐரோப்பிய இனத்தவரின் குடியேற்ற நாடுகளாக விளங்கின. இதனால் அரசியல் மட்டுமன்றி வர்த்தக, பொருளாதார, பண்பாட்டு ரீதியாகவும் ஐரோப்பாவுக்கும் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் இடையே தொடர்புகள் ஏற்பட்டன.
73
+ இந்த தொடர்புகளின் காரணமாக அச்சுத் தொழில் உலகெங்கும் பரவியது. அதன் மூலம் ஐரோப்பிய சிந்தனைகள், இலக்கியம் போன்றவை ஏனைய நாடுகளையும் சென்றடைந்தன. குடியேற்ற நாடுகளில் செல்வந்தர்களின் பிள்ளைகள் கல்விக்காக ஐரோப்பாவிற்கு சென்றனர். ஐரோப்பியர்கள் தமது குடியேற்ற நாடுகளில் தாம் பின்பற்றிய சமயங்களைப் பரப்பினர். அவ்வாறே ஆலயங்கள், கட்டடங்கள் அமைத்ததன் மூலம் ஐரோப்பாவில் அக்காலத்தில் சிறப்பிடம் பெற்ற கட்டட முறை, கலைகள் என்பன ஏனைய நாடுகளையும் சென்றடைந்தன. ஐரோப்பாவுக்கும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளின் காரணமாக ஐரோப்பிய விஞ்ஞானத் தொழில்நுட்ப அறிவு உலகம் முழுவதும் பரவியது. இதனால் மறுமலர்ச்சி உலகமயமாகியது.
74
+ 9.2 மறுமலர்ச்சி இலங்கையின் மீது செலுத்திய தாக்கம்
75
+ போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோர் இலங்கைக்கு வந்தமையால் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பிய இனத்தவர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்திய கால��்தில் கண்டி இராச்சியம் சுயாதீன அரசாகச் செயல்பட்டமையால் இந்த நாட்டின் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த அவர்களால் முடியவில்லை. எனினும் 1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயரின் கீழ் வந்தது. 1948 ஆம் ஆண்டு வரை அது அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்ததால் அக்காலத்தில் இந்த நாட்டின் அரசியல் மட்டும் அல்லாமல் பொருளாதாரம், சமூக, பண்பாட்டிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
76
+ அரசியல் மாற்றங்கள்
77
+ 19 ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி என்பது மதச் சீர்திருத்தம், அச்சுக்கலையின் முன்னேற்றம், முதலாளித்துவ எழுச்சி, கைத்தொழில் புரட்சி என்பன காரணமாக ஐரோப்பாவில் பெரிய சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. இதன்படி பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் புதிய சிந்தனையின் தாக்கத்தால் நிகழ்ந்தவை எனக் கொள்ளலாம். கண்டி இராச்சியம் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் வரும் வரை மரபு ரீதியான முடியாட்சி முறை இங்கு நிலவிய போதிலும், இலங்கை குடியேற்ற நாடாகியதும் அந்த முறை முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் காரணமாக பின்னர் பாராளுமன்ற ஆட்சி முறை இந்த நாட்டில் ஏற்பட்டது. அதுவரை நிலவிய பிரதேச ஆட்சி முறையும் பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் மாற்றமடைந்தது. கண்டி இராச்சியக் காலத்தில் இருந்த அதிகாரம், வேளாளை, மொஹொட்டால, கோரளை போன்ற மரபு ரீதியான அலுவலர் வகுப்புகளுக்குப் பதிலாக புதிய ஆட்சி முறைக்கு பொருத்தமான புதிய அலுவலர்கள் நியமனம் பெற்றதோடு நிர்வாகப் பிரிவும் தோன்றியது.
78
+ அவ்வாறே நாட்டில் நிலவிய பழைய சட்ட திட்டங்கள் மறைந்தன. ஒல்லாந்தரது காலத்தில் உரோம–டச்சு சட்டம் இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் அக்கால ஐரோப்பிய சட்ட அடிப்படைகளுக்கு ஏற்ப சட்டத் தொகுதியும் நீதியை நிலைநாட்டும் நீதிமன்றத் தொகுதியும் இங்கு நிறுவப்பட்டன.
