title
stringlengths
32
116
துறை
stringlengths
0
27
வண்ணம்
stringclasses
3 values
தூக்கு
stringclasses
3 values
பெயர்
stringlengths
0
27
poem
stringlengths
13
1.87k
பதிற்றுப்பத்து - கடவுள் வாழ்த்து
எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க் கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப் புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும் இளம் பிறை சேர்ந்த நு...
பதிற்றுப்பத்து - 1. கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
பதிற்றுப்பத்து - 2. கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
பதிற்றுப்பத்து - 3. கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
பதிற்றுப்பத்து - 4. கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
பதிற்றுப்பத்து - 5. கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
பதிற்றுப்பத்து - 6. கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
பதிற்றுப்பத்து - 7. கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
பதிற்றுப்பத்து - 8. கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
பதிற்றுப்பத்து - 9. கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
பதிற்றுப்பத்து - 10. கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
பதிற்றுப்பத்து - 11. வெற்றிச் செல்வச் சிறப்பு
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
புண் உமிழ் குருதி
வரை மருள் புணரி வான் பிசிர் உடைய, வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல் நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி, அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை, 5 கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு- செவ் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப, அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின், மணி நிற இருங் கழி நீர்...
பதிற்றுப்பத்து - 12. வென்றிச் சிறப்பும் ஓலக்க வினோதச் சிறப்பும்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
மறம் வீங்கு பல் புகழ்
வயவர் வீழ வாள் அரில் மயக்கி, இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப, கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின வேந்தே! தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் அரிமான் வழங்கும் சாரல், பிற மான் 5 தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு, முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலீயாது, மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்- கேட்டற்கு இனிது-நின் செல...
பதிற்றுப்பத்து - 13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பூத்த நெய்தல்
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும், ஏறு பொருத செறு உழாது வித்துநவும், கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இருங் கண் எருமை நிரை தடுக்குநவும், கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் 5 வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும், ஒலி தெங்கின், இமிழ் மருதின், புனல் வாயில், பூம் பொய்கை, பாடல் சான்ற பயம் கெழு வைப்பின், நாடு கவின் அழிய, நாமம் தோற்றி; 10 கூற...
பதிற்றுப்பத்து - 14. மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
செந்தூக்கு
சான்றோர் மெய்ம்மறை
நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின் அளப்பு அரியையே; நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல், ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை; போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு 5 துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை, அக்குரன் அனைய கைவண்மையையே; அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப! கூற்று வெ...
பதிற்றுப்பத்து - 15. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
நிரைய வெள்ளம்
யாண்டு தலைப்பெயர, வேண்டு புலத்து இறுத்து, முனை எரி பரப்பிய துன் அருஞ் சீற்றமொடு- மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி, நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம் பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப- 5 கொடி விடு குரூஉப் புகை பிசிர, கால் பொர, அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து, தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின், வெண் பூ வ...
பதிற்றுப்பத்து - 16. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
துயிலின் பாயல்
கோடு உறழ்ந்து எடுத்த கொடுங் கண் இஞ்சி, நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல், துஞ்சுமரக் குழாஅம் துவன்றி, புனிற்று மகள் பூணா ஐயவி தூக்கிய மதில நல் எழில் நெடும் புதவு முருக்கிக் கொல்லுபு, 5 ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின், கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி, மரம் கொல் மழ களிறு வழங்கும் பாசறை, நீடினை ஆகலின், காண்கு வந்திசினே: ...
பதிற்றுப்பத்து - 17. பொறையுடைமையோடு படுத்து மன்னனின் வென்றிச் சிறப்புக் கூறுதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
வலம்படு வியன் பணை
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே- பெரிய தப்புநர் ஆயினும், பகைவர் பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்- துளங்கு பிசிர் உடைய, மாக் கடல் நீக்கி, கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை, 5 ஆடுநர் பெயர்ந்து வந்து, அரும் பலி தூஉய், கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர், 'அரணம் காணாது, மாதிரம் துழைஇய நனந் தல...
பதிற்றுப்பத்து - 18. கொடைச் சிறப்பு
இயல்மொழி வாழ்த்து
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
கூந்தல் விறலியர்
உண்மின் கள்ளே! அடுமின் சோறே! எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே! வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப, இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால், ஏந்து கோட்டு அல்குல், முகிழ் நகை, மடவரல், 5 கூந்தல் விறலியர்! வழங்குக அடுப்பே! பெற்றது உதவுமின்; தப்பு இன்று பின்னும்- மன் உயிர் அழிய, யாண்டு பல துளக்கி, மண்ணுடை ஞாலம் புரவு எதிர...
பதிற்றுப்பத்து - 19. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்
பரிசில்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
செந்தூக்கு
வளன் அறு பைதிரம்
கொள்ளை வல்சிக் கவர் கால் கூளியர் கல்லுடை நெடு நெறி போழ்ந்து, சுரன் அறுப்ப, ஒண் பொறிக் கழற் கால் மாறா வயவர் திண் பிணி எஃகம் புலி உறை கழிப்ப, செங்கள விருப்பொடு கூலம் முற்றிய 5 உருவச் செந் தினை குருதியொடு தூஉய், மண்ணுறு முரசம் கண் பெயர்த்து, இயவர், கடிப்புடை வலத்தர், தொடித் தோள் ஓச்ச, வம்பு களைவு அறியாச் சுற்றமோடு அம்பு த...
பதிற்றுப்பத்து - 20. மன்னனது குணங்களைக் கூறி வாழ்த்துதல்
இயல் மொழி வாழ்த்து
ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
அட்டு மலர் மார்பன்
'நும் கோ யார்?' என வினவின், எம் கோ இரு முந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச் சென்று, கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின முன்பின், நெடுஞ்சேரலாதன்; வாழ்க அவன் கண்ணி! 5 வாய்ப்பு அறியலனே, வெயில் துகள் அனைத்தும், மாற்றோர் தேஎத்து மாறிய வினையே; கண்ணின் உவந்து, நெஞ்சு அவிழ்பு அறியா நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே, கனவினும்;...
