text
stringlengths
344
1.83k
chunk_id
int64
1
41
author
stringclasses
1 value
book
stringclasses
1 value
வாழ்வை நோக்கி விஜயா லட்சுமணன் lvtr1960@gmail.com    நாவல்   மின்னூல் வெளியீட்டாளர்: https://FreeTamilEbooks.com அட்டைப்படம்: பலராமன்  balaraman.l@gmail.com மின்னூலாக்கம்: த. சீனிவாசன்  tshrinivasan@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation    Ebook Publisher: https://FreeTamilEbo...
1
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
  விஜயா லட்சுமணன் lvtr1960@gmail.com ஆசிரியர் அறிமுக உரை:    முப்பது ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து விட்டு ஓய்வு பெற்றவர் விஜயா லட்சுமணன். அவருக்கு ஓவியம், சமையல், நடனம், எழுத்து முதலிய கலைகளில் நாட்டம் மிகுதி. இயற்கையின் அழகை இன்றும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் போற்றி பாராட்டுபவர். வாழ்வின் மீது சோர்வோ சலிப்...
2
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
அசை போட்டது பழைய நினைவுகளை. அவரது சொந்த கிராமமான பசுவந்தனையை நோக்கி…..பயணப்பட்டது அவரது உள்ளம். உயிர் நாடி   அன்றொரு நாள் அதிகாலை ஐந்து மணி இருக்கும். சிவராமன் தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்த்த பொழுது அப்பா ஆறுமுகம் வயலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். "அப்பா, அப்பா நானும் கூட வரேனே. என்னையும் உங்ககூட கூட்டிட்டுப...
3
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
கால் வைத்தால்தான் இந்த வையகத்தில் அனைவருக்கும் உணவு கிடைக்கும். பாடுபட்டால் தான் நாம் சாப்பிட முடியும்,"என கூறிக்கொண்டே கால்வாயை வெட்டி வயலுக்கு நீர் பாய்ச்சத் தொடங்கினார்.  சிவராமன் தானும் இறங்கினான். கதிர்கள் வெளிவந்த நிலையில் நெல்மணிகள் இவனைப் பார்த்து சிரித்தன. ஒரு நெற்கதிரைப் பிடித்து அதில் உள்ள நெல்மணிகளை எண்ணத்...
4
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
சாப்பிடுவிதில்லையே. இந்த காக்கா மட்டும் எப்படி… என சிந்தித்துக் கொண்டே சாப்பிட்டான். அப்பாவும் சாப்பிட்டுக் கொண்டே சொன்னார். "இந்த காக்கைகள் நமக்கு எவ்வளவு உதவி செய்கின்றன தெரியுமா? இவைகள் இந்த உலகத்தையே சுத்தம் செய்கின்றன. தேவை இல்லாத அழுகிய பொருட்கள், இறந்த உயிரினங்களைத் தின்று நாம் வாழுமிடத்தைச் சுத்தம் பண்ணுகின்றன...
5
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
புரியும் என நினைக்கிறேன்", என்றார். அந்த ஊரின் நடுவே ஓர் அழகான குளம் அமைந்திருந்தது. இருவரும் அங்கே சென்று சேறு, சகதி, அழுக்கு போக நன்கு குளித்தனர். நீச்சல் அடித்துக் குளிப்பது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வெளியே வர மனமே இல்லை. ஆனால் அப்பா "நேரம் ஆயிருச்சு. அம்மா காத்திருப்பாள். வா, வீட்டுக்கு போகலாம்" என்று கூப்பி...
6
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
. இளநீர், பழங்கள் என அந்த நாள் மிக இனிமையானதாக அமைந்தது. நாமே வளர்த்து, நாமே அதைப் பறித்துச் சாப்பிடுவதில் ஒரு தனி சுகமே இருக்கிறது. இதே முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இளைஞர்கள் பலர் முன் வந்து உள்ளனர். உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளனர்.அதிலும், குறிப்பாக இரசாயனம் இல்லாத, இயற்கை முறையை நாடி வரு...
7
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
இடமாக அந்தப் பூங்கா திகழ்ந்தது. தாத்தாவும்,பேரனும் கைகளைக் கோர்த்தவாறு நடந்து அந்தப் பூங்காவை அடைந்தனர். உள்ளே சென்றதும் தமிழினியன் "தாத்தா, நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுறேன். நீங்க ஒரு அரைமணி நேரம் நடந்துட்டு வாங்க," என்றான். "அதுவும் சரிதான். நீ போய் விளையாடு" என்று கூறியவாறே நடக்கத் தொடங்கினார்,தாத்தா. ப...
