topic
stringlengths
13
64
poems
listlengths
1
4
தோழி அறத்தொடு நிற்றல்
[ { "explanation": [ "என் தோழியாகிய தலைவி ஒளிதிகழ் முகம் கொண்டவள்.", "தழைத்த கூந்தலை உடையவள்.", "அவளது மேனியில் இருந்ததால் பெருமை பெற்றிருந்த அணிகலன்கள் இப்போது அவளை நெகிழச் செய்து கொண்டிருக்கின்றன.", "இது சாகடிக்காமல் சாகடித்துக் கொண்டிருக்கும் கொடிய நோய்.", "இதற்கு என்ன காரணம் என்ற...
தலைவியின் அன்பு மிகுதி
[ { "explanation": [ "முத்து மணி பொன் போன்றவற்றாலான அணிகலன்களை இழக்கலாம்.", "தேடி ஈட்டினால் அவை மீண்டும் வந்து சேர்ந்துவிடும்.", "சான்றாண்மை ஒழுக்கம் பிறர் வியக்கத்தக்க பெருமை நல்லியல்பு ஆகியவை குன்றிப்போனால் அவற்றை மீண்டும் தூக்கிப் புகழ்நிலையில் நிறுத்துதல் யாராலும் முடியாத பண்புகள்.", "...
மணம் நிகழ்ந்தமையைத் தோழி அறிவித்தல
[ { "explanation": [ "இரு பெரு வேந்தர்கள் தங்களுக்குள் இருந்த கருத்து மாறுபாட்டினால் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.", "அவர்களை ஒன்று சேர்க்க நினைத்த சான்றோர் போர்க்களத்துக்குச் சென்று அவர்களுக்கு அறிவுரை கூறும்போது எத்தகைய அச்சத்துடன் இருப்பாரோ அத்தகைய அச்சத்துடன் இருந்துகொண்டு என் உள்ளம் தாங்கிக்கொள...
தினைப்புனம் காத்த வகை
[ { "explanation": [ "யானை விளைந்த மூங்கில் நெல்லைக் கசக்கித் தின்னும்.", "அதன் முத்துப் போன்ற கொம்புகளுக்குக் கீழே அதன் கை தொங்கும்.", "அந்தக் கையைப் போல தினை விளைந்திருந்தது.", "உவமை நலம்", "விளைந்திருக்கும் தினைக்கதிர் யானையின் கைபோல் வளைந்திருக்கும்.", "விளைந்த கதிருக்கு மே...
சுனையில் நீராடல்
[ { "explanation": [ "அள்ள அள்ளக் குறையாத கடலிலிருந்து மேகமானது நீரை முகந்துகொண்டு காற்றால் உந்தப்பட்டு வானில் மிதந்து அல்லாடிக்கொண்டிருந்தது.", "வீசிய பெருங்காற்றில் தள்ளாடிய பறவைகள் தம் இருப்பிடங்களுக்குச் சென்றுகொண்டிருந்தன.", "முரசு அதிர்வது போல் மேகங்கள் இனிமையாக முழங்கின.", "ஏராளமாகச...
பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்தல்
[ { "explanation": [ "பூக்களைப் பறித்துவந்து குவித்து விளையாடுவது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று.", "குவித்த பூக்களைத் தலையில் சூடி ஒப்பனை செய்து கொள்ளுதல் மாலையாகக் கட்டி அணிந்து கொள்ளுதல் தழையோடு கூடிய பூக்களைக் கொண்டு தழையாடை செய்து உடுத்திக் கொள்ளுதல் முதலானவையும் பூ விளையாட்டில் அடங்கும்.", ...
தழை உடுத்து, மாலை சூடி, அசோகின் நிழலில் இருத்தல்
[ { "explanation": [ "கூறப்பட்ட வகைவகையான பூக்களைப் பாறையில் குவித்தோம்.", "மழைநீர் பெய்து கழுவிய பாறைமேல் குவித்தோம்.", "அந்தப் பூக்களின் மேல் எங்களுகுக் கொள்ளை ஆசை மால்.", "தினைப்புனத்தில் பறவைகளின் ஒலி.", "நாங்களும் அவ்வப்போது பெரிய உயிர்ப்புக்குரல் கொடுத்துப் பறவைகளை ஓட்டினோம்.",...