பதிற்றுப்பத்து - 21. நாடு காத்தற் சிறப்புக் கூறி, மன்னனை வாழ்த்துதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
அடு நெய் ஆவுதி
சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம், என்று ஐந்துடன் போற்றி அவை துணையாக, எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை, காலை அன்ன சீர் சால் வாய்மொழி, உரு கெழு மரபின் கடவுட் பேணியர், 5 கொண்ட தீயின் சுடர் எழுதோறும் விரும்பு மெய் பரந்த பெரு பெயர் ஆவுதி; வருநர் வரையார் வார வேண்டி, விருந்து கண்மாறாது உணீஇய, பாசவர் ஊனத்து அழித்த வால் நிணக்...
பதிற்றுப்பத்து - 22. வென்றிச் சிறப்பு
வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
கயிறு குறு முகவை
சினனே, காமம், கழி கண்ணோட்டம், அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை, தெறல் கடுமையொடு, பிறவும், இவ் உலகத்து அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்: தீது சேண் இகந்து, நன்று மிகப் புரிந்து, 5 கடலும் கானமும் பல பயம் உதவ; பிறர் பிறர் நலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது, மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து, தம் அமர்துணைப் பிரியாது, பாத...
பதிற்றுப்பத்து - 23. வென்றிச் சிறப்பு
வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
ததைந்த காஞ்சி
அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச் சிதடி கரைய, பெரு வறம் கூர்ந்து, நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும், வாங்குபு தகைத்த கலப் பையர் ஆங்கண் மன்றம் போந்து, மறுகு சிறை பாடும் 5 வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க, பொன் செய் புனைஇழை ஒலிப்ப, பெரிது உவந்து, நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட, சிறு மகிழானும் பெருங் கலம் வீசும், ...
பதிற்றுப்பத்து - 24. மன்னவன் பெருமையும் கொடைச் சிறப்பும் கூறி வாழ்த்துதல்
இயல்மொழி வாழ்த்து
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
சீர் சால் வெள்ளி
நெடு வயின் ஒளிறு மின்னுப் பரந்தாங்கு, புலி உறை கழித்த புலவு வாய் எஃகம் ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி, ஆர் அரண் கடந்த தார் அருந் தகைப்பின் பீடு கொள் மாலைப் பெரும் படைத் தலைவ! 5 ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர் வழி மொழிந்து ஒழுகி, ஞாலம் நின்வழி ஒழுக, பாடல் சா...
பதிற்றுப்பத்து - 25. வென்றிச் சிறப்பு
வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
கான் உணங்கு கடு நெறி
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா; கடாஅம் சென்னிய கடுங்கண் யானை இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா; நின் படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி, நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா; 5 கடுங் கால் ஒற்றலின், சுடர் சிறந்து உருத்து, பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின், ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய...
பதிற்றுப்பத்து - 26. வென்றிச் சிறப்பு
வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
காடுறு கடு நெறி
தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா; களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா; மத்து உரறிய மனை இன் இயம் இமிழா; ஆங்கு, பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின்- நோகோ யானே-நோதக வருமே! 5 பெயல் மழை புரவு இன்றுஆகி, வெய்துற்று, 'வலம் இன்று அம்ம, காலையது பண்பு!' என, கண் பனி மலிர் நிறை தாங்கி, கைபுடையூ, மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூர, பீர் இவர் ...
பதிற்றுப்பத்து - 27. வென்றிச் சிறப்பு
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
தொடர்ந்த குவளை
சிதைந்தது மன்ற, நீ சிவந்தனை நோக்கலின்- தொடர்ந்த குவளைத் தூ நெறி அடைச்சி, அலர்ந்த ஆம்பல் அக மடிவையர், சுரியல்அம் சென்னிப் பூஞ் செய் கண்ணி அரியல் ஆர்கையர், இனிது கூடு இயவர், 5 துறை நணி மருதம் ஏறி, தெறுமார், எல் வளை மகளிர் தெளி விளி இசைப்பின், பழனக் காவில் பசு மயில் ஆலும்; பொய்கை வாயிற் புனல் பொரு புதவின், நெய்தல் மரபின்,...
பதிற்றுப்பத்து - 28. நாடு காத்தற் சிறப்பு
நாடு வாழ்த்து
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
உருத்து வரு மலிர் நிறை
திரு உடைத்து அம்ம-பெரு விறற் பகைவர் பைங் கண் யானைப் புணர் நிரை துமிய, உரம் துரந்து எறிந்த, கறை அடி, கழற் கால், கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப, இளை இனிது தந்து, விளைவு முட்டுறாது, 5 புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின். விடு நிலக் கரம்பை விடர் அளை நிறைய- கோடை நீட, குன்றம் புல்லென, அருவி அற்ற பெரு வறற் காலையும்; நிவந்து கரை ...
பதிற்றுப்பத்து - 29. வென்றிச் சிறப்பு
வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
வெண் கை மகளிர்
அவல் எறி உலக்கை வாழைச் சேர்த்தி, வளைக் கை மகளிர் வள்ளை கொய்யும், முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த தடந் தாள் நாரை இரிய; அயிரைக் கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின், 5 வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும், அழியா விழவின், இழியாத் திவவின், வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ, மன்றம் நண்ணி, மறுகு சிறை பாடும் அகன் கண் வைப்பின் நா...
பதிற்றுப்பத்து - 30. வென்றிச் சிறப்பு
பெருஞ்சோற்று நிலை
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
புகன்ற ஆயம்
இணர் ததை ஞாழல் கரை கெழு பெருந் துறை, மணிக்கலத்தன்ன மா இதழ் நெய்தல் பாசடைப் பனிக் கழி துழைஇ, புன்னை வால் இணர்ப் படு சினைக் குருகு இறை கொள்ளும் அல்குறு கானல், ஓங்கு மணல் அடைகரை, 5 தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல, இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் தண் கடற் படப்பை மென்பாலனவும்; காந்தள்அம் கண்ணி, கொலை வில், வேட்...