8
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
பிடித்தப்படி நண்பர்களுடன் சேர்ந்து ஊஞ்சலாடியது என் நினைவில் இன்றும் பசுமரத்தாணி போல் உள்ளது. அதேபோல் வேப்பமரத்தில் கயிறு, பலகை கொண்டு ஊஞ்சல்கட்டி விளையாடுவோம்" என்றார் சிரித்தபடியே. "சறுக்கு எப்படி விளையாடுவோம் தெரியுமா? கண்மாய் பகுதியிலுள்ள உயர்ந்த கரைமீது அமர்ந்து கொண்டு அதிலிருந்து சறுக்கிக்கொண்டு கீழே வருவோம். அதெல...
9
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
மூன்றாவது குழியில் சேர்க்க வேண்டும். முதலில் சேர்ப்பவர் வெற்றி பெற்றவராவர். பம்பரம் சுற்றி விளையாடுவது, அதற்குத் தனித்திறன் வேண்டும். பம்பரத்தைக் கயிறு கொண்டு சுற்றி சுண்டி இழுத்துவிட்டு, பம்பரத்தைச் சுழல விடவேண்டும். யாருடைய பம்பரம் அதிகநேரம் சுழல்கின்றதோ, அவரே வெற்றி பெற்றவர். கிட்டிப்புள் விளையாட்டு இரண்டு குச்சிகள்...
10
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
."ஆமாம், அந்தக் காலத்துல பெண்களும் விளையாடுவாங்களா தாத்தா?" என சந்தேகத்துடன் கேட்டான். ஒரு பெண் பெரிய பெண்ணாகும்வரை தான் தெருவில் வந்து விளையாடுவாள். அதற்கப்புறம் வீட்டுக்குள்தான் விளையாட்டு. பெண்கள் பெரும்பாலும் நொண்டியடித்து விளையாடுவார்கள். ஒருகாலால் தாவி, தாவி மற்றவர்களைப் பிடிப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். அ...
11
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
த் தட்டி கற்களை வாரி எடுத்து விளையாடும் விளையாட்டு தட்டாங்கல். சோழி அல்லது முத்துகொண்டு தரையில் கட்டமிட்டு விளையாடுவது தாயம். இன்றளவும் பெரும்பாலும் தாயம் விளையாடப்படுகின்றது. மற்ற விளையாட்டுகள் மெல்ல, மெல்ல மக்கள் மனதில் இருந்து மறைந்து விட்டன, என்றார் தாத்தா ஒரு பெருமூச்சுடன். விளையாட்டு ஆர்வத்தில் இருவரும் நேரம் போவ...
12
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
, அழிக்கவும் முடியும். இதை அறிந்த காரணத்தினால்தான், ஆதிமனிதன் இயற்கையை வணங்கினான். மழை வெள்ளம், நில அதிர்வு, புயல்காற்று, பெரும் நெருப்பு முதலியவை மனித இனத்தையே அழிக்கும் பெரும் சக்திகளாகும். அந்தக் காலத்திலே மாதம் மும்மாரி பெய்யும். மக்கள் பயிர்செய்து நிம்மதியாக வாழ்ந்தனர். இப்போதெல்லாம் செய்திகள் மூலம் அமேசான் காடுகள...
13
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
வீடே அமைதியாகி விட்டது. ஈசிசேரில் சாய்வாக அமர்ந்து கொண்டு, சிவராமன் கண்களை மெதுவாக மூடினார். அவர் கண்முன்னே பார்வதியின் தோற்றம் நிழலாடியது. பார்வதி அவரை விட்டு பிரிந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்! பார்வதி சமைத்தால் பத்து தெருவுக்கும் மணக்கும். பக்கத்து வீட்டு இருளாயி வந்து, ...
14
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
, பர்கர் என்று என்னென்னவோ சாப்பிடுகிறீர்கள். அதெல்லாம் உடம்புக்கு அவ்வளவு நல்லது இல்லைப்பா" என்றார் அன்புடன். "ஆமாம் தாத்தா. நீங்க சொல்வது சரிதான்". இன்றைக்கு எங்க சயின்ஸ் டீச்சர் ஊட்டச்சத்து பற்றிய பாடம் நடத்தினார்கள். அப்பொழுது சத்துள்ள உணவு பற்றி எடுத்துக் கூறினார்கள். இனிமேல் நான் பயறுவகைகள், கீரைகள், பழங்கள், காய்...
