title
stringlengths
18
42
sections
listlengths
3
14
பரிபாடல் - 1. திருமால்
[ { "content": "ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை\nதீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,\nமாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்\nசேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,\nவாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை;\n5\nஎரிமலர் சினைஇய கண்ணை; பூவை\nவிரிமலர் புரையும் மேனியை; மேனித்\nதிரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; ...
பரிபாடல் - 2. திருமால்
[ { "content": "தொல் முறை இயற்கையின் மதியொ\n... ..... ... மரபிற்று ஆக,\nபசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,\nவிசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,\nகரு வளர் வானத்து இசையின் தோன்றி,\n5\nஉரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;\nஉந்து வளி கிள்ர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;\nசெந் தீச்சுடரிய ஊழியும்; பனியொடு\nதண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று\nஉ...
பரிபாடல் - 3. திருமால்
[ { "content": "திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள்\nமா அயோயே! மாஅயோயே!\nமறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி\nமணி திகழ் உருபின் மா அயோயே!\nதீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,\nஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,\n5\nதிதியின் சிறாரும், விதியின் மக்களும்,\nமாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,\nதா மா இருவரும...
பரிபாடல் - 4. திருமால்
[ { "content": "ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்துத் தம்\nஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி,\nநின் புகழ் விரித்தனர்; கிளக்குங்கால், அவை நினக்கு\nஇறும்பூது அன்மை நற்கு அறிந்தேம், ஆயினும்,\nநகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப;\n5\nதிருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,\nவரு மழை இருஞ் சூல்-மூன்று...
பரிபாடல் - 5. செவ்வேள்
[ { "content": "பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,\nசேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,\nதீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,\nநோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,\nவென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய\n5\nகொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை\nமாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,\nநாவல்அம் ...
பரிபாடல் - 6. வையை
[ { "content": "நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்\nபொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;\nநிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,\nமலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,\nமலை மாசு கழியக் கதழும் அருவி இழியும்\n5\nமலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,\nமாசு இல் பனுவற் புலவர் புகழ் புல\nநாவின் புனைந...
பரிபாடல் - 7. வையை
[ { "content": "திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,\nஉர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,\nகரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,\nவரைவரை தொடித்த வயங்கு வெள் அருவி--\nஇரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது,\n5\nவலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய\nநிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன-...
பரிபாடல் - 8. செவ்வேள்
[ { "content": "மண்மிசை---அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்\nபுள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,\nமலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி\nஉலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,\nமருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும்,\n5\nஆதிரை முதல்வனின் கிளந்த\nநாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,\nயாவரும்,...
பரிபாடல் - 9. செவ்வேள்
[ { "content": "இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி,\nஅரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்,\nஉருமுச் சூழ் சேண் சிமை___உயர்ந்தவர் உடம்பட_____\nஎரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி\nவிரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,\n5\nதணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி\nமணி மிடற்று அண்ணற்கு, மதி ...
பரிபாடல் - 10. வையை
[ { "content": "மலைவரை மாலை அழி பெயல்_____காலை,\nசெல வரை காணாக் கடல்தலைக் கூட____\nநில வரை அல்லல் நிழத்த, விரிந்த\nபலவுறு போர்வைப் பரு மணல் மூஉய்,\nவரி அரி ஆணு முகிழ் விரி சினைய\n5\nமாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி,\nஆய்ந்து அளவா ஓசை அறையூஉப், பறை அறையப்\nபோந்தது____வையைப் புனல்.\nபுனல் மண்டி ஆடல் புரிவான், சனம்...
பரிபாடல் - 11. வையை
[ { "content": "'விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,\nஎரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,\nதெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்___\nஉருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,\nவருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி\n5\nபுந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்\nஅங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவி...