பதிற்றுப்பத்து - 31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல்
செந்துறைப் பாடாண்பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
கமழ் குரல் துழாய்
குன்று தலைமணந்து, குழூஉக் கடல் உடுத்த மண் கெழு ஞாலத்து, மாந்தர் ஒராங்குக் கை சுமந்து அலறும் பூசல், மாதிரத்து நால் வேறு நனந் தலை, ஒருங்கு எழுந்து ஒலிப்ப, தெளி உயர் வடி மணி எறியுநர் கல்லென, 5 உண்ணாப் பைஞ்ஞிலம் பனித் துறை மண்ணி, வண்டு ஊது பொலி தார், திரு ஞெமர் அகலத்து, கண் பொரு திகிரி, கமழ் குரற் துழாஅய் அலங்கல், செல்வன் ...
பதிற்றுப்பத்து - 32. மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி, அவற்றுள் பொறையுடைமையை மிகுத்துப் புகழ்தல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
கழை அமல் கழனி
மாண்டனை பலவே, போர் மிகு குருசில்! நீ மாதிரம் விளக்கும் சால்பும், செம்மையும்; முத்துடை மருப்பின் மழ களிறு பிளிற, மிக்கு எழு கடுந் தார் துய்த்தலைச் சென்று, துப்புத் துவர் போக, பெருங் கிளை உவப்ப, 5 ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளனும்; துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும்; எல்லாம் எண்ணின், இடு கழங்கு தபுந. கொன் ஒன்று மருண்ட...
பதிற்றுப்பத்து - 33. வென்றிச் சிறப்பு
வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வரம்பு இல் வெள்ளம்
இறும்பூதால் பெரிதே, கொடித் தேர் அண்ணல்!- வடி மணி அணைத்த பணைமருள் நோன் தாள், கடி மரத்தான், களிறு அணைத்து; நெடு நீர துறை கலங்க, மூழ்த்து இறுத்த வியன் தானையொடு 5 புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம், வாள் மதிலாக, வேல் மிளை உயர்த்து, வில் விசை உமிழ்ந்த வைம் முள் அம்பின், செவ் வாய் எஃகம் வளைஇய அகழின், கார் இடி உருமின் உரற...
பதிற்றுப்பத்து - 34. வென்றிச் சிறப்பு
தும்பை அரவம்
ஒழுகு வண்ணம்
செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
ஒண் பொறிக் கழற் கால்
ஒரூஉப நின்னை-ஒரு பெரு வேந்தே!- ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால், இரு நிலம் தோயும் விரிநூல் அறுவையர்: செவ் உளைய மா ஊர்ந்து, நெடுங் கொடிய தேர் மிசையும், 5 ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும், மன் நிலத்து அமைந்த ... ... ... மாறா மைந்தர் மாறு நிலை தேய, முரைசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப...
பதிற்றுப்பத்து - 35. வென்றிச் சிறப்பு
வாகைத்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
மெய் ஆடு பறந்தலை
புரை சால் மைந்த! நீ ஓம்பல் மாறே, உரை சான்றனவால், பெருமை நின் வென்றி!- இருங் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு நெடுந் தேர்த் திகிரி தாய வியன் களத்து, அளகுடைச் சேவல் கிளை புகா ஆர, 5 தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை, அந்தி மாலை விசும்பு கண்டன்ன செஞ் சுடர் கொண்ட குருதி மன்றத்து, பேஎய் ஆடும் வெல்போர் வீயா யாணர் நின்வயி...
பதிற்றுப்பத்து - 36. வென்றிச் சிறப்பு
களவழி
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
வாள் மயங்கு கடுந் தார்
வீயா யாணர் நின்வயினானே தாவாதாகும், மலி பெறு வயவே; மல்லல் உள்ளமொடு வம்பு அமர்க் கடந்து, செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று, பனை தடி புனத்தின், கை தடிபு, பல உடன் 5 யானை பட்ட வாள் மயங்கு கடுந் தார், மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர், பொறித்த போலும் புள்ளி எருத்தின் புன் புற எருவைப் பெடை புணர் சேவல் குடுமி எழாலொடு கொண...
பதிற்றுப்பத்து - 37. மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்துதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
வலம் படு வென்றி
வாழ்க, நின் வளனே நின்னுடை வாழ்க்கை, வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த!- பகைவர் ஆரப் பழங்கண் அருளி, நகைவர் ஆர நன் கலம் சிதறி, ஆன்று, அவிந்து, அடங்கிய, செயிர் தீர், செம்மால்! 5 வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப, துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும்; மா இரும் புடையல், மாக் கழல், புனைந்து, மன் எயில் எறிந்து மறவர்த் தரீ...
பதிற்றுப்பத்து - 38. கொடைச் சிறப்பு
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
பரிசிலர் வெறுக்கை
உலகத்தோரே பலர்மன் செல்வர்; எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே- வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்! எயில் முகம் சிதையத் தோட்டி ஏவலின், 5 தோட்டி தந்த தொடி மருப்பு யானை, செவ் உளைக் கலிமா, ஈகை வான் கழல், செயல் அமை கண்ணிச் சேரலர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை! பாணர் நாள்அவை! வாணுதல் கணவ! மள்ளர் ...
பதிற்றுப்பத்து - 39. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
வாகை
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
ஏவல் வியன் பணை
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன் மாறே, எமக்கு 'இல்' என்னார், நின் மறம் கூறு குழாத்தர்- துப்புத் துறைபோகிய வெப்புடைத் தும்பை, கறுத்த தெவ்வர் கடி முனை அலற, எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை 5 உரும் என அதிர்பட்டு முழங்கி, செரு மிக்கு, அடங்கார் ஆர் அரண் வாடச் செல்லும், காலன் அனைய, கடுஞ் சின முன்ப! வாலிதின், நூலின் இழையா ந...