79
+ பொருளாதார மாற்றங்கள்
80
+ நடுப்பாலைக் காலத்தில் ஐரோப்பாவில் வர்த்தக நடவடிக்கைகளின் போது முன்னிலையில் காணப்பட்ட வெனிஸ், ஜெனோவா, கொன்ஸ்டாண்டினோப்பிள் போன்ற மத்தியதரைக் கடலை அண்டிய நகரங்களுக்கு பதிலாக, மறுமலர்ச்சி காலத்தின் பின்னர் போர்த்துக்கல், ஸ்பெயின், பிரான்ஸ், ஒல்லாந்து, இங்கிலாந்து போன்ற அத்திலாந்திக் கடலை அண்டிய நாடுகள் முக்கியத்துவம் பெற்றன.
81
+ ஐரோப்பியர் இலங்கைக்கு வந்ததோடு இலங்கைக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் நேரடி வர்த்தகத் தொடர்பு ஆரம்பமானது. வர்த்தக நோக்கத்துடன் ஒல்லாந்தர் இந்த நாட்டில் கருவாவை பயிரிட்டதுடன், பிரித்தானியர் காப்பி, கொக்கோ, சிங்களோனா, தேயிலை, இறப்பர் போன்ற வர்த்தகப் பயிர்களை பயிரிட்டனர். ஐரோப்பியரின் கீழ் இலங்கையர் வர்த்தகப் பொருளாதாரத்திற்குப் பழக்கப்பட்டதால், அதுவரை இருந்த கிராம தன்னிறைவு பொருளாதார முறை வீழ்ச்சியுற்றது. ஆங்கிலேயரால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தத்தினால் இலங்கையில் ஏற்றுமதி–இறக்குமதி பொருளாதாரம் தோன்றியது. இதனால் உணவுப் பொருட்களையும் கூட இலங்கை இறக்குமதி செய்தது.
82
+ இது தவிர பணப்புழக்கம் அதிகரித்தல், புகையிரதப் பாதைகள், பெருந்தெருக்கள் போன்றவை அமைக்கப்பட்டமை, கொழும்பு, காலி, திருகோணமலை போன்ற வர்த்தக நகரங்கள் தோன்றியமை, நடுத்தர வர்க்கினர் தோன்றியமை என்பன பொருளாதாரத் துறையில் இந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
83
+ சமூக, பண்பாட்டு மாற்றங்கள்
84
+ அச்சு இயந்திரம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது மறுமலர்ச்சியின் தாக்கத்தை இந்த நாடு பெற்றதன் மற்றொரு சந்தர்ப்பமாகும். அச்சு இயந்திரம் ஒல்லாந்தரால் இங்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போதிலும் அது ஆங்கிலேயர் காலத்திலேயே பிரபல்யம் அடைந்தது. அச்சுத் துறையின் முன்னேற்றத்துடன் நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பன அச்சிடப்பட்டதால் சமூகம் அறிவுத்துறையில் உயர்நிலை அடைந்தது. இதன் மூலம் ஐரோப்பிய சிந்தனையும் இலக்கியமும் இந்த நாட்டிற்கு கிடைத்தது. பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் இலங்கையர் சிலர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று கல்வி கற்று இங்கு வந்தமை மேற்கத்திய சிந்தனைகள் இந்த நாட்டில் நுழைய வழியாக அமைந்தது. ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயம் பிளவுற்ற காலப்பகுதியிலேயே ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தனர். 1517 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட சமயப் புரட்சி இந்தப் பிளவுக்கு காரணமாக இருந்தது. போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரப் பகுதியில் கத்தோலிக்க சமயத்தைப் பரப்பியதுடன், ஒல்லாந்தர் தாம் பின்பற்றிய புரட்டஸ���தாந்து சமயத்தை இங்கு பரப்பினர். இதனால் ஐரோப்பாவில் நிலவிய சமயப் பிரிவுகள் இங்கும் தோன்றின.
85
+ ஒல்லாந்தரது காலத்தைப் போலவே ஆங்கிலேயர் காலத்திலும் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விச் செயல்பாடுகளால் மேற்கு நாடுகளின் கல்வி முறை இங்கு பரவியது. அவ்வாறே ஐரோப்பியர் இலங்கையில் நிறுவிய தேவாலயங்கள் மற்றும் கட்டடங்களின் மூலம் ஐரோப்பிய கட்டடக்கலை இந்த நாட்டில் புகுந்தது.