15
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
நலமுடன் இருக்கிறாள். சிசேரியன் என்பது சர்வ சாதாரணமான இந்தக் காலத்தில் கூட அவளுக்கு சுகப்பிரசவம் ஆனது மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய ஒரு விசயம்", என பெருமையுடன் கூறினார். "நீ சொல்வது முற்றிலும் சரிதான். வளர்கின்ற இளம் பருவத்தில் நாம் உணவில் அக்கறை காட்ட வேண்டியது மிகவும் அவசியம். எல்லா உறுப்புகளும் வளர்ச்சி அடையும் இந்த ந...
16
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
செய்கின்றீர்கள். அந்தக் காலத்தில் உடல் பருமன் உள்ள பெண்களை அதிகமாக பார்க்க முடியாது. ஆனால், இந்தக் காலத்தில் சிறுவயதிலேயே பலர் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். சிறிது யோசனையுடன் “அப்பா, ஆனால் இப்போது உள்ள மக்களுக்குக் கொஞ்சம் விழிப்புணர்வு வந்துள்ளது. இயற்கை உணவு வகைகளையே சாப்பிடுகின்றனர். பதப்படுத்த பட்ட உணவு வகைகளை ...
17
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
ஆரம்பித்தார். அப்பா விடுபட்டுப் போன அலுவலக வேலையில் மும்முரமாக மூழ்கிப் போனார். மகிழினி தனது புத்தக அலமாரியை அடுக்கிக் கொண்டிருந்தாள். தமிழினியனும், தாத்தாவும் பால்கனியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டே பேசினர். "தாத்தா"என கூப்பிட்டவன், "இன்னைக்கு ஒரே ஜாலிதான் ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்," என்றான். சிறிது நேரம்...
18
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
த்துக் கொண்டிருந்த குழம்பை கரண்டியால் கிண்டி விட்டுக் கொண்டிருந்தார்.  இன்னொரு பக்கம் அவனது சித்தி அம்மியில் மசாலா அரைத்துக் கொண்டிருந்தாள். அவனின் அத்தை காய்கறிகள் நறுக்கிக் கொண்டு இருந்தார் வீடு நிரம்பி சந்தோஷம் வழிந்தோடியது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இடையே திடீரென ஒரு சின்னத் தகராறு ஏற்பட்டது அதில் ஒருவன் மற...
19
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
முதலியவற்றை டப்பாக்களில் போட்டு ஒரு கூடையில் எடுத்து வைத்தார். தமிழினியனின் அப்பா, காரை எடுத்து வாசலில் நிறுத்தினார். மனது கும்மாளமிட, தமிழினியன் தனது தாத்தாவின் கையை பிடித்தவாறு காரை நோக்கி நடந்தான். அனைவரும் காரில் ஏறி அமர்ந்ததும், ஊருக்கு வெளியே அமைந்திருந்த ஒரு சொகுசு ஹோட்டலுக்கு கார் சென்றது. அந்த ஹோட்டலின் முகப்ப...
20
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
அவர்களின் மனது நிறைந்ததோ, அதேபோல் வயிறும் நிறைந்தது. உணவு நேரம் முடிந்த பின்பும், அவர்கள் அனைவரும் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். தங்களைச் சுற்றியுள்ள அனைத்து பிரச்சினைகளும் ஒரு நொடியில் காணாமல் போனது. நேரம் போனதே தெரியாமல் இருந்த அவர்களை ஹோட்டல் ஊழியரின் குரல் தட்டி எழுப்பியது. "மணி பன்னிரண்டு ஆகுது சார். நாங...
21
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
அன்றைய தினம் காலையில் எழுந்திருக்கும் போதே சிவராமனுக்கு உடல் சோர்வாக இருந்தது. இருந்தபோதிலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதை ஒருநிலைப்படுத்தி உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, தனது தினசரி கடன்களை செவ்வனே செய்து முடித்தார். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஓய்வாக அமர்ந்த அவருக்கு, அப்போதுதான் சட்டென்று நினைவுக்கு ...
22
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
இதுவரை வந்ததே இல்லையே, எவ்வளவு உயரமான மரங்கள்" என்று வியப்புடன் கூறியவாறே முன்னே நடந்தவர், சட்டென்று ஓரிடத்தில் நின்றார். அருகிலிருந்த புதருக்கடியில் இரண்டு அழகான முயல் குட்டிகள் நின்றுகொண்டிருந்தன. இவர்களைப் பார்த்ததும் விர்ரென்று வேகமாக ஓடின. நண்பர்கள் அனைவரும் வியப்பு கலந்த ஆச்சரியத்துடன் கூச்சலிட்டனர். மேலே ஏற, ஏற...