பதிற்றுப்பத்து - 40. கொடைச் சிறப்பு
விறலி ஆற்றுப்படை
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
நாடு காண் அவிர் சுடர்
போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து இறாஅலியரோ, பெரும! நின் தானை! இன் இசை இமிழ் முரசு இயம்பக் கடிப்பு இகூஉ, புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப, காய்த்த கரந்தை மாக் கொடி விளை வயல் 5 வந்து இறைகொண்டன்று, தானை: 'அந்தில், களைநர் யார் இனிப் பிறர்?' எனப் பேணி, மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க, ஒன்னார் தேய, பூ மலைந்து உரைஇ,...
பதிற்றுப்பத்து - 41. வென்றிச் சிறப்பு
காட்சி வாழ்த்து
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
சுடர் வீ வேங்கை
புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப; பண் அமை முழவும், பதலையும், பிறவும், கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி, காவில் தகைத்த துறை கூடு கலப் பையர் 5 கை வல் இளையர் கடவுள் பழிச்ச; மறப் புலிக் குழூஉக் குரல் செத்து, வயக் களிறு வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கைப் பூவுடை பெருஞ் சினை வாங்கிப்...
பதிற்றுப்பத்து - 42. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
தசும்பு துளங்கு இருக்கை
இரும் பனம்புடையல், ஈகை வான் கழல், மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின், அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5 தும்பை சூடாது மலைந்த மாட்சி, அன்னோர் பெரும! நன்னுதல் கணவ! அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ! மைந்துடை நல் அமர்க் கடந்து, வலம் தரீஇ; இஞ்சி வீ வ...
பதிற்றுப்பத்து - 43. மன்னனின் செல்வ மகிழ்ச்சி
இயல்மொழி வாழ்த்து
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
ஏறா ஏணி
கவரி முச்சி, கார் விரி கூந்தல், ஊசல் மேவல், சேயிழை மகளிர் உரல் போல் பெருங் கால், இலங்கு வாள் மருப்பின், பெருங் கை, மதமாப் புகுதரின், அவற்றுள் விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ 5 கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை வட திசை எல்லை இமயம் ஆக, தென்அம் குமரியொடு ஆயிடை அரசர் முரசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ, சொல் பல நாட்...
பதிற்றுப்பத்து - 44. மன்னனை 'நெடுங் காலம் வாழ்க' என வாழ்த்துதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
நோய் தபு நோன் தொடை
நிலம் புடைப்பன்ன ஆர்ப்பொடு, விசும்பு துடையூ, வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க, பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற அரிய என்னாது ஓம்பாது வீசி, கலம் செலச் சுரத்தல் அல்லது, கனவினும், 5 'களைக' என அறியாக் கசடு இல் நெஞ்சத்து, ஆடு நடை அண்ணல்! நின் பாடு மகள் காணியர்- காணிலியரோ-நிற் புகழ்ந்த யாக்கை முழு வலி துஞ்சும் நோய் தபு நோ...
பதிற்றுப்பத்து - 45. வென்றிச் சிறப்பு
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
ஊன் துவை அடிசில்
பொலம் பூந் தும்பை, பொறி கிளர் தூணி, புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின், ஒசிவுடை வில்லின், ஒசியா நெஞ்சின், களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின், விழுமியோர் துவன்றிய அகல் கண் நாட்பின், 5 எழுமுடி மார்பின் எய்திய சேரல்! குண்டு கண் அகழிய மதில் பல கடந்து, பண்டும் பண்டும் தாம் உள் அழித்து உண்ட நாடு கெழு தாயத்து நனந் தலை அர...
பதிற்றுப்பத்து - 46. கொடைச் சிறப்பு
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
கரை வாய்ப் பருதி
இழையர், குழையர், நறுந் தண் மாலையர், சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை, திறல் விடு திருமணி இலங்கு மார்பின் வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர் தொடை படு பேரியாழ் பாலை பண்ணி, 5 பணியா மரபின் உழிஞை பாட, இனிது புறந்தந்து, அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின்- சுரம் பல கடவும் கரை வாய்ப் பருதி ஊர் பாட்டு எண் இல் பைந் தலை துமிய, ப...
பதிற்றுப்பத்து - 47. கொடையினையும் அக் கொடைக்கு வருவாயாகிய பகைவரைக் கோறலையும் உடன் கூறுதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
நல் நுதல் விறலியர்
அட்டு ஆனானே குட்டுவன்; அடுதொறும், பெற்று ஆனாரே, பரிசிலர் களிறே; வரை மிசை இழிதரும் அருவியின், மாடத்து வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில், சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின், 5 பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல, நல் நுதல் விறலியர் ஆடும் தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே.
பதிற்றுப்பத்து - 48. மன்னனை 'நீடு வாழ்க' என வாழ்த்துதல்
இயல்மொழி வாழ்த்து
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
பேர் எழில் வாழ்க்கை
பைம் பொற் தாமரை பாணர்ச் சூட்டி, ஒளி நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி, கெடல் அரும் பல் புகழ் நிலைஇ, நீர் புக்கு, கடலொடு உழந்த பனித் துறைப் பரதவ! 'ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு, இவர் 5 கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் இவன், எனத் தத்தம் கை வல் இளையர் நேர் கை நிரைப்ப, வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை, முனை சுடு ...
பதிற்றுப்பத்து - 49. மன்னவனது வரையா ஈகை
விறலி ஆற்றுப்படை
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
செங் கை மறவர்
யாமும் சேறுகம்; நீயிரும் வம்மின், துயலும் கோதைத் துளங்கு இயல் விறலியர்! கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர்!- களிறு பரந்து இயல, கடு மா தாங்க, ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப; 5 எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடுந் தார், வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து, மொய் வளம் செருக்கி, மொசிந்து வரு மோகூர் வலம...