தலைவனது வருகை
[ { "explanation": [ "ஒருவன் வந்தவன்", "அவன் தலைமயிர் சுருண்டிருந்தது.", "எண்ணெய் தடவிப் பளபளப்பாக இருந்தது.", "வயிரம் பாய்ந்த தகரக் கட்டையிலிருந்து வடித்தெடுத்த செண்டை மணம் கமழும்படி தடவியிருந்தான்.", "மழையால் ஈரமாயிருந்த தலைமயிரை விரல்களை விட்டுப் பிரித்து உலர்த்திக் கொண்டிருந்தான்...
தலைவனுடன் வந்த நாய்க்குத் தோழி முதலியோர் அஞ்சி வேறிடம் செல்லுதல்
[ { "explanation": [ "அவன் ஈகைக்கழலில் வாகை நடை போட்டு நடந்துவதான்.", "அவனது கால்களில் கழல்.", "அது அவனது உயர்ந்த கொடைத்திறனின் அடையாளச் சின்னம்.", "நடந்து வரும்போது அதில் ஒரு பொலிவு.", "போரில் பகைவரைப் பாழாக்கும் திறப்பகட்டும் அதில் தென்பட்டது.", "அவனைச் சூழ்ந்து இளைஞர்கள் வந்...
தலைவன் மகளிரிடம் கெடுதி வினாவுதல
[ { "explanation": [ "அவன் பசுவைப் பார்த்த காளை ஆனான்.", "அவனைப் பார்த்ததும் நாங்கள் நடுங்கினோம்.", "எழுந்து நடக்க முடியாமல் தள்ளாடினோம்.", "நெஞ்சு படபடத்தது. மிரண்டு பார்த்துக்கொண்டே வேறிடம் நோக்கி நகர்ந்தோம்.", "அவன் நிலையோ மாறுபட்டிருந்தது.", "விரும்பத்தக்க இனிய நிலத்தில் பச...
தலைவன் தலைவியின் சொல்லை எதிர் பார்த்து நிற்றல்
[ { "explanation": [ "பேசக்கூடாதா?.", "மென்மைத்தன்மை உள்ளவர்களே!", "கெடுதியை விடுவித்துச் சொல்லாவிட்டாலும் வாய்ச்சொல் தரலாமே.", "பேசினால் உங்களுக்குத் தீங்கு நேர்ந்துவிடுமோ? என்றான்" ], "poem": [ "கெடுதியும் விடீஇ ராயி னெம்மொடுசொல்லலும் பழியோ மெல்லிய வீரென" ] }, { ...
யானை சினத்துடன் புனத்திற்கு வர, மகளிர் நடுங்கியமை
[ { "explanation": [ "அப்போது மதம் கொண்ட ஆண்யானை ஒன்று சிங்கம் போல அங்கு வந்தது.", "கதிர் அறுத்தபின் உள்ள தினைத்தட்டைப் புல்லை அறுத்து வேயப்பட்ட குடிசை.", "அதன் தலைவி மனையோள்.", "மானைப்போல் மருண்டு பார்த்துக் கொண்டே தன் கணவனுக்குத் தேனில் பிழிந்தெடுத்த தேறல் கள்ளை ஊரெல்லாம் உறங்கும் நேரத்த...
யானையைத் தலைவன் அம்பு எய்து துரத்துதல்
[ { "explanation": [], "poem": [ "லுடுவுறும் பகழி வாங்கிக் கடுவிச", "யண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற்புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப்புள்ளி வரிநுதல் சிதைய நில்லாதயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவே" ] } ]
நீரிலிருந்து எடுத்துத் தலைவன் காப்பாற்றியமை
[ { "explanation": [ "அவன் யானை முகத்தில் அம்பு எய்தான்", "நீண்ட கோலில் விண்மீன்போல் முனையுள்ள அம்பைக் கடுவிசையோடு அவன் எய்தான்.", "களிற்றின் அழகிய முகத்தில் அது பாய்ந்தது.", "அப்புண்ணிலிருந்து குருதி பாய்ந்து ஒழுகியது.", "அதன் நெற்றியிலிருந்த புள்ளிகளும் வரிக்கோடுகளும் சிதைந்தன.", ...
