id int64 1 109 | poem stringlengths 9 25 | explanation stringlengths 3 102 |
|---|---|---|
1 | அறஞ் செய விரும்பு | நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள். |
2 | ஆறுவது சினம் | கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும். |
3 | இயல்வது கரவேல் | உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு. |
4 | ஈவது விலக்கேல் | ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே. |
5 | உடையது விளம்பேல் | உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே. |
6 | ஊக்கமது கைவிடேல் | எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது. |
7 | எண் எழுத்து இகழேல் | கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும். |
8 | ஏற்பது இகழ்ச்சி | இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது. |
9 | ஐயம் இட்டு உண் | யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும். |
10 | ஒப்புரவு ஒழுகு | உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள். |
11 | ஓதுவது ஒழியேல் | நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு. |
12 | ஔவியம் பேசேல் | ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே. |
13 | அஃகஞ் சுருக்கேல் | அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே. |
14 | கண்டு ஒன்று சொல்லேல் | கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே. |
15 | ஙப் போல்வளை | 'ங' |
16 | சனி நீராடு | சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும். |
17 | ஞயம் பட உரை | கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு. |
18 | இடம் பட வீடு எடேல் | உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே. |
19 | இணககம்அறிந்து இணங்கு | ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்கள் உடயவர்களா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும். |
20 | தந்தை தாய்ப் பேண் | உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று. |
21 | நன்றி மறவேல் | ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே. |
22 | பருவத்தே பயிர் செய் | எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும். |
23 | மண் பறித்து உண்ணேல் | பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே. |
24 | இயல்பு அலாதன செயேல் | நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே. |
25 | அரவம்ஆடேல் | பாம்புகளை பிடித்து விளையாடாதே. |
26 | இலவம் பஞ்சில் துயில் | 'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு. |
27 | வஞ்சகம் பேசேல் | படச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே. |
28 | அழகு அலாதன செயேல் | இழிவான செயல்களை செய்யாதே. |
29 | இளமையில் கல் | இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை கற்க வேண்டும். |
30 | அரனை மறவேல் | தருமத்தை எப்போதும் மறவாமல் செய். |
31 | அனந்தல் ஆடேல் | மிகுதியாக துங்காதே. |
32 | கடிவது மற | யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே. |
33 | காப்பது விரதம் | தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும். |
34 | கிழமைப் பட வாழ் | உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ. |
35 | கீழ்மை அகற்று | இழிவான குணஞ் செயல்களை நீக்கு. |
36 | குணமது கைவிடேல் | நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே. |
37 | கூடிப்பிரியேல் | நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே. |
38 | கெடுப்பது ஒழி | பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே. |
39 | கேள்வி முயல் | கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய். |
40 | கைவினை கரவேல் | உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும். |
41 | கொள்ளை விரும்பேல் | பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே. |
42 | கோதாட்டு ஒழி | குற்றமான விளையாட்டை விட்டு விடு. |
43 | கௌவை அகற்று | வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு. |
44 | சக்கர நெறி நில் | அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். |
45 | சான்றோர் இனத்திரு | அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு. |
46 | சித்திரம் பேசேல் | பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே. |
47 | சீர்மை மறவேல் | புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே. |
48 | சுளிக்கச் சொல்லேல் | கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர். |
49 | சூது விரும்பேல் | ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே. |
50 | செய்வன திருந்தச் செய் | செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும். |
51 | சேரிடம் அறிந்து சேர் | நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு. |
52 | சை எனத் திரியேல் | பெரியோர் 'ச்சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே. |
53 | சொல் சோர்வு படேல் | பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே. |
54 | சோம்பித் திரியேல் | முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே. |
55 | தக்கோன் எனத் திரி | பெரியோர்கள் உன்னைத் தக்கவன் என்று புகழும்படி நடந்துக்கொள். |
56 | தானமது விரும்பு | யாசிப்பவர்களுக்கு தானம் செய். |
57 | திருமாலுக்கு அடிமை செய் | நாராயணமூர்த்திக்கு தொண்டு செய். |
58 | தீவினை அகற்று | பாவச் செயல்களைச் செய்யாமல் இரு. |
59 | துன்பத்திற்கு இடம் கொடேல் | முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே. |
60 | தூக்கி வினை செய் | ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும். |
61 | தெய்வம் இகழேல் | கடவுளை பழிக்காதே. |
62 | தேசத்தோடு ஒத்து வாழ் | உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ். |
63 | தையல் சொல் கேளேல் | மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே. |
64 | தொண்மை மறவேல் | பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே. |
65 | தோற்பன தொடரேல் | ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே. |
66 | நன்மை கடைப்பிடி | நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும். |
67 | நாடு ஒப்பன செய் | நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய். |
68 | நிலையில் பிரியேல் | உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே. |
69 | நீர் விளையாடேல் | வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே. |
70 | நுண்மை நுகரேல் | நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே. |
71 | நூல் பல கல் | அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி. |
72 | நெல் பயிர் விளை | நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ். |
73 | நேர்பட ஒழுகு | ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட. |
74 | நைவினை நணுகேல் | பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே. |
75 | நொய்ய உரையேல் | பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே. |
76 | நோய்க்கு இடம் கொடேல் | மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே. |
77 | பழிப்பன பகரேல் | பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே. |
78 | பாம்பொடு பழகேல் | பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே. |
79 | பிழைபடச் சொல்லேல் | குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே. |
80 | பீடு பெற நில் | பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில். |
81 | புகழ்ந்தாரைப் போற்றி வாழ் | உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ். |
82 | பூமி திருத்தி உண் | விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண். |
83 | பெரியாரைத் துணைக் கொள் | அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள். |
84 | பேதமை அகற்று | அறியாமையை போக்கு. |
85 | பையலோடு இணங்கேல் | அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே. |
86 | பொருள்தனைப் போற்றி வாழ் | பொருள்களை வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ். |
87 | போர்த் தொழில் புரியேல் | யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே. |
88 | மனம் தடுமாறேல் | எதனாலும் மனக்கலக்கம் அடையாதே. |
89 | மாற்றானுக்கு இடம் கொடேல் | பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே. |
90 | மிகைபடச் சொல்லேல் | சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே. |
91 | மீதூண் விரும்பேல் | மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே. |
92 | முனைமுகத்து நில்லேல் | எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே. |
94 | மெல்லி நல்லாள் தோள் சேர் | பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ். |
95 | மேன் மக்கள் சொல் கேள் | நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட. |
96 | மை விழியார் மனை அகல் | விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில். |
97 | மொழிவது அற மொழி | சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல். |
98 | மோகத்தை முனி | நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு. |
99 | வல்லமை பேசேல் | உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே. |
100 | வாது முற்கூறேல் | பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே. |
101 | வித்தை விரும்பு | கல்வியாகிய நற்பொருளை விரும்பு. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.