பதிற்றுப்பத்து - 50. மன்னவனது காம வேட்கையினும் அவன் போர் வேட்கையை மிகுத்துக் கூறுதல்
வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
செந்தூக்கு
வெருவரு புனல் தார்
மா மலை, முழக்கின் மான் கணம் பனிப்ப, கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி, கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய; வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ, செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறைக் 5 காவிரி யன்றியும், பூ விரி புனல் ஒரு மூன்று உடன் கூடிய கூடல் அனையை! கொல்களிற்று உரவுத் திரை பிறழ, அவ் வில் பிசிர, புரை தோல் வரைப்பின் எஃகு ...
பதிற்றுப்பத்து - 51. மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறுதல்
வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வடு அடு நுண் அயிர்
துளங்கு நீர் வியலகம் கலங்கக் கால் பொர, விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும் கடல் சேர் கானற் குட புலம் முன்னி, கூவல் துழந்த தடந் தாள் நாரை குவி இணர் ஞாழல் மாச் சினைச் சேக்கும், 5 வண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின் அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும், தூ இரும் போந்தைப் பொழில், அணிப் பொலிதந்து,...
பதிற்றுப்பத்து - 53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
குண்டு கண் அகழி
வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து, அவர் வாடா யாணர் நாடு திறை கொடுப்ப, 'நல்கினை ஆகுமதி, எம்' என்று; அருளி, கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் தொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின், 5 செம்பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும் எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில், கோள் வல் முதலைய குண்டு கண் அகழி, வான் உற ஓங்கிய வளை...
பதிற்றுப்பத்து - 53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
குண்டு கண் அகழி
வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து, அவர் வாடா யாணர் நாடு திறை கொடுப்ப, 'நல்கினை ஆகுமதி, எம்' என்று; அருளி, கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் தொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின், 5 செம்பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும் எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில், கோள் வல் முதலைய குண்டு கண் அகழி, வான் உற ஓங்கிய வளை...
பதிற்றுப்பத்து - 54. மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்
காட்சி வாழ்த்து
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
நில்லாத் தானை
வள்ளியை என்றலின், காண்கு வந்திசினே, உள்ளியது முடித்தி; வாழ்க, நின் கண்ணி! வீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத் தோள், ஏந்து எழில் மழைக்கண், வனைந்து வரல் இள முலை, பூந் துகில் அல்குல், தேம் பாய் கூந்தல், 5 மின் இழை, விறலியர் நின் மறம் பாட; இரவலர் புன்கண் தீர, நாள் தொறும், உரை சால் நன் கலம் வரைவு இல வீசி, அனையை ஆகன்மாறே, எனை...
பதிற்றுப்பத்து - 55. மன்னவன் உலகு புரத்தலும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
துஞ்சும் பந்தர்
ஆன்றோள் கணவ! சான்றோர் புரவல! நின் நயந்து வந்தனன், அடு போர்க் கொற்றவ! இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து, நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர். கமழும் தாழைக் கானல்அம் பெருந் துறை, 5 தண் கடற் படப்பை நல் நாட்டுப் பொருந! செவ் ஊன் தோன்றா, வெண் துவை முதிரை, வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை! குடவர் கோவே! கொடித் தேர் அண்ணல்! வாரார் ஆயி...
பதிற்றுப்பத்து - 56. வென்றிச் சிறப்பு
ஒள் வாள் அமலை
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண், கோடியர் முழவின் முன்னர், ஆடல் வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!- வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து, இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன், 5 மடம் பெருமையின் உடன்று மேல் வந்த வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.
பதிற்றுப்பத்து - 57. வென்றிச் சிறப்பொடு கொடைச் சிறப்பும் உடன் கூறுதல்
விறலி ஆற்றுப்படை
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
சில் வளை விறலி
ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப, இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப, குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே, துணங்கை ஆடிய வலம் படு கோமான்: மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச் 5 செல்லாமோதில்-சில் வளை விறலி!- பாணர் கையது பணி தொடை நரம்பின் விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி, குரல் புணர் இன் இசைத் தழிஞ்சி பாடி; இளந் துணைப் புதல்வர் நல...
பதிற்றுப்பத்து - 58. மன்னவன் நாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவனது கொடையும் கூறுதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
ஏ விளங்கு தடக்கை
ஆடுக, விறலியர்! பாடுக, பரிசிலர்!- வெண் தோட்டு அசைத்த ஒண் பூங் குவளையர், வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர், செல் உறழ் மறவர் தம் கொல்படைத் தரீஇயர், 'இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின், நாளை 5 மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது உண்குவம்அல்லேம், புகா' எனக் கூறி, கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்; பொய் படுபு அறியா வயங்கு செந் நாவின்,...
பதிற்றுப்பத்து - 59. வென்றிச் சிறப்பு
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
மா கூர் திங்கள்
பகல் நீடு ஆகாது, இரவுப்பொழுது பெருகி, மாசி நின்ற மா கூர் திங்கள், பனிச் சுரம் படரும் பாண்மகன் உவப்ப, புல் இருள் விடிய, புலம்பு சேண் அகல, பாய் இருள் நீங்க, பல் கதிர் பரப்பி, 5 ஞாயிறு குணமுதல் தோன்றியாஅங்கு, இரவல் மாக்கள் சிறுகுடி பெருக, உலகம் தாங்கிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை! வீற்று இருங் கொற்றத்துச் செல்வர் ச...
பதிற்றுப்பத்து - 60. மன்னவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும் கூறுதல்
விறலி ஆற்றுப்படை
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
மரம் படு தீம் கனி
கொலை வினை மேவற்றுத் தானை; தானே இகல் வினை மேவலன்; தண்டாது வீசும்: செல்லாமோதில், பாண்மகள்! காணியர்- மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது, அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி 5 அம் சேறு அமைந்த முண்டை விளை பழம் ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும், மறாஅ விளையுள் அறாஅ யாணர், தொடை மடி களைந்த சிலையுடை மறவர் பொங்கு பிசிர்ப் பு...