பரிபாடல் - 12. வையை
[ { "content": "வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி,\nவிளிவு இன்று, கிளையொடு மெல் மலை முற்றி,\nதளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;\nஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,\nஅகரு, வழை, ஞெமை, ஆரம், இனைய\n5\nதகரமும், ஞாழ்லும், தாரமும், தாங்கி,\nநளி கடல் முன்னியது போலும், தீம் நீர்\nவளி வரல் வையை வரவு.", "heading": "வையையில் ...
பரிபாடல் - 13. திருமால்
[ { "content": "மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று\nஅணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,\nஇறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்\nநிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,\nவிண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத்\n5\nதண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!\nபருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த\nஇரு வேறு மண்டிலத்து இலக்...
பரிபாடல் -  14. செவ்வேள்
[ { "content": "கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற\nநீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;\nதண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்\nவண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;\nஅடியுறைமகளிர் ஆடும் தோளே,\n5\nநெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;\nவாகை ஒண் பூப் புரையும் முச்சிய\nதோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை,\n'நீடன்மின் வாரும்' என்ப...
பரிபாடல் - 15. திருமால்
[ { "content": "புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,\nநில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத்\nதொலையா நேமி முதல், தொல் இசை அமையும்\nபுலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்\nபல; எனின், ஆங்கு-அவை பலவே: பலவினும்,\n5\nநிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்\nநின்று பெற நிகழும் குன்று--அவை சிலவே:\nசிலவினும் சிறந்தன, தெய்வம் பெ...
பரிபாடல் - 16. வையை
[ { "content": "கரையே--கை வண் தோன்றல் ஈகை போன்ம் என,\nமை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும்,\nநெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும்,\nஎவ் வயினானும்--மீதுமீது அழியும்.\nதுறையே--முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம்,\n5\nபொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி\nவலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்\nகயந் ...
பரிபாடல் - 17. செவ்வேள்
[ { "content": "தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,\nஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ,\nவிடை அரை அசைத்த, வேலன், கடிமரம்\nபரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,\nவிரிமலர் மதுவின் மரன் நனை குன்றத்து--\n5\nகோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ--\nமாலை மாலை, அடி உறை, இயைநர்,\nமேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?"...
பரிபாடல் - 18. செவ்வேள்
[ { "content": "போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,\nகார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல்,\nநீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து,\nசூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின்\nசீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து,\n5", "heading": "இமயத்தொடு நிகர்க்கும் குன்று" }, { "content": "தலைமகன் ஊ...
பரிபாடல் - 19. செவ்வேள்
[ { "content": "நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,\nபுல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,\n'அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்\nஇரு நிலத்தோரும் இயைக!' என, ஈத்த நின்\nதண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்கு\n5\nசாறு கொள் துறக்கத்தவளொடு\nமாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை.", "heading": "வள்ளி...
பரிபாடல் - 20. வையை
[ { "content": "கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,\nஉடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை\nமுற்றுபு முற்றுபு, பெய்து--சூல் முதிர் முகில்--\nபொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்\nகுருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று.\n5\nகாலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி\nமாலை மலை மணந்து, மண் துயின்ற ...
பரிபாடல் - 21. செவ்வேள்
[ { "content": "ஊர்ந்ததை--எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,\nபொரு சமம் கடந்த புகழ் சால், வேழம்.\nதொட்டதை--தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை\nதுப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய,\nவெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த,\n5\nவரி மலி அர உரி வள்பு கண்டன்ன,\nபுரி மென் பீலிப் போழ் புனை அடையல்.\nகையதை--கொள்ளாத் த...
பரிபாடல் - 22. வையை
[ { "content": "ஒளிறு வாட் பொருப்பன் உடல் சமத்து இறுத்த\nகளிறு நிரைத் தவைபோல் கொண்மூ நெரிதர,\nஅரசு படக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்\nமுரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி,\nஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை\n5\nவிடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ,\nகண் ஒளிர் எ·கின் கடிய மின்னி, அவன்\nவண்மைபோல் வானம் பொழிந்த நீர்-மண்ம...