தலைவி தலைவனுடன் கூடிய நிலை
[ { "explanation": [ "நாணமும் அச்சமும் கொண்டு நான் பிரிந்துவிட்டேன். அது மயிலாடும் பாறை.", "சுனையில் பலாப்பழத் தேன் ஒழுகியது.", "அச்சமும் நாணமும் ஓடிப்போக வேண்டிய இடத்துக்கு ஓடிப் போய்விட்டன.", "ஒய் என்று அவள் நெஞ்சை அவன் தன் நெஞ்சில் அணைத்துத் தழுவிக்கொண்டான்.", "அவள் பிரிய முயன்றாள...
இருவரும் பகற்பொழுதைப் போக்கிய வகை
[ { "explanation": [ "ஊரறியத் திருமணம் செய்துகொள்வேன் இல்லறத்தில் விருந்தோம்பல் என்னும் தெப்பத்தில் ஏறி இன்பமாகச் செல்லலாம் என்றான்.", "எங்களுடைய உள்ளக் கிடக்கையை அவன் படித்தான்.", "எங்களைத் தேற்றினான்.", "என்ன சொல்லித் தேற்றினான்?", "திருமண விழாவை ஊர்த்திருவிழாவாக நடத்துவேன்.", ...
மாலைக்காலத்தின் வருகை
[ { "explanation": [ "பொழுது போனபின் இரவும் பகலும் மால்மயங்கம் கொள்ளும் மாலைக்காலம் வந்தது.", "மான்கூட்டம் மரத்தடியில் படுத்துக்கொண்டு அசைபோட்டது.", "பசுக்கள் கன்றுகளுக்காகக் கனைத்துக்கொண்டே மன்று திரும்பின.", "அன்றில்கள் பெண்ணைமரத்தில் இருந்துகொண்டு அகவின. அக்குரல் கொம்பூதுவது போல் இருந்த...
தலைவன் பெயர்ந்த நிலை
[ { "explanation": [ "நாடறியும் திருமணம்", "நெருக்கமாகக் கட்டிய மாலையைப் போட்டு உன் பெற்றோர்கள் உன் முன்கைகளைப் பற்றி எனக்குத் தர நான் நாடறியும் நல்ல திருமணம் செய்துகொள்ளும் விழா எடுப்பேன். சிலநாள் கலங்காதிருப்பாயாக என்றான்.", "அன்பு மொழிகள் அனைத்தையும் சொன்னான்.", "பசுவுக்குத் துணையாக வரு...
தலைவன் வரும் வழியின் அருமை நினைந்து, தலைவி கலங்குதல்
[ { "explanation": [ "அன்று முதல் இரவில் வருதல் அவனுக்கு வழக்கமாயிற்று", "பின்னர் நாள்தோறும் இரவில் வந்து கெஞ்சினான்", "அன்று என்னை அடைந்த அதே ஆவலோடு ஒவ்வொரு நாளும் என்னிடம் வந்து என்னைத் தனக்குத் தரும்படி கெஞ்சினான்.", "மாலைபோல் தொடர்ந்து நெருங்கிக் கேட்டான்." ], "poem": [ "...
இரவில் தலைவன் வரும் வழியின் அருமை
[ { "explanation": [ "இவள் கலங்குவதெல்லால் அவன் வரும் வழியில் இடர்ப்பாடுகள் உள்ளனவே என்பதுதான்.", "குகையில் பதுங்கும் புலி சிங்கம் கரடி முட்டித் தள்ளும் கொம்புகளையுடைய காட்டாட்டுக் கடா எதிர்த்துப் போரிடும் ஆண்யானை போன்றவற்றைத் தாக்கி அழிக்கும் வெஞ்சினம் அவனுக்கு இருந்தது.", "என்றாலும் இடி பேய் இ...