பதிற்றுப்பத்து - 61. வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச் சிறப்புக் கூறுதல்
காட்சி வாழ்த்து
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
புலாஅம் பாசறை
'பலாஅம் பழுத்த பசும் புண் அரியல் வாடை தூக்கும் நாடு கெழு பெருவிறல், ஓவத்து அன்ன வினை புனை நல் இல், பாவை அன்ன நல்லோள் கணவன், பொன்னின் அன்ன பூவின், சிறியிலை, 5 புன் கால், உன்னத்துப் பகைவன், எம் கோ, புலர்ந்த சாந்தின், புலரா ஈகை, மலர்ந்த மார்பின், மா வண் பாரி முழவு மண் புலர, இரவலர் இனைய, வாராச் சேண் புலம் படர்ந்தோன்; அளிக்...
பதிற்றுப்பத்து - 62. வென்றிச் சிறப்பு
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
வரைபோல் இஞ்சி
இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொழுதியொடு, மழை என மருளும் மா இரும் பல் தோல், எஃகு படை அறுத்த கொய் சுவற் புரவியொடு மைந்துடை ஆர் எயில் புடை பட வளைஇ, வந்து, புறத்து இறுக்கும்-பசும் பிசிர் ஒள் அழல் 5 ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு, ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும் மடங்கல் வண்ணம் கொண்ட கடுந் திறல், துப்புத் துறை ...
பதிற்றுப்பத்து - 63. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
அருவி ஆம்பல்
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே; பணியா உள்ளமொடு அணி வரக் கெழீஇ, நட்டோ ர்க்கு அல்லது கண் அஞ்சலையே, வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம் மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே; 5 நிலம் திறம் பெயரும் காலைஆயினும், கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே; சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி, கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்து, குன்ற...
பதிற்றுப்பத்து - 64. மன்னவன் கொடைச் சிறப்பினை வென்றிச் சிறப்பொடு படுத்துக் கூறுதல்
காட்சி வாழ்த்து
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
உரைசால் வேள்வி
வலம் படு முரசின் வாய் வாட் கொற்றத்துப் பொலம் பூண் வேந்தர் பலர்தில்; அம்ம! அறம் கரைந்து வயங்கிய நாவின், பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி, அந்தணர் அருங் கலம் ஏற்ப, நீர் பட்டு, 5 இருஞ் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து, களிறு நிலை முணைஇய தார் அருந் தகைப்பின், புறஞ் சிறை வயிரியர்க் காணின், 'வல்லே எஃகு படை அறுத்த கொய் சுவற...
பதிற்றுப்பத்து - 65. ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்புக் கூறுதல்
பரிசில்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
நாள் மகிழ் இருக்கை
எறி பிணம் இடறிய செம் மறுக் குளம்பின் பரியுடை நல் மா விரி உளை சூட்டி, மலைத்த தெவ்வர் மறம் தபக் கடந்த காஞ்சி சான்ற வயவர் பெரும! வில்லோர் மெய்ம்மறை! சேர்ந்தோர் செல்வ! 5 பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை, மாண் வரி அல்குல், மலர்ந்த நோக்கின், வேய் புரைபு எழிலிய விளங்கு இறைப் பணைத் தோள், காமர் கடவுளும் ஆளும் கற்பின், சே...
பதிற்றுப்பத்து - 66. வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக் கூறுதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
புதல் சூழ் பறவை
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி, படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல! 'இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார் வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி, 5 கொன்று புறம் பெற்ற பிணம் பயில் அழுவத்து, தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின் அம்பண அளவை விரிந்து உறை போகிய ஆர் பதம் நல்கும்' என்ப கறுத்தோர் உ...
பதிற்றுப்பத்து - 67. கொடைச் சிறப்பு
பாணாற்றுப்படை
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
வெண் போழ்க் கண்ணி
கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர், கடன் அறி மரபின் கை வல் பாண! தென் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை- கொல் படை தெரிய, வெல் கொடி நுடங்க, 5 வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப, பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர, அமர்க்கண் அமைந்த அவிர் நிணப் பரப்பின் குழூஉச் சிறை எருவை குருதி ஆர, தல...
பதிற்றுப்பத்து - 68. காம வேட்கையின் ஓடாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்பு
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
ஏம வாழ்க்கை
கால் கடிப்பு ஆகக் கடல் ஒலித்தாங்கு, வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண், கடுஞ் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர, வெவ் வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது 5 உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய, நெஞ்சு புகல் ஊக்கத்தர், மெய் தயங்கு உயக்கத்து இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது, வேந்து ஊர் யானை வெண் க...
பதிற்றுப்பத்து - 69. மன்னவனது ஆள்வினைச் சிறப்பினை அவன் குடி வரலாற்றொடு படுத்துச் சொல்லுதல்
வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
மண் கெழு ஞாலம்
மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி, வரைமிசை அருவியின் வயின் வயின் நுடங்க, கடல் போல் தானைக் கடுங் குரல் முரசம் கால் உறு கடலின் கடிய உரற, எறிந்து சிதைந்த வாள், 5 இலை தெரிந்த வேல், பாய்ந்து ஆய்ந்த மா, ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு படுபிணம் பிறங்க நூறி, பகைவர் கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே!- 10 நின்போல், அசைவு இல் கொள்கைய...
பதிற்றுப்பத்து - 70. வென்றிச் சிறப்பொடு பிற சிறப்புக்களையும் கூறி, வாழ்த்துதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பறைக் குரல் அருவி
களிறு கடைஇய தாள், மா உடற்றிய வடிம்பு, சமம் ததைந்த வேல், கல் அலைத்த தோள், வில் அலைத்த நல் வலத்து, 5 வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக் குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு, தீம் சுனை நீர் மலர் மலைந்து, மதம் செருக்கி, உடை நிலை நல் அமர் கடந்து, மறம் கெடுத்து, கடுஞ் சின வேந்தர் செம்மல் தொலைத்த 10 வலம் படு வான் கழல் வயவர் பெரு...