23
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
விட்டு, சந்திரனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். நண்பன் மாட்டிக்கொண்டான் என்றதுமே, தன் நண்பனின் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு சமயோசித புத்தியோடு செயல்பட்ட தன் நண்பனுக்கு மனதார நன்றி சொன்னான் சிவராமன். இன்றளவும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு அது.  அதன் பின்பு, இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்...
24
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
விசாரித்தார் சிவராமன் '. ஒன்றும் இல்லை தாத்தா இன்னைக்கு பள்ளியிலே ஒரு விஷயம் நடந்தது அதனால் தான்', என தயங்கினான். 'என்ன கண்ணா, என்ன நடந்தது தயங்காமல் சொல்லு', எனக் கேட்டார் தாத்தா.  'இல்ல தாத்தா, நானும் எனது நண்பர்களும் உணவு இடைவேளையின் போது பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவோம் .அதற்கு நான் சுரேஷை   கூப...
25
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
. ஓடிச்சென்று கதவைத் திறந்த தமிழினியன் சற்றே குழப்பத்துடன், "உள்ளே வாங்க,"என்று கூறினான். பின்னாலேயே சென்ற குணசீலா "உள்ள வாங்க அண்ணன், நல்லா இருக்கீங்களா?"என சிரித்த முகத்துடன் வரவேற்றார். உள்ளே நுழைந்த முத்து "நல்லா இருக்கோம் குணசீலா, நீங்க எல்லோரும் நல்லா இருக்கீங்களா? பார்த்து பல வருஷங்கள் ஆச்சு," என்று சொன்னார். சி...
26
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
.  அன்றைய தினம் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய தமிழினியனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தாத்தாவிடம் சென்ற அவன் "எப்ப கிராமத்துக்குப் போவோம், திருவிழாவை பார்ப்போம் என ஆசையா இருக்கு தாத்தா,"என்றான். "எனக்கும் கிராமத்துக்குப் போய் உறவினர் அனைவரையும் பார்க்க வேண்டும் என தோன்றுகின்றது" என்றார் சிவராமன் பதிலுக்கு. இரவு வீடு திர...
27
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
நாள் காலையில் சிவராமன், மகிழினியையும் தமிழினியனையையும் கூட்டிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் வாக்கிங் போனார். தோட்டத்தை அவரது உறவுக்காரப் பையன் ஒருத்தன் மேற்பார்வை பார்த்து வந்தான்.தோட்டத்தில் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கின. இன்னொரு பக்கம் காய்கறிச் செடிகள் கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி எனக் காய்த்திருந்தன. ஓர்...
28
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
து. மேளக் கலைஞர்களுடன் சேர்ந்து வாசிக்கப்பட்ட நாதஸ்வர இசையின் மங்கல ஒலி மனதில் ஓர் நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தியது.அடுத்த நாள் இரவு கரகாட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் ஏந்தி அவர்கள் ஆடிய விதம் காண்போரை வியக்க வைத்தது. செவ்வாய்க்கிழமை மாவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து...
29
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
அவ்வளவு இனிமையாக அமைந்தது. அந்தக் காலத்தில் உழைத்துச் சோர்ந்த மக்களுக்கு உற்சாகமூட்டும் விதமாகவே இந்த திருவிழா ஏற்படுத்தப்பட்டது. தை மாத அறுவடைக்குப் பின்னர் தங்கள் ஊரின் தெய்வங்களை கொண்டாடி மகிழ்ந்தனர். இன்னும் சொல்லப்போனால் இந்தத் திருவிழாக்கள், உடல் சோர்வையும், மனச்சோர்வையும் போக்கி, மக்கள் மனதிற்கு புத்துணர்ச்சி அள...
30
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
காலத்து முறைகள் அனைத்துமே அர்த்தமுள்ளதாகத்தான் இருந்தது. மஞ்சள் குத்துவதில் ஆரம்பித்தது மங்கலகரமாக. பின்பு தாம்பூலம் வைத்து அனைவரையும் ஒரு நாள் முன்னதாகவே திருமணத்திற்கு அழைத்து ஆகிவிட்டது, முதல்நாள்   மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், பெண் அழைப்பு   என ஒரே கோலாகலம்.  அப்போதுதான் தெரியும் யார் மாப்பிள்ளை யார் மணப்பெண் யார் ...
31
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
அவர் இறந்துவிட்டார். கைக்குழந்தையுடன் செய்வதறியாது திகைத்து நின்ற மீனாட்சியை அவரும், பார்வதியும், அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து தங்களுடனேயே தங்க வைத்தனர். சுற்றி இருந்த சுற்றத்தார் அனைவரும் தினமும் அவளுக்கு ஆறுதல் கூறி மனதிற்கு தைரியமூட்டினர். அந்தத் துயரச் சம்பவத்தை இன்று நினைத்தாலும் மனது பதைபதைக்கிறது. ஒருவழியாக...