பதிற்றுப்பத்து - 71. வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
செந்தூக்கு
குறுந் தாள் ஞாயில்
அறாஅ யாணர் அகன் கண் செறுவின் அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து, செறு வினை மகளிர் மலிந்த வெக்கை, பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் அம்பண அளவை உறை குவித்தாங்கு, 5 கடுந் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின், அலந்தனர், பெரும! நின் உடற்றியோரே: ஊர் எரி கவர, உருத்து எழுந்து உரைஇ, போர் சுடு, ...
பதிற்றுப்பத்து - 72. மன்னவனது சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிறப்பும்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
உருத்து எழு வெள்ளம்
இகல் பெருமையின் படை கோள் அஞ்சார், சூழாது துணிதல் அல்லது, வறிது உடன் காவல் எதிரார், கறுத்தோர், நாடு; நின் முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து, மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் 5 நன்று அறி உள்ளத்துச் சான்றோர் அன்ன, நின் பண்பு நன்கு அறியார், மடம் பெருமையின்; துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை, நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்...
பதிற்றுப்பத்து - 73. வென்றிச் சிறப்பு
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
நிறம் திகழ் பாசிழை
உரவோர் எண்ணினும், மடவோர் எண்ணினும், பிறர்க்கு நீ வாயின் அல்லது, நினக்குப் பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே! ....கூந்தல் ஒள் நுதல் பொலிந்த நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும் 5 தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் .... .... .... .... ... ... ... மருதம் சான்ற மலர்தலை விளை வயல் செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் இரவும் பகலும் பாசிழை ...
பதிற்றுப்பத்து - 74. நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும் எடுத்துக் கூறுதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
நலம் பெறு திருமணி
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது, வேள்வி வேட்டனை, உயர்ந்தோர் உவப்ப; சாய் அறல் கடுக்கும் தாழ் இருங் கூந்தல், வேறு படு திருவின் நின் வழி வாழியர், கொடுமணம் பட்ட வினை மாண் அருங் கலம், 5 பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம், வரையகம் நண்ணி, குறும்பொறை நாடி, தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம் பொறி, கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின், ...
பதிற்றுப்பத்து - 75. வென்றிச் சிறப்பு
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
தீம் சேற்று யாணர்
இரும் புலி கொன்று, பெருங் களிறு அடூஉம், அரும் பொறி வய மான் அனையை-பல் வேல், பொலந் தார் யானை, இயல் தேர்ப் பொறைய!- வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து, நின் வழிப் படாஅர் ஆயின், நெல் மிக்கு, 5 அறை உறு கரும்பின் தீம் சேற்று யாணர், வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை, வன் புலம் தழீஇ மென்பால் தோறும் அரும் பறை வினைஞர் புல் ...
பதிற்றுப்பத்து - 76. வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
மா சிதறு இருக்கை
களிறுடைப் பெருஞ் சமம் ததைய, எஃகு உயர்த்து, ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று, முரசு கடிப்பு அடைய அருந் துறை போகி, பெருங் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும் பண்ணிய விலைஞர் போல, புண் ஒரீஇ, 5 பெருங் கைத் தொழுதியின் வன் துயர் கழிப்பி, இரந்தோர் வாழ நல்கி, இரப்போர்க்கு ஈதல் தண்டா மா சிதறு இருக்கை கண்டனென் செல்கு வந்தனென்-கால்க...
பதிற்றுப்பத்து - 77. படைப் பெருமைச் சிறப்பு
உழிஞை அரவம்
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
வென்று ஆடு துணங்கை
'எனைப் பெரும் படையனோ, சினப் போர்ப் பொறையன்?' என்றனிர்ஆயின்-ஆறு செல் வம்பலிர்!- மன்பதை பெயர, அரசு களத்து ஒழிய, கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின், 5 பண் அமை தேரும், மாவும், மாக்களும், எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே; கந்து கோளீயாது, காழ் பல முருக்கி, உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் ச...
பதிற்றுப்பத்து - 78. வென்றிச் சிறப்பு
விறலி ஆற்றுப்படை
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
பிறழ நோக்கு இயவர்
வலம் படு முரசின் இலங்குவன விழூஉம் அவ் வெளி அருவி உவ் வரையதுவே- சில் வளை விறலி! செல்குவை ஆயின், வள் இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து, மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி, 5 கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல, பல் பயன் நிலைஇய கடறுடை வைப்பின், வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் வில் பயில் இறும்பின், தகடூர் நூறி, பேஎ மன்ற பிறழ ...
பதிற்றுப்பத்து - 79. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து, வாழ்த்துதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
நிறம் படு குருதி
உயிர் போற்றலையே, செருவத்தானே; கொடை போற்றலையே, இரவலர் நடுவண்; பெரியோர்ப் பேணி, சிறியோரை அளித்தி; நின்வயிற் பிரிந்த நல் இசை கனவினும் பிறர் நசை அறியா-வயங்கு செந் நாவின், 5 படியோர்த் தேய்த்த ஆண்மை, தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப!- அனைய அளப்பு அருங்குரையை: அதனால், நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து, கொல் களிற்று யானை...
பதிற்றுப்பத்து - 80. மன்னவன் கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்
வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
புண்ணுடை எறுழ்த் தோள்
வால் மருப்பின் களிற்று யானை மா மலையின் கணம் கொண்டு, அவர் எடுத்து எறிந்த விறல் முரசம் கார் மழையின் கடிது முழங்க; சாந்து புலர்ந்த வியல் மார்பின், 5 தொடி சுடர் வரும் வலி முன் கை, புண்ணுடை எறுழ்த் தோள், புடையல்அம் கழல் கால், பிறக்கு அடி ஒதுங்காப் பூட்கை, ஒளி வாள், ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று, உரைஇ, 'இடுக திறையே, புரவு எ...
பதிற்றுப்பத்து - 81. காம வேட்கையில் செல்லாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்புக் கூறுதல்
முல்லை
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
நிழல் விடு கட்டி
உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின், வண்ணக் கருவிய, வளம் கெழு, கமஞ் சூல் அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து, கடுஞ் சிலை கழறி, விசும்பு அடையூ நிவந்து, காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொள, 5 களிறு பாய்ந்து இயல, கடு மா தாங்க, ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப, அரசு புறத்து இறுப்பினும் அதிர்விலர் திரிந்து, வாயில்...
பதிற்றுப்பத்து - 82. வென்றிச் சிறப்பு
காட்சி வாழ்த்து
ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
செந்தூக்கு
வினை நவில் யானை
பகை பெருமையின், தெய்வம் செப்ப, ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர், பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர் செல் சமம் தொலைத்த வினை நவில் யானை கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி, 5 வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல; மறவர் மறல; மாப் படை உறுப்ப; தேர் கொடி நுடங்க; தோல் புடை ஆர்ப்ப; காடுகை காய்த்திய நீடு நாள் இருக்கை இன்ன வைகல் ப...
பதிற்றுப்பத்து - 83. படைச் சிறப்பு
தும்பை அரவம்
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
பல் தோல் தொழுதி
கார் மழை முன்பின் கை பரிந்து எழுதரும் வான் பறைக் குருகின் நெடு வரி பொற்ப, கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு நெடுந் தேர் நுடங்கு கொடி அவிர்வரப் பொலிந்து, செலவு பெரிது இனிது, நிற் காணுமோர்க்கே: 5 இன்னாது அம்ம அது தானே-பல் மா நாடு கெட எருக்கி, நன் கலம் தரூஉம் நின் போர் அருங் கடுஞ் சினம் எதிர்ந்து, மாறு கொள் வேந்தர் ப...
பதிற்றுப்பத்து - 84. வென்றிச் சிறப்பு
வாகை
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
தொழில் நவில் யானை
எடுத்தேறு ஏய கடிப்புடை அதிரும் போர்ப்பு உறு முரசம் கண் அதிர்ந்தாங்கு, கார் மழை முழக்கினும், வெளில் பிணி நீவி, நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை, பார்வல் பாசறைத் தரூஉம் பல் வேல், 5 பூழியர் கோவே! பொலந் தேர்ப் பொறைய, மன்பதை சவட்டும் கூற்ற முன்ப! கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா; பல் மா பரந்த புலம் ஒன்று என்...
பதிற்றுப்பத்து - 85. முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
நாடு காண் நெடு வரை
நல் மரம் துவன்றிய நாடு பல தரீஇ, 'பொன் அவிர் புனைசெயல் இலங்கும் பெரும் பூண், ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்'- இட்ட வெளி வேல்'-முத்தைத் தம்' என, முன் திணை முதல்வர் போல நின்று, 5 தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின் கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை, சூடா நறவின் நாள் மகிழ் இருக்கை, அரசவை பணிய, அறம் புரிந்து வயங்கிய மற...
பதிற்றுப்பத்து - 86. மன்னவனது வன்மை மென்மைச் சிறப்புக் கூறுதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
வெந் திறல் தடக்கை
'உறல் உறு குருதிச் செருக்களம் புலவக் கொன்று, அமர்க் கடந்த வெந் திறல் தடக் கை வென் வேல் பொறையன்' என்றலின், வெருவர, வெப்புடை ஆடூஉச் செத்தனென்மன், யான்: நல் இசை நிலைஇய, நனந் தலை உலகத்து, 5 இல்லோர் புன்கண் தீர நல்கும் நாடல் சான்ற நயனுடை நெஞ்சின், பாடுநர் புரவலன், ஆடு நடை அண்ணல், கழை நிலை பெறாஅக் குட்டத்துஆயினும், புனல் பாய...
பதிற்றுப்பத்து - 87. மன்னவன் அருட் சிறப்பு
விறலி ஆற்றுப்படை
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
வெண் தலைச் செம் புனல்
சென்மோ, பாடினி! நன் கலம் பெறுகுவை- சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து, தெண் கடல் முன்னிய வெண் தலைச் செம் புனல் ஒய்யும் நீர் வழிக் கரும்பினும் பல் வேல் பொறையன் வல்லனால், அளியே. 5
பதிற்றுப்பத்து - 88. கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி, வாழ்த்துதல்
செந்துறைப் பாடாண் பாட்டு
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
கல் கால் கவணை
வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது, கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து, தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து, தம் பெயர் போகிய ஒன்னார் தேய, துளங்கு இருங் குட்டம் தொலைய, வேல் இட்டு; 5 அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து; பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று; நாம மன்னர் துணிய நூறி, கால் வல் புரவி அண்டர் ஓட்டி, சுடர் வீ வா...
பதிற்றுப்பத்து - 89. மன்னவனது நாடு காவற் சிறப்புக் கூறி, வாழ்த்துதல்
காவல் முல்லை
ஒழுகு வண்ணம்
செந்தூக்கு
துவராக் கூந்தல்
வானம் பொழுதொடு சுரப்ப, கானம் தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல, புள்ளும் மிஞிறும் மாச் சினை ஆர்ப்ப, பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது, பல் ஆன் நல் நிரை புல் அருந்து உகள, 5 பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின் பெரும் பல் யாணர்க் கூலம் கெழும, நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக- பல் வேல் இரும் பொறை! நின் கோல் செம்மையின், நாளின்...
பதிற்றுப்பத்து - 90. மன்னவனது தண்ணளியும், பெருமையும், கொடையும், சுற்றம் தழாலும், உடன் கூறி வாழ்த்துதல்
காட்சி வாழ்த்து
ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வலி கெழு தடக் கை
மீன் வயின் நிற்ப, வானம் வாய்ப்ப, அச்சற்று, ஏமம் ஆகி, இருள் தீர்ந்து இன்பம் பெருகத் தோன்றி, தம் துணைத் துறையின் எஞ்சாமை நிறையக் கற்று, கழிந்தோர் உடற்றும் கடுந் தூ அஞ்சா 5 ஒளிறு வாள் வய வேந்தர் களிறொடு கலம் தந்து, தொன்று மொழிந்து தொழில் கேட்ப, அகல் வையத்து பகல் ஆற்றி, மாயாப் பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர, 10 வாள் வலியுற...