32
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
நன்மைகள் இருக்கின்றன. இப்படியாக, அந்தக் கால மக்கள் அனைவரும் உணவு, உதவி, உணர்வுபூர்வமாக பின்னிப்பிணைந்து வாழ்ந்தனர். இப்படி ஒற்றுமையுடன் கூடி வாழ்ந்ததால், அவர்களால் வாழ்க்கையில்,துணிச்சலுடன் வாழ முடிந்தது. போட்டி, பொறாமை போன்றவை அவர்களுக்குள் அதிகம் வரவில்லை. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மேலோங்கி இருந்தது. தற்போதைய வா...
33
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
இன்று கழுதையைப் பார்க்கவே முடியாது. நாம் பயன்படுத்தாமல், பராமரிக்காமல் விட்டு விட்டதால் பல உயிரினங்கள் இன்று அரிதாகி வருகின்றன. அவைகள் நம்மை அறியாமலேயே நமது வாழ்க்கைக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு உடையதாக இருந்திருக்கின்றன .உதவி செய்திருக்கின்றன. இதை அந்த உயிரினத்தின் அழிவுக்கு பின்னரே நம்மால் உணர்ந்து கொள்ள இயலும்.  முக...
34
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
நிற்கின்றோம். எல்லா வகையான வசதிகளும் நம் உள்ளங்கையில். ஆனால் நம் உள்ளத்தில் இருந்த நிம்மதி எங்கே தொலைந்து போனது. நிலவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் செல்லும் நாம் இங்கு இருக்கும் வயல்வெளியை மறந்து விட்டோம். நம் தேவைகளை பூர்த்தி செய்யும் தொழிலை கைவிட்டு தேவையில்லாமல் இயற்கையை அழித்து அங்கு பாதைகள் அமைக்கிறோம். முக்காலம...
35
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
தாங்க முடியாத கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை போன்றவை நடப்பது உண்டு தான். ஆனால் இப்பொழுது அது மிகவும் அதிக அளவில் நடக்கின்றதே, அதற்கு என்ன காரணம் என்ற யோசனையில் ஆழ்ந்தார்.  சிவராமன் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ரகுவரன் மிகவும் நெருங்கிய நண்பன். பள்ளியில் இருவரும் ஒன்...
36
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
தொடங்கினார். பக்கத்துவீட்டில் ஒரு அம்மா பிள்ளையிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்,"டேய், அங்கே போகாதே, அங்கே ஒரு பையன் நின்று கொண்டிருக்கிறான். அவன் உன் வடையை பிடுங்கித் தின்றுவிடுவான். யார் கேட்டாலும் கொடுக்கக் கூடாது, சரியா" என எச்சரிக்கிறாள். சட்டென்று சிவராமனுக்கு நினைவு வருகிறது. இப்படித்தான் அவன் ஒருநாள் பலகாரம் சாப்...
37
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
யின் உறவினர் ஒருவர் தகவல்தொழில் நுட்பத் துறையில் வேலை பார்த்து வருகிறார். அவர் வேலை நெருக்கடி அதிகமானதால் மன அழுத்தத்தின் காரணமாக தூக்க மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டு விட்டார். நல்லவேளையாக வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக கவனித்த காரணத்தினால் உயிர் தப்பிவிட்டார். இன்று அவர் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இதைக...
38
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
விடும். அவர்கள் நேர்மையாகவும், நீதிக்கு அடிபணிந்தவர்களாகவும் வாழ்ந்தனர். அந்த காலத்து குழந்தைகளின் வாழ்வில் "சத்திய சோதனை" ஒரு பாடமாக அமைந்தது. ஆனால் இந்த காலத்தில் பெரும்பாலும் குழந்தைகள் தனிமையில் வாழ்கின்றனர். அதிலும் குறிப்பாக பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் பட்சத்தில் சொல்லவே வேண்டாம். அவர்கள் முகத்தைப் பார...
39
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
, அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.  எமது பணிகள்  கணியம் மின்னிதழ் - kaniyam.com  கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம்.  கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com  இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காம...
40
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி
செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும்.  பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.       Kaniyam Foundation  Account Number : 606 1010 100 502 79  Union Bank Of India  West Tambaram, Chennai  IFSC – UBIN0560618  Account ...
41
விஜயா லட்சுமணன்
வாழ்வை நோக்கி